திருப்புகழ் 1110 பக்கம் உற நேரான  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1110 pakkamuRanErAna  (common)
Thiruppugazh - 1110 pakkamuRanErAna - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததன தானான தத்ததன தானான
     தத்ததன தானான ...... தனதான

......... பாடல் .........

பக்கமுற நேரான மக்களுட னேமாதர்
     பத்தியுடன் மேல்மூடி ...... யினிதான

பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை
     பற்றியணை வோர்கூவி ...... யலைநீரிற்

புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு
     பொற்றியிட வேயாவி ...... பிரியாமுன்

பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது
     புத்திநெடி தாம்வாழ்வு ...... புரிவாயே

இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர்
     எப்பொருளு மாமீசர் ...... பெருவாழ்வே

எட்டவரி தோர்வேலை வற்றமுது சூர்மாள
     எட்டியெதி ரேயேறு ...... மிகல்வேலா

மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ
     மத்தமயில் மீதேறி ...... வருவோனே

வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் பத்தியுடன் மேல்
மூடி இனிதான பட்டின் உடனே
... பக்கத்தில் சூழ்ந்து நிற்கும்
நல்லொழுக்கம் நிறைந்த பிள்ளைகளும் மாதர்களும் அன்புடன்
உடலின் மேல் மேன்மையான பட்டாடையால் மூடி,

மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூவி ...
மாலையை அணிவித்து நீண்ட ஒரு பாடையைப் பற்றிக் கொண்டு
அணைபவர்கள் கூவி அழ,

அலை நீரில் புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் ... அலை
வீசும் நீரில் படிந்து முழுகி, மிஞ்சியிருந்த துக்கமும் நீங்கி விலக,

வேறு பொன் தீ இடவே ஆவி பிரியா முன் ... மாற்றார்கள்
போல நடந்துகொண்டு, உடலின் மீது பொன்னிறமான நெருப்பை
மூட்ட, உயிர் நீங்கும் முன்பே,

பொன் கழலை நாள் தோறும் உள் பரிவினால் ஓது(ம்) புத்தி
நெடிது ஆம் வாழ்வு புரிவாயே
... உனது அழகிய திருவடியைத்
தினமும் உள்ளத்தில் அன்புடன் ஓதுகின்ற அறிவு பெருகும்
வாழ்க்கையைத் தந்து அருளுக.

இக்கன் உகவே நாடு(ம்) முக்க(ண்)ணர் மகா தேவர்
எப்பொருளும் ஆம் ஈசர் பெரு வாழ்வே
... கரும்பு வில்லை ஏந்திய
மன்மதன் அழிந்து போகும்படி திருவுள்ளம் கொண்ட, (சூரிய, சந்திர,
அக்கினி என்னும்) மூன்று கண்களை உடைய, மகா தேவராகிய
சிவபெருமான், எல்லாப் பொருளும் எவ்விடமும் தாமாகவே நிற்கும்
ஈசரின் பெரிய செல்வமே,

எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே
ஏறும் இகல் வேலா
... ஆழம் காண முடியாத, மிகப் பரந்த கடல்
வற்றவும், பழைய சூரன் இறந்து படவும், மேற் சென்று எதிரெழுந்த
வலிமை வாய்ந்த வேலனே,

மக்களோடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில்
மீது ஏறி வருவோனே
... மக்களும், விண்ணோர்களும், பல
திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து வர, களிப்பு மிகுந்த மயில்
மீது ஏறி நகர்வலம் வருவோனே,

வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ ... சேமித்து
வைத்த நிதியைப் போல விரும்பி தினந்தோறும் வந்து தொழும்
அடியார்கள் வாழும்படி,

வைத்த படி மாறாத பெருமாளே. ... அவர்கள் மேல் வைத்த
கருணைத் திறம் நீங்காத பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.254  pg 3.255  pg 3.256  pg 3.257 
 WIKI_urai Song number: 1113 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1110 - pakkam uRa nErAna (common)

pakkamuRa nErAna makkaLuda nEmAthar
     paththiyudan mElmUdi ...... yinithAna

pattinuda nEmAlai yittunedi thOrpAdai
     patRiyaNai vOrkUvi ...... yalaineeriR

pukkumuzhu kAneedu thukkamathu pOyvERu
     potRiyida vEyAvi ...... piriyAmun

poRkazhalai nAdORu mutparivi nAlOthu
     puththinedi thAmvAzhvu ...... purivAyE

ikkanuka vEnAdu mukkaNarma kAthEvar
     epporuLu mAmeesar ...... peruvAzhvE

ettavari thOrvElai vatRamuthu cUrmALa
     ettiyethi rEyERu ...... mikalvElA

makkaLodu vAnAdar thikkilmuni vOrsUzha
     maththamayil meethERi ...... varuvOnE

vaiththanithi pOlnAdi niththamadi yArvAzha
     vaiththapadi mARAtha ...... perumALE.

......... Meaning .........

pakkam uRa nErAna makkaLudanE mAthar paththiyudan mEl mUdi inithAna pattin udanE: The obedient sons and women standing around the body reverently covering it with a precious silk cloth;

mAlai ittu nedithu Or pAdai patRi aNaivOr kUvi: then garlanding the body, hugging the long pAdai (bier) and breaking into crying;

alai neeril pukku muzhukA needu thukkam athu pOy: once they take a dip in the wavy water, their remaining grief leaves them;

vERu pon thee idavE Avi piriyA mun: before my people behaving like strangers begin to set fire of a golden hue upon my body, and prior to the expiry of my life,

pon kazhalai nAL thORum uL parivinAl Othu(m) puththi nedithu Am vAzhvu purivAyE: kindly grant me a life with an ever-growing intellect to praise Your hallowed feet everyday with love in my heart!

ikkan ukavE nAdu(m) mukka(N)Nar makA thEvar epporuLum Am eesar peru vAzhvE: He made up His mind to destroy Manmathan (God of Love) bearing the bow of sugarcane; He is the Lord MahAdEvar, with three eyes (Sun, Moon and Fire); He is Lord SivA who is every thing and omnipresent; You are His great Treasure!

etta arithu Or vElai vatRa muthu cUr mALa etti ethirE ERum ikal vElA: The unfathomable and vast sea dried up and the old demon SUran was killed when Your mighty spear ascended and attacked, Oh Lord!

makkaLOdu vAn nAdar thikkil munivOr Cuzha maththa mayil meethu ERi varuvOnE: The people of the world, the celestials and the sages who came from many directions surrounded You as You came around, mounted on the exultant peacock!

vaiththa nithi pOl nAdi niththam adiyAr vAzha: Your devotees come to You daily as if they seek to visit their cherished treasure that is saved; protecting those devotees,

vaiththa padi mARAtha perumALE.: You show Your unwavering compassion to them, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1110 pakkam uRa nErAna - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]