பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 151 பார்வதியின் புதல்வனே கார்த்திகை மாதர்களின் கொங்கைகளில் பால் நிரம்பி வர அதை உண்ட செல்வனே! -- (முளரி) தாமரை மீதும், (பாற்கடல் பாற் கடலின் மீதும், (சயிலம்) (கயிலை மலையின்மீதும் (முறையே) வீற்றிருக்கும் பழைவர்களாம், அயன், அரி, அரன் எனப்படும் கடவுளர்க்குத் தம்பிரானே! (கருணை வார்த்தையிருந்த வாறென்) 1062 (கவடு) மரக் கிளைகளைக் (கோத்து எழு) நிரம்பக் கொண்டு எழுந்ததும், (உவரி) கடலில் தோன்றி நின்றதுமான (மா) மாமரமாம் சூரனது (திறல்) வலியைக் காய்ந்து அழித்த (உனது) வேலாயுதத்தை நான் பாடுகின்றேன் இல்லை. (ஆடேன்) (அதைத்துதித்து) ஆடுகின்றேன் இல்லை, அல்லது நாடேன் - நாடி விரும்புகின்றேன் இல்லை. வீட்டின்பத்தை அடைய விரும்பி கருணை மிக்கதும், கழல்கள் ஒலிப்பதும் ஆன உனது திருவடி யின் மீது வீழ்ந்து வணங்குகின்றேன் இல்லை; அப்படி வீழ்ந்து வணங்குபவர்களின் கால்களிலும் வீழ்ந்து வணங்குகின்றேன் இல்லை; (தவிடின் ஆர்) தவிடளவு (பதம்) சோறுகூட ஏற்பவர்க்குத் (தாழ்க்காது) தடையின்றிக் கொடுக்கமாட்டேன்; (வாழாதே) இங்னம் வாழாமல் (வாழ்வதைவிட) (சாவது) இறந்து படுதலே (சால) மிகவும் -

  • (தரம்) மேலானதாம் . தகுதியாம் (மோஷமும் இனி என்

க்கை) - இனியேனும் மோகூத்தை (பிறப்பிறப்பினின்றும் டுதலையை அடைந்து) என் உடல் (சதா) எப்போதும் (ஆமாறே) நிலை பெற்றிருக்குமாறே (நீதான் நாதா) நாதா நீ தான் - நாதனே நீதான் அருள் புரிவாயாக t (நீரில் யானையின் கால் நிழலைக் கண்டு) அடுதற்பொருட்டு - கொல்லுதற் பொருட்டு வந்து இழுத்த முதலையின் தலை பொடியாகும்படி - (ஆ) ஹா நாராயண மூர்த்தியே நற்பெருந்

  • தரமும் - இங்கு உம் அசை நிலை. உதாரணங்கள் - " காமக் கடல் மன்னும் உண்டே"-"மன்னும், உம்மும் அசை நிலை"

- திருக்குறள். உரை 1164 "சாக்கியம் சமன் என்றிவை சாரேலும்". சம்பந்தர் 2.77.10 t கஜேந்திரனுக்கு உதவினது - பாடல் 939-பக்கம் 731 கீழ்க்குறிப்பு