திருப்புகழ் 1106 ஞாலமோடு ஒப்ப  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1106 gnAlamOduoppa  (common)
Thiruppugazh - 1106 gnAlamOduoppa - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானனா தத்தனத் தானனா தத்தனத்
     தானனா தத்தனத் ...... தனதான

......... பாடல் .........

ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத்
     தீதெனா நற்றவத் ...... தணைவோர்தம்

நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட்
     டோயுநா யொப்பவர்க் ...... கிளையாதே

நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்
     டூரசூர் கெட்டுகப் ...... பொரும்வேலா

நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற்
     றோதநீ திப்பொருட் ...... டரவேணும்

கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத்
     தானும்வே தக்குலத் ...... தயனாருங்

கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப்
     போதுறா நிற்பஅக் ...... கொடிதான

காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக்
     கோதைகா மக்கடற் ...... கிடைமூழ்கக்

காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக்
     காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலைத் தீது எனா ...
உலகத்துடனே ஒத்து வாழுங்கள் மக்களே என்னும் நல்ல உபதேசத்தை
கெட்டது என்று கருதி,

நல் தவத்து அணைவோர் தம் நாதமோடு உள் கருத்து ஓடவே
தர்க்கம் இட்டு ஓயு(ம்) நாய் ஒப்பவர்க்கு இளையாதே
... நல்ல
தவ நிலையில் பொருந்திய பெரியோர்களின் பேச்சின் ஒலியும், அவர்கள்
சொன்ன புத்திமதியின் உண்மைக் கருத்தும் பின்னிட்டு ஓடும்படித்
(தங்கள் கூச்சலில் அடங்க) அவர்களுடன் வாது பேசி, ஓய்ந்து போகும்
நாய் போன்ற அறிவிலிகளிடம் அவர்கள் வாதுக்குத் தோற்றுப் போகாமல்,

நீல மேனிக் குலத் தோகை மேல் உற்று நிட்டூர சூர் கெட்டு
உகப் பொரும் வேலா
... நீல உருவம் விளங்கும், அடர்ந்த பீலிகளை
உடைய, மயிலின் மேல் ஏறி, கொடுமையாளனான சூரன் அழிந்து
சிதறும்படி சண்டை செய்யும் வேலனே,

நேசமாய் நித்த(ம்) நின் தாளை நீள் அச்சம் அற்று ஓத நீதிப்
பொருள் தர வேணும்
... அன்புடன் நாள் தோறும் உனது
திருவடிகளை நெடுநேரம் அஞ்சுதல் இல்லாமல் போற்றுதற்கு உரிய தர்ம
சாஸ்திரப் பொருளை நீ எனக்குத் தர வேண்டும்.

கோல வாரிக்கு இடைக் கோப அராவில் படுத்தானும் வேதக்
குலத்து அயனாரும்
... அழகிய கடலின் மத்தியில் கோபம் நிறைந்த
ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது படுத்துள்ள திருமாலும், வேதம்
ஓதும் குலத்துப் பிரமனும்,

கூறும் வானப் புவிக்கு ஊறு தீரக் குறிப்பு ஓதுறா நிற்ப அக்
கொடிதான காலன் மார்பு உற்று உதைத்தானும்
...
புகழப்படுகின்ற வானத்திலும் பூமியிலும் உள்ளோருக்கு கெடுதல் வரா
வழிக்கு ஒரு குறிப்பை போதித்துக் காட்டுவதற்காக, அந்தக்
கொடியவனான யமனுடைய மார்பில் படும்படி உதைத்த சிவபெருமானும்
ஆகிய இம்மூவரும்,

ஓர் கற்பு உடைக் கோதை காமக் கடற்கு இடை மூழ்க ...
ஒவ்வொரு கற்பு வாய்ந்த பெண்ணுடன் (முறையே லக்ஷ்மி, சரஸ்வதி,
பார்வதி என்ற பெண்களுடன்) கூடி ஆசைக் கடலின் இடையே
முழுகும்படி,

காவி சேர் கொத்தலர்ப் பாணம் ஏய் வித்தகக் காம வேள்
மைத்துனப் பெருமாளே.
... நீலோற்பலத்தின் கொத்தான மலர்ப்
பாணத்தை எய்த வல்லமை படைத்த மன்மதனின் மைத்துனப்*
பெருமாளே.


* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமாலின் மருமகன். எனவே முருகன்
மன்மதனின் மைத்துனன்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.246  pg 3.247  pg 3.248  pg 3.249 
 WIKI_urai Song number: 1109 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1106 - njAlamOdu oppa (common)

njAlamO doppamak kALenA naRcholaith
     theethenA natRavath ...... thaNaivOrtham

nAthamO dutkaruth thOdavE tharkkamit
     tOyunA yoppavark ...... kiLaiyAthE

neelamE nikkulath thOkaimE lutRunit
     tUracUr kettukap ...... porumvElA

nEsamAy niththanit RALainee Lacchamat
     ROthanee thipporut ...... taravENum

kOlavA rikkidaik kOparA viRpaduth
     thAnumvE thakkulath ...... thayanArum

kURumvA nappuvik kURuthee rakkuRip
     pOthuRA niRpaak ...... kodithAna

kAlanmAr putRuthaith thAnumOr kaRpudaik
     kOthaikA makkadaR ...... kidaimUzhkak

kAvisEr koththalarp pANamEy viththakak
     kAmavEL maiththunap ...... perumALE.

......... Meaning .........

njAlamOdu oppa makkAL enA nal solaith theethu enA: The good advice that people should conform to the way of the world is considered as flawed

nal thavaththu aNaivOr tham nAthamOdu uL karuththu OdavE tharkkam ittu Oyu(m) nAy oppavarkku iLaiyAthE: by certain dog-like foolish people who loudly argue drowning (by their own cacophony) the voice of the wise sage-like elders, relegating the true meaning of their advice to the background; I do not wish to be defeated by such fools;

neela mEnik kulath thOkai mEl utRu nittUra cUr kettu ukap porum vElA: Oh Lord with the Spear, You mounted the blue peacock with thick plumes and fought fiercely, felling and destroying the evil demon SUran!

nEsamAy niththa(m) nin thALai neeL accham atRu Otha neethip poruL thara vENum: Kindly teach me the right material in the scriptures that would enable me to praise Your hallowed feet everyday for a long time with loving devotion and without any fear!

kOla vArikku idaik kOpa arAvil paduththAnum vEthak kulaththu ayanArum: Lord VishNu, who slumbers on a ferocious serpent AdhisEshan in the middle of the beautiful sea, Lord Brahma, who comes from the lineage of chanters of the Scriptures,

kURum vAnap puvikku URu theerak kuRippu OthuRA niRpa ak kodithAna kAlan mArpu utRu uthaiththAnum: and Lord SivA who kicked hard at the chest of the evil God of Death, Yaman, in order to teach a significant principle that would remove the obstacles of all people in the famous sky and earth - all the Trinity -

Or kaRpu udaik kOthai kAmak kadaRku idai mUzhka: were sent to drown in the sea of love by uniting with their chaste spouses Lakshmi, Saraswathi and PArvathi, respectively,

kAvi sEr koththalarp pANam Ey viththakak kAma vEL maiththunap perumALE.: when the powerful God of Love, Manmathan, wielded a bunch of blue lily arrows upon them; You are the cousin* of that Manmathan, Oh Great One!


* Murugan is the nephew of Vishnu. Manmathan is the son of Vishnu. Thus Murugan is the cousin of Manmathan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1106 gnAlamOdu oppa - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]