திருப்புகழ் 1058 பொதுவதாய்த் தனி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1058 podhuvadhAiththani  (common)
Thiruppugazh - 1058 podhuvadhAiththani - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தாத்தன தனன தாத்தன
     தனன தாத்தன ...... தந்ததான

......... பாடல் .........

பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்
     இரவு போய்ப்புகல் ...... கின்றவேதப்

பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு
     வெளிய தாய்ப்புதை ...... வின்றியீறில்

கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு
     கமுத மாய்ப்புல ...... னைந்துமாயக்

கரண மாய்த்தெனை மரண மாற்றிய
     கருணை வார்த்தையி ...... ருந்தவாறென்

உததி கூப்பிட நிருத ரார்ப்பெழ
     உலகு போற்றிட ...... வெங்கலாப

ஒருப ராக்ரம துரக மோட்டிய
     வுரவ கோக்கிரி ...... நண்பவானோர்

முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை
     முலைகள் தேக்கிட ...... வுண்டவாழ்வே

முளரி பாற்கடல் சயில மேற்பயில்
     முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

பொதுவதாய்த் தனி முதல் அதாய் ... எவ்வுயிர்க்கும்
பொதுவானதாகி, தனிப்பட்ட மூல முதற் பொருளாகி,

பகல் இரவு போய்ப் புகல்கின்ற வேதப்பொருள் அதாய் ...
பகல், இரவு இவைகளைக் கடந்து சொல்லப்படுகின்ற வேதப்
பொருளாகி,

பொருள் முடிவு அதாய் பெருவெளியதாய் ... அப்பொருளின்
முடிவானதாகி, பெரிய வெட்ட வெளியாய் ஆகி,

புதைவு இன்றி ஈறு இல் கதி அதாய் ... மறைவு யாதொன்றுமன்றி,
முடிவு இல்லாததான, யாவற்றுக்கும் அடைக்கலமாகி,

கருது அரியதாய் பருக அமுதமாய் ... எண்ணுவதற்கும்
முடியாததாகி, உண்ணும் அமுதம்போல் இனிமையானதாகி,

புலன் ஐந்தும் மாய ... சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து
புலன்களும் ஒடுங்கி அழிய,

கரணம் மாய்த்து எனை மரணம் மாற்றிய ... மெய், வாய், கண்,
மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகளின் சேட்டைகளை அழித்து, எனது
மரண பயத்தை நீக்கிய,

கருணை வார்த்தை இருந்த ஆறு என் ... உனது அருள்
மொழி உபதேசம் எத்தனை உயர்ந்த நிலையான அற்புதம்?

உததி கூப்பிட நிருதர் ஆர்ப்பு எழ ... கடல் ஓலமிடவும், அசுரர்கள்
போரொலி செய்யவும்,

உலகு போற்றிட வெம் கலாப ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய
உரவ
... உலகத்தோர் போற்றிப் புகழவும், வசீகரம் வாய்ந்த தோகை
மயிலாகிய, ஒப்பற்ற வீரமான குதிரையை, ஓட்டிச் செலுத்திய வலிமை
வாய்ந்தவனே,

கோக் கிரி நண்ப வானோர் முதல்வ பார்ப்பதி புதல்வ ...
பூமியிலுள்ள மலைகளிடத்தே விருப்பம் உள்ளவனே, தேவர்களின்
தலைவனே, பார்வதியின் மகனே,

கார்த்திகை முலைகள் தேக்கிட உண்ட வாழ்வே ... கார்த்திகைப்
பெண்களின் மார்பகங்களில் பால் நிரம்பி வர அதைப் பருகிய செல்வமே,

முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில் ... தாமரை மீதும்,
திருப்பாற்கடலிலும், கயிலை மலையின் மீதும் முறையே வீற்றிருக்கும்

முதிய மூர்த்திகள் தம்பிரானே. ... மூத்தவர்களாகிய அயன், அரி,
அரன் எனப்படும் கடவுளருக்கும் தனிப்பெரும் தலைவனே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.156  pg 3.157  pg 3.158  pg 3.159 
 WIKI_urai Song number: 1061 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Sambandam Gurukkal
திரு சம்பந்தம் குருக்கள்

Thiru P. Sambandam Gurukkal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1058 - podhuvadhAith thani (common)

podhuva dhAyth thani mudhala dhAyp pagal
     iravu pOyp pugal ...... kindra vEdhap

poruLa dhAyp poruL mudiva dhAyp peru
     veLiya dhAyp pudhai ...... vindri yeeRil

kadhiya dhAyk karudhariya dhAyp parug
     amutha mAyp pulan ...... aindhu mAyak

karaNa mAyth thenai maraNa mAtriya
     karuNai vArththai ...... irundha vARen

udhadhi kUppida nirudharArp pezha
     ulagu pOtrida ...... venkalAba

oru parAkrama thuragam Ottiya
     urava kOk giri ...... naNba vAnOr

mudhalva pArppathi pudhalva kArthigai
     mulaigaL thEkkida ...... uNda vAzhvE

muLari pARkadal sayila mER payil
     muthiya mUrtthikaL ...... thambirAnE.

......... Meaning .........

podhuva dhAyth thani mudhala dhAy: You are the common factor of all lives. You are the unique primordial substance.

pagal iravu pOyp pugal kindra vEdhap poruLa dhAy: You are the meaning of all vedic scriptures being recited, surpassing days and nights.

poruL mudiva dhAyp peru veLiya dhAy: You are the ultimate culmination of that meaning. You are the widest cosmos.

pudhai vindri yeeRil kadhiya dhAy: You are very transparent. You are endless. You are the refuge of all.

karudhariya dhAyp parugamutha mAy: You are beyond comprehension. You are sweet like the divine nectar being imbibed.

pulan aindhu mAya: Destroying the five perceptory senses (namely, taste, light, feeling, sound and smell),

karaNa mAyth thenai: and annihilating the five sensory organs (namely, mouth, eyes, skin, ears and nostrils),

maraNa mAtriya karuNai vArththai irundha vARen: You have removed my fear of death; how wonderful is Your gracious teaching!

udhadhi kUppida nirudharArp pezha: The seas bellowed; the demons made a loud noise;

ulagu pOtrida venkalAba oru parAkrama thuragam Ottiya urava: and the entire world praised You in awe when You mounted the attractive peacock with pretty feathers, driving it like a matchless brave horse, Oh valorous One!

kOk giri naNba vAnOr mudhalva pArppathi pudhalva: You are an adoring friend of all mountains in this world! You are the leader of the celestials. You are the beloved child of Mother PArvathi!

kArthigai mulaigaL thEkkida uNda vAzhvE: You are the dear child of all the KArththigai damsels who nursed You with abundant milk from their bosoms!

muLari pARkadal sayila mER payil: They have their seats on the lotus, the milky ocean and the mount KailAsh;

muthiya mUrtthikaL thambirAnE.: They are respectively the elder Gods, namely BrahmA, Vishnu and SivA. You are the Leader above all of them, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1058 podhuvadhAith thani - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]