திருப்புகழ் 1127 ஆராதனர் ஆடம்பர  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1127 ArAdhanarAdambara  (common)
Thiruppugazh - 1127 ArAdhanarAdambara - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த
     தானாதன தானந் தனத்த ...... தனதான

......... பாடல் .........

ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
     மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும்

ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
     மாமாறெரி தாமிந் தனத்து ...... மருளாதே

நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த
     நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக

நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி
     நேரேபர மாநந்த முத்தி ...... தரவேணும்

வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
     வேதாளச மூகம் பிழைக்க ...... அமராடி

வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க
     வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும்

வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து
     வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா

வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து
     வானோர்பரி தாபந் தவிர்த்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆராதனர் ஆடம் பரத்து ... பூஜை செய்வோரது ஆடம்பரத்
தோற்றத்தைக் கண்டும்,

மாறாது சவாலம் பனத்தும் ... இடைவிடாது செய்யும் ஜபத்திலுள்ள
ஆசையினாலும்,

ஆவாகன மாமந் திரத்து மடலாலும் ... தெய்வம் எழுந்தருள
வேண்டிச் செய்யும் சிறந்த தகட்டு யந்திரங்களைக் கண்டும்,

ஆறார்தெச மாமண் டபத்தும் ... (ஆறும் பத்தும் கூடிய) பதினாறு
கால்கள் கொண்ட பெரிய மண்டபக் காட்சியாலும்,

வேதாகம மோதுந் தலத்தும் ... வேதம், ஆகமம் இவை முழங்கும்
இடத்தைக் கண்டும்,

ஆமாறு எரி தாம் இந்தனத்து மருளாதே ... யாகங்களுக்கு
வேண்டிய நெருப்பில் இடும் சமித்துக்களைக் கண்டும் பிரமித்து
அவற்றில் மயங்காமல்,

நீராளக நீர்மஞ்சனத்த ... (அடியார்களின்) கண்ணீர் பெரிதாகப்
பெருகும் அபிஷேகத்தைக் கொள்பவனே,

நீள் தாரக ... சிறப்புமிக்க ஓம் என்னும் தாரக மந்திரத்துக்கு உரியவனே,

வேதண்ட மத்த ... மலைகளுக்கு உரியவனே,

நீநானற வேறின்றி நிற்க ... நீ என்றும் நான் என்றும் உள்ள த்வைத
பாவம் நீங்க அத்வைத நிலையைப் பெற

நியமாக நீவாவென நீயிங் கழைத்து ... அன்னியம் இல்லாமல்
உறவோடு நீ வா என்று இங்கு நீ என்னை அழைத்து

பாராவர ஆநந்த சித்தி ... கடல் போன்று பெரிதான ஆனந்த
நிலையையும்,

நேரேபரமாநந்த முத்தி தரவேணும் ... உடனே பரமானந்தமாகிய
முக்தி நிலையையும் தந்தருள வேண்டுகிறேன்.

வீராகர ... வீரத்துக்கு இருப்பிடமானவனே,

சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க ... துர்க்கையும், சக்ர
வியூகமாக வகுக்கப்பட்டு நிற்கும் காவல் கணங்களான பூதங்களும் மகிழ,

வேதாளசமூகம் பிழைக்க அமராடி ... பேய்க் கூட்டங்கள்
பிணங்களை உண்டு பிழைக்கும்படியும், போர் புரிந்து,

வேதாமுறை யோவென்றரற்ற ... பிரமன் அபயம் என்று
முறையிட்டுக் கூச்சலிட,

ஆகாசகபாலம் பிளக்க ... அண்ட கூடம் பிளவுபட,

வேர்மாமர மூலந் தறித்து ... சூரன் மாயமாக நின்ற மாமரத்தின்
அடிவேரையே வெட்டி,

வடவாலும் வாராகர மேழுங் குடித்து ... வடவாக்கினியையும்*,
நிலைத்த சமுத்திரங்கள் ஏழையும் குடித்து,

மாசூரொடு போரம் பறுத்து ... பெரிய சூரனோடு செய்த போரிலே
அவன் செலுத்திய அம்புகளை அறுத்தெறிந்து,

வாணாசன மேலுந் துணித்த கதிர்வேலா ... பாணங்கள் தங்கும்
இடமான வில்லையும் கூடவே வெட்டித் தள்ளிய ஒளி வேலனே,

வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து ...
தேவலோகத்தை அரசாளும்படிக்கு வாருங்கள், வாருங்கள், வாருங்கள்
என்று அழைத்து,

வானோர்பரிதாபந் தவிர்த்த பெருமாளே. ... தேவர்களின்
பரிதபிக்கத்தக்க துக்கநிலையை நீக்கிய பெருமாளே.


* பிரளய காலத்தில் உலகம் அழியுமுன் வட துருவத்திலிருந்து வரும் நெருப்பு
அலையை 'வடவாக்கினி' என்பர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.298  pg 3.299  pg 3.300  pg 3.301 
 WIKI_urai Song number: 1130 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1127 - ArAdhanar Adambara (common)

ArAdhanar Adambaraththu mARAdhu savAlam banaththu
     mAvAgana mA manthi raththu ...... madalAlum

ARArdhesa mAmaNda paththum vEdhAgama mOdhun thalaththum
     AmAReri dhAmin dhanaththu ...... maruLAdhE

neerALaga neerman janaththa needAraga vEdhaNda maththa
     neenAnaRa vERindri niRka ...... niyamAga

neevAvena neeying azhaiththu pArAvara Anandha sidhdhi
     nErE paramAnandha muththi ...... tharavENum

veerAkara chAmundi chakra pArAgaNa bUthan kaLikka
     vEthALa samUgam pizhaikka ...... amarAdi

vEdhA muRaiyO endraratra AkAsa kapAlam piLakka
     vErmAmara mUlan thaRiththu ...... vadavAlum

vArAgaram Ezhum kudiththu mAsUrOdu pOram baRuththu
     vANAsana mElun thuNiththa ...... kadhirvElA

vAnAd arasALum padikku vAvAvena vAven drazhaiththu
     vAnOr parithApan thavirththa ...... perumALE.

......... Meaning .........

ArAdhanar Adambaraththu: In the ostentatious ways people make their offerings during worship,

mARAdhu savAlam banaththum: in their continuous and obsessive meditations,

mAvAgana mA manthi raththu madalAlum: in the various yantras (metal sheets) upon which the deities are invoked,

ARArdhesa mAmaNda paththum: in the grand display of the prayer hall with sixteen stone pillars,

vEdhAgama mOdhun thalaththum: in then loud chanting of the VEdAs and AgamAs

AmAReri dhAmin dhanaththu maruLAdhE: in the heaps of pyres (samiththu) offered to burn in the sacrifices - in none of these You are awestruck or carried away.

neerALaga neerman janaththa: You are delighted to bathe in the abundant tears of ecstasy (from Your devotees)!

needAraga vEdhaNda maththa: You are elated at the chanting of the primordial PraNava ManthrA, OM!

neenAnaRa vERindri niRka: In order that the concept of You and Me (as duality-dwaitham) is gone and Oneness (adhwaitham) is achieved,

niyamAga neevAvena neeying azhaiththu: You should call me here towards You without any differentiation,

pArAvara Anandha sidhdhi: offer me the blissful heaven as wide as the ocean and

nErE paramAnandha muththi tharavENum: immediately bestow on me the Supreme joy of Liberation!

veerAkara: You are the seat of valour!

chAmundi chakra pArAgaNa bUthan kaLikka: Mother Durga and the multitude of Her armies (bUthaganAs), strategically assembled, were delighted;

vEthALa samUgam pizhaikka amarAdi: and the herd of (corpse-eating) fiends had a hey-day when You fought in the battlefield!

vEdhA muRaiyO endraratra: BrahmA screamed in awe and sought Your refuge;

AkAsa kapAlam piLakka: the skies hovering the worlds were shattered;

vErmAmara mUlan thaRiththu: the mango tree, in which SUran disguised himself, was uprooted;

vadavAlum vArAgaram Ezhum kudiththu: the vadavAgni* and the seven seas were completely swallowed;

mAsUrOdu pOram baRuththu: in the battle with mighty SUran, all his arrows were chopped;

vANAsana mElun thuNiththa kadhirvElA: and, in addition, his bow, the source of the arrows, was lanced by Your dazzling Spear!

vAnAd arasALum padikku vAvAvena vAven drazhaiththu: To rule their Celestial land, You beckoned the DEvAs again and again

vAnOr parithApan thavirththa perumALE.: and redressed their misery, Oh Great One!


* vadavAgni is the avalanche of fire supposed to come from the north pole to devour the entire world at the time of final destruction.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1127 ArAdhanar Adambara - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]