திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1059 கவடு கோத்தெழும் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1059 kavadukOththezhum (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான ......... பாடல் ......... கவடு கோத்தெழு முவரி மாத்திறல் காய்வேல் பாடே னாடேன் வீடா ...... னதுகூட கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ ...... தினும்வீழேன் தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர் தாழா தீயேன் வாழா தேசா ...... வதுசாலத் தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச தாவா மாறே நீதா னாதா ...... புரிவாயே சுவடு பார்த்தட வருக ராத்தலை தூளா மாறே தானா நாரா ...... யணனேநற் றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது ழாய்மார் பாகோ பாலா காவா ...... யெனவேகைக் குவடு கூப்பிட வுவண மேற்கன கோடூ தாவா னேபோ தாள்வான் ...... மருகோனே குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கவடு கோத்தெழும் ... மரக்கிளைகளை மிகுதியாய்க் கொண்டு எழுந்து நின்றதும், உவரி மாத்திறல் ... கடலின் நடுவிலே தோன்றியதுமான மாமரத்தின் (உருவில் இருந்த சூரனின்) வலிமையை காய்வேல் பாடேன் ஆடேன் ... காய்த்து அழித்த உன் வேலாயுதத்தை நான் பாடவில்லை, அவ்வெற்றியைப் பாராட்டி நான் ஆடுவதும் இல்லை. வீடானதுகூட கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால்மேல் ... மோக்ஷ இன்பத்தை அடைய விரும்பி, கருணை மிக்கதும், கழல்கள் ஒலிப்பதுமான உன் திருவடிகளின் மீது வீழேன் வீழ்வார் கால்மீதினும் வீழேன் ... நான் விழுந்து வணங்குவதில்லை, அப்படி விழுந்து பணிவோரின் கால்களிலும் வீழ்ந்து வணங்குவதும் இல்லை. தவிடின் ஆர்ப்பதம் எனினு மேற்பவர் தாழாது ஈயேன் ... தவிட்டளவு சோறுகூட தயக்கமின்றி ஏற்பவர்களுக்கு நான் கொடுப்பதும் இல்லை. வாழாதே சாவது சாலத் தரமு ... இவ்வாறு வாழ்வதை விட சாவதே எனக்கு மேலானது. மோக்ஷமும் இனியென் ஆக்கை சதா ஆமாறே ... பிறப்பு, இறப்புத் தொடரிலிருந்து எனது இந்த உடலுக்கு இனியேனும் விடுதலை கிடைத்து எப்போதும் நிலைபெறுமாறு, நீதான் நாதா புரிவாயே ... நாதனே, நீதான் அருள் புரிவாயாக. சுவடு பார்த்(து) அட வரு கராத்தலை ... யானையின் அடிச்சுவட்டைப் பார்த்து, அதைப் பற்றி இழுத்துக் கொல்வதற்காக குளத்திற்கு வந்த முதலையின் தலை தூளாமாறே தான் ஆ நாராயணனே நற்றுணைவ ... பொடியாகுமாறு 'ஹா, நாராயண மூர்த்தியே, நல்ல துணைவனே, பாற்கடல் வனிதை சேர்ப்ப துழாய்மார்பா கோபாலா காவாய் எனவே ... பாற்கடலில் உதித்த மங்கை லக்ஷ்மியின் கணவனே, திருத் துழாய் மாலையை அணிந்த மார்பனே, கோபாலனே, என்னைக் காவாய்' என்று கைக்குவடு கூப்பிட உவண மேல் கனகோடு ஊதா ... தன் துதிக்கையைத் தூக்கி, மலை போன்ற யானையான கஜேந்திரன் முறையிட, கருடன் மேல் ஏறி, பொன் சங்கான பாஞ்சஜன்யத்தை ஊதி, வானே போது ஆள்வான் மருகோனே ... ஆகாயமார்க்கமாகப் பறந்து வந்து, யானையைக் காத்தருளிய திருமாலின் மருகனே, குலிச பார்த்திபன் உலகு காத்தருள் கோவே ... வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்திய அரசன் இந்திரனின் தேவ உலகத்தை காத்தருளிய தலைவனே, தேவே வேளே வானோர் பெருமாளே. ... தேவனே, செவ்வேளே, தேவர்தம் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.158 pg 3.159 pg 3.160 pg 3.161 WIKI_urai Song number: 1062 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1059 - kavadu kOththezhum (common) kavadu kOththezhum uvari mAththiRal kAy vEl pAdE nAdEn veedAn ...... adhukUda karuNai kUrppana kazhalgaL Arppana kAlmEl veezhEn veezhvAr kAlmee ...... dhinum veezhEn thavidin Arppadham eninu mERpavar thAzhA theeyEn vAzhAdhE sA ...... vadhu sAlath tharamu mOkshamum ini en Akkai sa dhA AmARE neethA nAthA ...... purivAyE suvadu pArththada varuka rAththalai thULA mARE thAnA nArA ...... yaNanE naR thuNaiva pARkadal vanithai sErppa thu zhAy mArbA gOpAlA kAvA ...... enavEkaik kuvadu kUppida uvaNamER gana kOdUdhA vAnE pOdhALvAn ...... marugOnE kulisa pArththiban ulagu kAththaruL kOvE dhEvE vELE vAnOr ...... perumALE. ......... Meaning ......... kavadu kOththezhum uvari mA: This tree had a cluster of branches; it was a mango tree that grew up suddenly in the middle of the sea; thiRal kAy vEl: (that tree was the disguise of the demon SUran) whose bravery was burnt down by Your Spear; pAdEn AdEn: I never sing the glory of that Spear nor do I dance in ecstasy celebrating its triumph. veedAn adhukUda karuNai kUrppana kazhalgaL Arppana kAlmEl veezhEn: I do not seek blissful liberation by prostrating at Your compassionate feet that are adorned by lilting anklets; veezhvAr kAlmee dhinum veezhEn: nor do I fall at the feet of those who worship Your hallowed feet. thavidin Arppadham eninu mERpavar thAzhA theeyEn: I do not offer unhesitatingly even a morsel of food to those who are in need of food. vAzhAdhE sAvadhu sAlath tharamu: Instead of such a deplorable life, death would be far better. mOkshamum ini en Akkai sadhA AmARE: In order that my body is permanently relieved from the vicious cycle of birth and death, neethA nAthA purivAyE: You only, oh Lord, can grant me liberation! suvadu pArththada varu karAththalai thULA mARE: The crocodile pursued the footprints of the elephant (GajEndran) and came to the pond with a view to grabbing and killing him. To shatter the crocodile's head to pieces, thAn A nArA yaNanE naRthuNaiva pARkadal vanithai sErppa: the elephant screamed and prayed "Ha! NArAyaNA! My good friend! You are the consort of Lakshmi who emerged from the milky ocean! thuzhAy mArbA gOpAlA kAvA enavE: You wear on Your holy chest the garland of ThuLasi, Oh GopAlA! Kindly come to my rescue!" - on hearing this appeal kaikkuvadu kUppida uvaNamER gana kOdUdhA: from the mountain-like elephant with his lifted trunk, He mounted his vehicle, the Eagle Garuda, blowing His golden conch (PAnchajanyam), vAnE pOdhALvAn marugOnE: and rushed to GajEndran's rescue by flying through the sky! He is Lord Vishnu, and You are His nephew! kulisa pArththiban ulagu kAththaruL kOvE: Oh Lord, You are the protector of the Celestial Land ruled by IndrA, who holds in his hand the weapon Vajra! dhEvE vELE vAnOr perumALE.: Oh God Almighty, with reddish feet! You are the Lord of the celestials, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |