(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 1108 வடிவவேல் தனை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1108 vadivavElthanai  (common)
Thiruppugazh - 1108 vadivavElthanai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனா தனதனந் தனதனா தனதனந்
     தனதனா தனதனந் ...... தனதான

......... பாடல் .........

வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந்
     தமர்செய்வாள் விழியர்நெஞ் ...... சினில்மாயம்

வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந்
     தணுகுமா நிதிகவர்ந் ...... திடுமாதர்

துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந்
     தமளிதோய் பவர்வசஞ் ...... சுழலாதே

தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந்
     துனதுதாள் தொழமனந் ...... தருவாயே

படியெலா முடியநின் றருளுமா லுதவுபங்
     கயனுநான் மறையுமும் ...... பரும்வாழப்

பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண்
     டலகையோ டெரிபயின் ...... றெருதேறிக்

கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங்
     குவளைசேர் சடையர்தந் ...... திருமேனி

குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்
     குமரனே யமரர்தம் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வடிவ வேல் தனை வெகுண்டு இளைஞர் ஆவியை வளைந்து
அமர் செய் வாள் விழியர்
... ஒளி வீசும் வேலாயுதத்தைப்
போட்டியிட்டுக் கோபித்து இளைஞரது உயிரைச் சூழ்ந்து போர் செய்யும்
வாள் போன்ற கண்களை உடையவர்களாய்,

நெஞ்சினில் மாயம் வளர மால் தனை மிகுந்தவர்கள் போல்
அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர்
... உள்ளத்தில்
வஞ்சனை எண்ணம் உண்டாகிப் பெருக, ஆசை மிக்கவர்கள் போல
நடித்து, அளவளாவிப் பேசி வந்து, நெருங்கி பெரிய செல்வத்தைக்
கைப்பற்றும் விலைமாதர்களின்

துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி
தோய்பவர் வசம் சுழலாதே
... உடுக்கை போன்ற இடை
மார்பகங்களின் கனத்தினால் நெகிழ்ச்சி உறவே, தூங்குவதற்குப்
பொருந்தியுள்ள படுக்கையில் சேர்க்கையில் ஈடுபடும் அவ்வேசையர்களின்
வசத்தில் மனக் கலக்கம் அடையாமல்,

தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது
தாள் தொழ மனம் தருவாயே
... அழிதல் இல்லாத ஒழுக்க நெறியை
அறிந்துகொண்டு வீணானது இன்னதெனத் தெரிந்து உனது
திருவடிகளை வணங்க மனப் பக்குவத்தைத் தந்து அருளுக.

படி எலா(ம்) முடிய நின்று அருளு(ம்) மால் உதவு பங்கயனும்
நான் மறையும் உம்பரும் வாழ
... உலகம் முழுதும் பரவி நின்று
அருள் புரிகின்ற திருமால் பெற்ற பிரமனும், நான்கு வேதங்களும்,
தேவர்களும் வாழும்பொருட்டு,

பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு
அலகையோடு எரி பயின்று எருது ஏறி
... பாற்கடலினின்றும்
எழுந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு, பெரிய நடனத்தை
பேய்களுடன் ஆடி, நெருப்பைக் கையில் ஏந்தி, (நந்தியாகிய) ரிஷப
வாகனத்தின் மேல் ஏறி,

கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம்
குவளை சேர் சடையர் தம்
... கொடுமை வாய்ந்த ஒளி விடும் பாம்பு,
இளம் பிறையுடன், அலை வீசும் கங்கை நீர், குவளை மலர் (இவைகள்
சேர்ந்துள்ள) சடையர் ஆகிய சிவபெருமானுடைய

திருமேனி குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே
அமரர் தம் பெருமாளே.
... அழகிய உடல் குழையும்படி அன்புடன்
தழுவுகின்ற பார்வதி தேவி பெற்று அருளிய குமரனே, தேவர்களின்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.250  pg 3.251  pg 3.252  pg 3.253 
 WIKI_urai Song number: 1111 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 1108 - vadivavEl thanai (common)

vadivavEl thanaivekuN diLainjarA viyaivaLain
     thamarseyvAL vizhiyarnen ...... jinilmAyam

vaLaramAl thanaimikun thavarkaLpO laLavivan
     thaNukumA nithikavarn ...... thidumAthar

thudiyainE ridaithanan thuvaLavE thuyilporun
     thamaLithOy pavarvasam...... cuzhalAthE

tholaivilA iyaltherin thavalamA nathukadan
     thunathuthAL thozhamanan ...... tharuvAyE

padiyelA mudiyanin RaruLumA luthavupang
     kayanunAn maRaiyumum ...... parumvAzhap

paravaiyU dezhuvidam parukineeL pavurikoN
     dalakaiyO deripayin ...... ReruthERik

kodiyavA LaraviLam piRaiyinO dalaicalam
     kuvaLaisEr sadaiyarthan ...... thirumEni

kuzhaiyaA tharavudan thazhuvunA yakitharum
     kumaranE yamarartham ...... perumALE.

......... Meaning .........

vadiva vEl thanai vekuNdu iLainjar Aviyai vaLainthu amar sey vAL vizhiyar: Competing with the sharpness of the bright spear, their eyes, looking like the sword, battle with rage by besieging the young men;

nenjinil mAyam vaLara mAl thanai mikunthavarkaL pOl aLavi vanthu aNukum mA nithi kavarnthidu mAthar: with treacherous thoughts filling their mind, they pretend to be dearly loving; they accost the men with glib talk and grab their big wealth;

thudiyai nEr idai thanam thuvaLavE thuyil porunthu amaLi thOypavar vasam suzhalAthE: their slender waist looking like a hand-drum caves in due to the weighty bosom; I do not wish to be carried away by the carnal pleasure offered by these whores on the bed meant for sleeping;

tholaivu ilA iyal therinthu avalamAnathu kadanthu unathu thAL thozha manam tharuvAyE: instead, I wish to learn the righteous method that never succumbs and to realise which way is wasteful; for that, kindly grant the wisdom to worship Your hallowed feet!

padi elA(m) mudiya ninRu aruLu(m) mAl uthavu pangayanum nAn maRaiyum umparum vAzha: For the prosperity of Brahma, the son of Lord VishNu who pervades throughout the world blessing all, and for the benefit of the fourVEdAs and the celestials,

paravai Udu ezhu vidam paruki neeL pavuri koNdu alakaiyOdu eri payinRu eruthu ERi: He imbibed the evil poison (AlakAlam) that surged from the milky ocean; He danced the great cosmic dance with all the devils; He carried the burning fire in His hand; He mounts His vehicle, Nandi, the Bull;

kodiya vAL aravu iLam piRaiyinOdu alai calam kuvaLai sEr sadaiyar tham: on His matted hair, He holds the sparkling and evil serpent, young crescent moon, the wavy water of River Gangai and black lily; He is Lord SivA;

thirumEni kuzhaiya Atharavudan thazhuvu nAyaki tharum kumaranE amarar tham perumALE.: His hallowed body becomes ecstatic when hugged fondly by Goddess PArvathi, and You are Her dear Son and the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1108 vadivavEl thanai - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top