திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1115 மக்கள் ஒக்கல் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1115 makkaLokkal (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன ...... தனதான ......... பாடல் ......... மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர் மற்றுமுற் றக்குரவ ...... ரனைவோரும் வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு மட்டுமற் றுப்பெருகு ...... மடியாரும் புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது பொய்க்குமெய்க் குச்செயலு ...... முருகாதே புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு புத்திமெத் தத்தருவ ...... தொருநாளே செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு செக்கமுற் றச்சலமு ...... மதிசூடி சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு சித்தமுத் திச்சிவமு ...... மருள்வோனே கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை கொத்தினொக் கக்கொலைசெய் ...... வடிவேலா கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது குத்திவெட் டிப்பொருத ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்கத் துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும் ... குழந்தைகள், சுற்றத்தார், மனைவி, பக்கத்தில் நிறைந்துள்ள சகோதரர்கள், மேலும் உள்ள குரு முதலிய பெரியோர்கள் எல்லோரும், வைத்த செப்பிற் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்றுப் பெருகும் அடியாரும் ... (நான்) சேகரித்து வைத்த செப்புக் காசுகளும், ரத்தினம் முத்தால் ஆன அணிகலன்களும், இவை அளவு நீங்கலாக (என்னுடன் வராது ஒழிய), திரண்டு கூடுகின்ற அடியார்களும், புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்கப் புகுது ... ஒன்றாகப் புகுந்து துக்கம் கொண்டு, நெருப்பு கொழுந்து விட்டு எரிய, (உடலைச் சுடு காட்டில்) வைக்கப் போகின்ற போது, பொய்க்கு மெய்க்குச் செயலும் உருகாதே ... பொய்யான (நிலையில்லாத) இந்த உடலின் பொருட்டு என் செய்கைகள் ஈடுபட்டு உருகாமல், புஷ்பம் இட்டுக் கருணை நல் பதத்தைப் பரவு புத்தி மெத்தத் தருவது ஒரு நாளே ... பூக்களை இட்டுப் பூஜித்து கருணைக்கு இருப்பிடமான உனது திருவடிகளை நான் போற்றும் அறிவை நீ எனக்கு நிரம்பக் கொடுக்கும் ஒரு நாள் ஏற்படுமோ? செக்கர் கற்றைச் சடையில் மிக்க கொக்கின் சிறகு செ(க்)கம் உற்றச் சலமும் மதி சூடி ... செந்நிறமுள்ள திரண்ட சடையில் நிரம்ப கொக்கின் இறகையும், இப்பூமியில் வரும் கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபிரானுக்கு, சித்தம் உற்றுத் தெளிய மெத்த மெத்தத் திகழு(ம்) சித்த முத்திச் சிவமும் அருள்வோனே ... அவரது மனதில் நன்கு பொருந்தித் தளிவுறுமாறு, மிக மிக நன்றாக விளங்கும் திடமான முக்தி நிலையாகிய நன்மைப் பொருளை அருளியவனே, கொக்கு உறுப்புக் கொடு மை நிற்கும் வட்டத்து அசுரை கொத்தின் ஒக்கக் கொலை செய் வடிவேலா ... மாமரத்தின் உறுப்புகளைக் கொண்டு கரிய கடலாகிய வட்டத்தில் நின்ற சூரனையும் மற்ற அசுரர்களையும் கொத்தைப் போல (ஒரே தடவையில்) அழித்த கூரிய வேலை ஏந்தியவனே, கொற்றம் வெற்றிப் பரிசை ஒட்டி எட்டிச் சிறிது குத்தி வெட்டிப் பொருத பெருமாளே. ... வீரமும், வெற்றியும் கொண்ட கேடயத்துடன், அருகில் நின்றும், தூரத்தில் நின்றும், சிலரை (வேலால்) குத்தியும், (சிலரை) வாளால் வெட்டியும் சண்டை செய்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.266 pg 3.267 pg 3.268 pg 3.269 WIKI_urai Song number: 1118 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1115 - makkaL okkal (common) makkaLok katRerivai pakkamik kaththuNaivar matRumut Rakkurava ...... ranaivOrum vaiththasep piRpaNamum rathnamuth thiRpaNiyu mattumat Rupperuku ...... madiyArum pukkuthuk kiththerikaL thaththavaik kappukuthu poykkumeyk kuccheyalu ...... murukAthE pushpamit tukkaruNai naRpathath thaipparavu puththimeth thaththaruva ...... thorunALE sekkarkat Raicchadaiyil mikkakok kiRchiRaku sekkamut Racchalamu ...... mathicUdi siththamut RuththeLiya meththameth thaththikazhu siththamuth thicchivamu ...... maruLvOnE kokkuRup pukkodumai niRkumvat taththasurai koththinok kakkolaisey ...... vadivElA kotRavet Ripparisai yottiyet ticchiRithu kuththivet tipporutha ...... perumALE. ......... Meaning ......... makkaL okkal therivai pakka mikkath thuNaivar matRum utRa kuravar anaivOrum: The children, the relatives, the wife, the brothers standing by and other elders like the master, vaiththa seppiR paNamum rathnam muththil paNiyum mattum atRup perukum adiyArum: along with my collection of copper coins and the jewels embedded with gems and pearls, in addition to (whatever that would never accompany me) a large group of my servants pukku thukkiththu erikaL thaththa vaikkap pukuthu: have all assembled together, beginning to grieve; as they place my body on the crematory pyre consigning it to leaping flames, poykku meykkuc cheyalum urukAthE: I do not wish to melt down from attachment to this myth of a body; pushpam ittuk karuNai nal pathaththaip paravu puththi meththath tharuvathu oru nALE: will there be a day when You will kindly fill me with an abundance of intellect so that I could worship You, offering flowers and praising Your hallowed and compassionate feet? sekkar katRaic chadaiyil mikka kokkin siRaku se(k)kam utRac chalamum mathi cUdi: On His reddish and dense matted hair, He wears plenty of feathers of the crane, River Gangai that flows down to the earth and the crescent moon; to that Lord SivA, siththam utRuth theLuiya meththa meththath thikazhu(m) siththa muththic chivamum aruLvOnE: imparting into His mind lucidly, You preached, with grace, the most benevolent principle of ultimate liberation, that stands very firm, Oh Lord! kokku uRuppuk kodu mai niRkum vattaththu asurai koththin okkak kolai sey vadivElA: When he assumed the disguise of a mango tree, with all its limbs intact, and hid inside the dark sea, You surrounded the demon SUran and his clan annihilating them in one bunch with Your sharp spear, Oh Lord! kotRam vetRip parisai otti ettis siRithu kuththi vettip porutha perumALE.: With Your valorous and triumphant shield, You entered the battlefield to fight, at times approaching the enemies very closely and some times remaining at a distance, so that a few were pierced with the spear and some were beheaded with the sword, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |