திருப்புகழ் 1114 தத்துவத்துச் செயல்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1114 thaththuvaththuchcheyal  (common)
Thiruppugazh - 1114 thaththuvaththuchcheyal - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
     தத்தனத் தத்ததன ...... தனதான

......... பாடல் .........

தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு
     சத்துவிட் டப்படிபொ ...... லடியேனுஞ்

சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி
     சத்துவத் தைப்பிரிய ...... விடும்வேளை

சுத்தமுத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு
     தொக்குசற் றுக்கடையன் ...... மிடிதீரத்

துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி
     சுற்றவிட் டுக்கடுகி ...... வரவேணும்

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய
     வெற்றிசத் திக்கரக ...... முருகோனே

வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல
     விட்டபச் சைச்சரண ...... மயில்வீரா

கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்
     கச்சியப் பர்க்கருள்செய் ...... குருநாதா

கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்
     கற்பினுக் குற்றுபுணர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஒட்டில் பட்டக் குருகு சத்து விட்டப்படி தத்துவத்துச்
செயலொடு பொல் அடியேனும்
... கண்ணியில் அகப்பட்ட பறவை
தன் சக்தியை இழந்து விட்டது போல், தத்துவச் செயல்களால்
அடியேனாகிய நானும் ஒடுங்கி,

சச்சில் உற்றுப் படியில் விட்டு விட்டுக் குளறி ... இந்தப் பூமியில்
பதர் போல் பயனற்றவனாக ஆகி தடுமாற்றம் உள்ள பேச்சுக்களைப் பேசி,

சத்துவத்தைப் பிரிய விடும் வேளை ... உண்மைப் பொருளை விட்டு
விலகிப் போகும் போதெல்லாம்,

சுத்த முத்தப் பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று
கடையன் மிடி தீர
... பரிசுத்தமான வீட்டுப் பேற்றை அடைந்துள்ள
சிறந்த பக்தர்களோடு (என்னை) ஒன்று கூட்டிச் சேர்த்து, தயை செய்து
கடையவனாகிய எனது வறுமை தொலைய,

துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி சுற்ற விட்டுக்
கடுகி வரவேணும்
... பவளம், முத்து இவைகளின் நிறம் கொண்ட
பாதங்களை உடைய, பச்சை நிறமானதும், வெற்றியே கொண்டதுமான
குதிரையாகிய மயிலை, சுழல்வது போல வேகமாகச் செலுத்தி வந்தருள
வேண்டும்.

வித்தக அத்திப் பவள தொப்பை அப்பற்கு இளைய ... ஞானம்
பொருந்திய யானை, பவள நிறம் கொண்ட பெரு வயிற்றை உடைய
அண்ணல் கணபதிக்குத் தம்பியே,

வெற்றி சத்திக் கர அக முருகோனே ... வெற்றி பொருந்திய
வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகனே,

வெற்பும் எட்டு திசையும் வட்டம் இட்டுச் சுழல விட்ட பச்சைச்
சரண மயில் வீரா
... கிரெளஞ்ச மலையும் எட்டு திக்குகளும்
வட்டமாகச் சுற்றிச் சுற்றிச் சுழலும்படிச் செய்த பச்சை நிறமுள்ள
தோகையைக் கொண்ட மயில் வீரனே,

கத்தர் நெட்டுச் சடையர் முக்க(ண்)நக்கக் கடவுள் கச்சி
அப்பர்க்கு அருள்செய் குரு நாதா
... தலைவர், நீண்ட சடையை
உடையவர், (சூரியன், சந்திரன், அக்னி என்ற) முன்று கண்களை
உடையவர், (வானமே ஆடையாக உடுத்திய) திகம்பரராகிய கடவுள்
காஞ்சியில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உபதேசம் செய்த குருநாதனே,

கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்துக் குறவர் கற்பினுக்கு
உற்று புணர் பெருமாளே.
... கற்பக மரமுள்ள தேவநாட்டுக்
கிளியாகிய தேவயானைக்கு மனம் உருகியவனே, உன் பதத்தில்
ஈடுபட்டு குறவர்கள் வளர்த்த கற்புடைய வள்ளியை அடைந்து,
அவளை அணைந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.264  pg 3.265  pg 3.266  pg 3.267 
 WIKI_urai Song number: 1117 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1114 - thaththuvaththuch cheyal (common)

thaththuvath thuchcheyalo dottilpat takkuruku
     saththuvit tappadipo ...... ladiyEnum

sachchilut Ruppadiyil vittuvit tukkuLaRi
     saththuvath thaippiriya ...... vidumvELai

suththamuth thappathavi petRanaR paththarodu
     thokkusat Rukkadaiyan ...... miditheerath

thuppumuth thuchcharaNa pachchaivet Rippuravi
     sutRavit tukkaduki ...... varavENum

viththakath thippavaLa thoppaiyap paRkiLaiya
     vetRisath thikkaraka ...... murukOnE

veRpumet tuththisaiyum vattamit tuchchuzhala
     vittapac chaichcharaNa ...... mayilveerA

kaththarnet tuchchadaiyar mukkaNak kakkadavuL
     kachchiyap parkkaruLsey ...... gurunAthA

kaRpathath thaikkuruki yuRpathath thukkuRavar
     kaRpinuk kutRupuNar ...... perumALE.

......... Meaning .........

ottil pattak kuruku saththu vittappadi thaththuvaththuc ceyalodu pol adiyEnum: Like the bird falling into the trap losing all its energy, I too was ensnared in the actions of tenets and became weak;

sachchil utRup padiyil vittu vittuk kuLaRi: turning into a useless muck on this earth, I began to speak falteringly;

saththuvaththaip piriya vidum vELai: whenever I deviate from the righteous path,

suththa muththap pathavi petRa nal paththarodu thokku satRu kadaiyan midi theera: kindly bring me a little closer to Your devotees who have realised pure liberation; to enable me to get rid of the (spiritual) poverty of this lowly self;

thuppu muththuc caraNa pachchai vetRip puravi sutRa vittuk kaduki varavENum: please come to me fast, mounting, and flying at breakneck speed, Your vehicle, the green, horse-like and triumphant peacock, whose feet are of the hue of coral and pearl!

viththaka aththip pavaLa thoppai appaRku iLaiya: You are the younger brother of the wise elephant-faced God, Ganapathi, with a huge coral-coloured pot-belly!

vetRi saththik kara aka murukOnE: You hold in Your hand the victorious and powerful spear, Oh MurugA!

veRpum ettu thisaiyum vattam ittuc cuzhala vitta pachchaic caraNa mayil veerA: Your peacock with green plumes made the mount Krouncha and the eight directions rotate around their axis, Oh valorous One!

kaththar nettuc cadaiyar mukka(N) nakkak kadavuL kachchi apparkku aruLsey guru nAthA: He is the Leader with a long matted hair and three eyes (namely, the sun, the moon and fire); His clothing is nothing but the cosmos; this Lord is seated in KAnchipuram, and to that SivA You preached, Oh Great Master!

kaRpa thaththaikku uruki un pathaththuk kuRavar kaRpinukku utRu puNar perumALE.: Your heart melted for DEvayAnai, the parrot-like damsel of the celestial world of KaRpaga trees; and You got hold of VaLLi, the chaste belle reared by the hunters who were devoted to Your hallowed feet; and You hugged her, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1114 thaththuvaththuch cheyal - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]