திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1107 கரவுசேர் மகளிர் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1107 karavusErmagaLir (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனா தனதனந் தனதனா தனதனந் தனதனா தனதனந் ...... தனதான ......... பாடல் ......... கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங் களினறா துயில்வதுஞ் ...... சரிபேசுங் கரசரோ ருகநகம் படவிடாய் தணிவதுங் கமலநா பியின்முயங் ...... கியவாழ்வும் அரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின் பநல்மகோ ததிநலம் ...... பெறுமாறும் அதரபா னமுதமுந் தவிரவே மவுனபஞ் சரமனோ லயசுகந் ...... தருவாயே பரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம் படர்பகீ ரதிவிதம் ...... பெறஆடல் பயில்பணா வனமுகந் தகுணமா சுணகணம் பனிநிலா வுமிழுமம் ...... புலிதாளி குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங் குடிலவே ணியிலணிந் ...... தவராகங் குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங் குமரனே யமரர்தம் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் ... வஞ்சக எண்ணம் கொண்ட விலைமாதர்களின் குங்குமச் செஞ்சாந்து அணிந்த, பாலைத் தரிப்பதான, மார்பகங்கள் மீது நீங்காமல் தூங்கும் இன்பமும், சரி பேசும் கர சரோருக(ம்) நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும் ... வளையல்கள் ஒலிக்கும் அல்லிமலர்க் கையில் உள்ள நகத்தின் கீறல் உடல் முழுவதும் படச் செய்து காம தாகத்தை தீர்த்துக் கொள்ளும் இன்பமும், தாமரை போன்ற உந்தியில் அணையும் வாழ்வாகிய இன்பமும், அரவு போல் இடை படிந்து இரவெலா(ம்) முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் அதர பான அமுதமும் தவிரவே ... ஒரு பாம்பு சுற்றிக்கொள்வதைப் போல அவர்களது நுண்ணிய இடையைச் சுற்றிப் படிந்து காம இன்பத்தை அனுபவித்து இரவு முழுமையும் மூழ்குகின்ற மகிழ்ச்சியைத் தரும் இனிய பெருங் கடலின் சுகத்தைப் பெறுகின்ற வழியான இன்பமும், வாயிதழைப் பருகி அதில் கிடைத்து அனுபவிக்கும் இன்பமும், (இவை யாவும்) என்னை விட்டு அகல, மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே ... மெளனம் என்னும் கூண்டில் இருப்பதால் சித்திக்கும் மன ஒடுக்கம் என்னும் சுக நிலையைத் தருவாயாக. பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல் பயில் பணா வனம் உகந்த குண மாசுண கணம் ... பரந்து செல்லும் ஆயிரக் கணக்கான கிளைகளாய் திசைகள் நோக்கும் இடமெல்லாம படர்ந்து செல்லும் கங்கை, வித விதமான ஆட்டங்களை ஆடி, பயிலும் படங்களை உடையதும், காட்டு வாழ்க்கையில் மகிழும் குணத்தை உடையதும் ஆகிய பாம்பின் கூட்டம், பனி நிலா உமிழும் அம்புலி தாளி குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ... குளிர்ந்த ஒளிக் கிரணங்களை வீசும் சந்திரன், அருகம் புல், குராமலர், வில்வம், பூ அரும்புகள், கொன்றை, ஆத்தி (இவைகளைத் தமது) நீண்டு வளைந்துள்ள சடையில் அணிந்த சிவபெருமானின் ஆகம் குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர் தம் பெருமாளே. ... உடலம் குழையும்படி அன்புடனே தழுவிய பார்வதி நாயகி பெற்றருளிய குமரனே, தேவர்களின் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.248 pg 3.249 pg 3.250 pg 3.251 WIKI_urai Song number: 1110 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1107 - karavusEr magaLir (common) karavusEr makaLirkung kumapayO tharathanang kaLinaRA thuyilvathum ...... saripEsung karasarO rukanakam padavidAy thaNivathung kamalanA piyinmuyang ...... kiyavAzhvum aravupO lidaipadin thiravelA muzhukumin panalmakO thathinalam ...... peRumARum atharapA namuthamun thaviravE mavunapanj charamanO layasukan ...... tharuvAyE paravumA yiramukang koduthisA mukathalam padarpakee rathivitham ...... peRaAdal payilpaNA vanamukan thakuNamA suNakaNam paninilA vumizhumam ...... pulithALi kuravukU viLamarum pithazhithA thakinedung kudilavE NiyilaNin ...... thavarAkang kuzhaiyaA tharavudan thazhuvunA yakitharung kumaranE yamarartham ...... perumALE. ......... Meaning ......... karavu sEr makaLir kungkuma payOthara thanangaLin aRA thuyilvathum: The bliss of prolonged slumber on the bosom of the treacherous whores whose milk-laden breasts are smeared with a paste of red vermillion, sari pEsum kara sarOruka(m) nakam pada vidAy thaNivathum kamala nApiyin muyangkiya vAzhvum: the bliss of quenching the thirst of passion by getting scratches all over the body from the nails in their lily-like hands that wear bangles with clinking sound, the life-long bliss of hugging their lotus-like belly, aravu pOl idai padinthu iravelA(m) muzhukum inpa nal makA uthathi nalam peRumARum athara pAna amuthamum thaviravE: the bliss of encircling their slender waist like a serpent, enjoying love-making with them and experiencing the pleasurable immersion in the sea of union whole night and the bliss of imbibing from their lips and deriving a rapturous delight - in order that all these enjoyments are ended, mavuna panjara manOlaya sukam tharuvAyE: kindly encase me in the cage of tranquility by granting the blissful state of absolute control of mind, Oh Lord! paravum Ayiram mukam kodu thisA muka thalam padar pakeerathi vitham peRa Adal payil paNA vanam ukantha kuNa mAsuNa kaNam: River GangA that branches off widely into thousands of divisions in all directions, the bunch of serpents that amuse themselves in a variety of ways by raising their hoods, playing and thriving happily in the forests, pani nilA umizhum ampuli thALi kuravu kUviLam arumpu ithazhi thAthaki nedum kudila vENiyil aNinthavar: the moon that radiates cool and bright rays, the arukam grass, the kurA flower, the vilvam (bael) leaves, many buds of flowers, kondRai (Indian laburnum) flower and Aththi (mountain ebony) leaves - all these adorn the long, curly and matted hair of Lord SivA; Akam kuzhaiya Atharavudan thazhuvu nAyaki tharum kumaranE amarar tham perumALE.: the body of that SivA is ecstatically embraced with love by Goddess PArvathi, and You are the son delivered by Her, Oh KumarA! You are the Lord of the celestials, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |