திருப்புகழ் 1045 அமல வாயு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1045 amalavAyu  (common)
Thiruppugazh - 1045 amalavAyu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
     அமுத பான மேமூல ...... அனல்மூள

அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
     அரிச தான சோபான ...... மதனாலே

எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
     மெளிது சால மேலாக ...... வுரையாடும்

எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
     இதய பாவ னாதீத ...... மருள்வாயே

விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு
     விபுத மேக மேபோல ...... வுலகேழும்

விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
     வெகுவி தாமு காகாய ...... பதமோடிக்

கமல யோனி வீடான ககன கோள மீதோடு
     கலப நீல மாயூர ...... இளையோனே

கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில்
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல ... பிராண வாயு
மேற்கொண்டு செல்லாதபடி மூலாதார* கமலத்தின் மீது அங்ஙனம்
செய்ததின் மூலம்

அமுத பானமே மூல அனல் மூள ... அமுத பானம் பருகும்படி
மூலாக்கினி சுடர் விட்டு எழ,

அசைவுறாது பேராத விதமும் மேவி ஓவாது ... மனம், வாக்கு,
காயம் இவை மூன்றும் சலனமில்லாமல் நெகிழாதபடி ஒரு நிலையில்
இருந்து சிறிதும் மாறாமல்,

அரிச(ம்) அதான சோபானம் அதனாலே ... மகிழ்ச்சி தருவதான
படிப்படியாக மேலேறும் யோக முறையாலே,

எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம் ... நமனையும்
தாக்குவது போல் ஆகாயம் வரை பறந்து போகும் மனத்தின் தன்மை

எளிது சால மேலாக உரையாடும் ... மிகவும் எளிதான வகையில்
மேலெழுந்து ஆணவத்துடன் பேசுகின்ற

எனது யானும் வேறாகி ... எனது என்ற மமகாரமும், நான் என்ற
அகங்காரமும் நீங்கி,

எவரும் யாதும் யான் ஆகும் ... பிற பொருள்கள் யாவும் நானே
ஆகக்கூடிய

இதய பாவன அதீதம் அருள்வாயே ... மனோ பாவத்திற்கு எட்டாத
பெரு நிலையைத் தந்து அருள்வாயாக.

விமலை தோடி மீதோடு யமுனை போல ... பரிசுத்தமான
தேவியின் தொடி என்னும் கை வளையினின்றும் (மேலெழுந்து வந்த)
யமுனை நதி போலவும்**,

ஓர் ஏழு விபுத மேகமே போல ... ஒப்பற்ற, எங்கும் வியாபித்திருக்கும்
தன்மை வாய்ந்த, மேகத்தைப் போலவும்,

உலகு ஏழும் விரிவு காணும் மாமாயன் முடிய நீளு மாறு
போல
... ஏழு உலகங்களின் பரப்பையும் காணவல்ல பெரிய திருமால்
(அண்டங்களின்) முழுமையும் எட்டும்படி விசுவ ரூபம் எடுத்தது
போலவும்,

வெகு விதா முக ஆகாய பதம் ஓடி ... பல திசைகளின் அளவுக்கும்,
ஆகாய அளவுக்கும் ஓடிச் சென்று,

கமல யோனி வீடான ககன கோள மீது ஓடும் ... (திருமாலின்
உந்தித்) தாமரையில் உதித்த பிரமனின் இருப்பிடமான விண்ணில் உள்ள
பிரம்ம மண்டலத்தின் மீதும் ஓடுகின்ற

கலப நீல மாயூர இளையோனே ... நீலத் தோகை விளங்கும் மயில்
வாகனனே, என்றும் இளையவனே,

கருணை மேகமே தூய கருணை வாரியே ... கருணை மேகமே,
பரிசுத்தமான கருணைக் கடலே,

ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே. ... முடிவில்லாத
கருணையை உடைய மேரு மலையே, தேவர்கள் போற்றும் பெருமாளே.


* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்



மணிபூரகம்



அநாகதம்



விசுத்தி



ஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்



மேல்வயிறு



இருதயம்



கண்டம்



புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே


பூதம்

மண்


அக்கினி



நீர்



காற்று



ஆகாயம்



மனம்






வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்


அக்ஷரம்

ஓம்


ந(கரம்)



ம(கரம்)



சி(கரம்)



வ(கரம்)



ய(கரம்)






தலம்

திருவாரூர்


திருவானைக்கா



திரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்



திருக்காளத்தி



காசி
(வாரணாசி)

திருக்கயிலை




கடவுள்

விநாயகர்


பிரமன்



திருமால்



ருத்திரன்



மகேசுரன்



சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்




** முன்பு உமாதேவியின் திருக்கரங்களில் சிவபிரான் முகத்தைப் புதைக்க,
தேவியின் பத்து விரல்களிலும் வியர்வை சிந்தி அவையே கங்கை, யமுனை
முதலிய நதிகளாக ஆயின - சிவபுராணம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.128  pg 3.129  pg 3.130  pg 3.131 
 WIKI_urai Song number: 1048 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 1045 - amala vAyu (common)

amala vAyu vOdAtha kamala nApi mElmUla
     amutha pAna mEmUla ...... analmULa

asaivu RAthu pErAtha vithamu mEvi yOvAthu
     arisa thAna sOpAna ...... mathanAlE

emanai mOthi yAkAsa kamana mAma nOpAva
     meLithu sAla mElAka ...... vuraiyAdum

enathi yAnum vERAki evarum yAthum yAnAkum
     ithaya pAva nAtheetha ...... maruLvAyE

vimalai thOdi meethOdu yamunai pOla vOrEzhu
     viputha mEka mEpOla ...... vulakEzhum

virivu kANu mAmAyan mudiya neeLu mApOla
     vekuvi thAmu kAkAya ...... pathamOdik

kamala yOni veedAna kakana kOLa meethOdu
     kalapa neela mAyUra ...... iLaiyOnE

karuNai mEka mEthUya karuNai vAri yEyeeRil
     karuNai mEru vEthEvar ...... perumALE.

......... Meaning .........

amala vAyu OdAtha kamala nApi mEl mUla: Holding the air of life (oxygen) without letting it go past the lotus in the MUlAdhAra Centre*

amutha pAnamE mUla anal mULa: the sparkling fire in that MUladhAra Centre should be ignited, with nectar springing up for me to imbibe;

asaivuRAthu pErAtha vithamum mEvi OvAthu: without even the slightest motion, my mind, speech and action must remain focussed;

arisa(m) athAna sOpAnam athanAlE: enthralling, and rising step by step, the bliss should climb up through the yOgA process;

emanai mOthi AkAsa kamanamAm manOpAvam: my mental vigour should soar skyhigh, enabling me to thrash even the God of Death (Yaman);

eLithu sAla mElAka uraiyAdum enathu yAnum vERAki: my typical glib and arrogant speech indicating selfish possessiveness, and my haughty egoism should be removed;

evarum yAthum yAn Akum: all other people and things should become me;

ithaya pAvana atheetham aruLvAyE: and will You kindly grant me such an exalted state that is beyond the grasp of my mind?

vimalai thOdi meethOdu yamunai pOla: Like the River Yamuna** gushing from the bangle of the pure Goddess PArvathi,

Or Ezhu viputha mEkamE pOla: like the unmatched, all-pervading cloud,

ulaku Ezhum virivu kANum mAmAyan mudiya neeLu mARu pOla: and like the powerful mystic, Lord Vishnu, capable of looking at the expanse of the seven worlds, rising skyhigh (in His viswarUpam) to reach the boundary of the universe,

veku vithA muka AkAya patham Odi: It (Your Peacock) ran the entire length in all directions and up to the sky,

kamala yOni veedAna kakana kOLa meethu Odum: reaching the World of BrahmA, who emerged from the lotus on Vishnu's belly;

kalapa neela mAyUra iLaiyOnE: such a powerful Peacock, with blue feathers, is Your vehicle, Oh Young Lord!

karuNai mEkamE thUya karuNai vAriyE: You are compassionate as the showering cloud! You are like the pure ocean full of mercy!

eeRu il karuNai mEruvE thEvar perumALE.: You are an endless source of kindness like the Great Mount Meru! You are the Lord of all the celestials, Oh Great One!


* The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart:

ChakrA

mUlAthAram


swAthishtAnam



maNipUragam



anAgatham



visudhdhi



AgnyA


Bindu chakkaram
(DhwAdhasAntham,
SahasrAram,
Brahma-ranthiram)

Body Zone

Genitals


Belly-button



Upper belly



Heart



Throat



Between the
eyebrows

Over
the skull



Element

Earth


Fire



Water



Air



Sky



Mind






Shape

4-petal lotus
Triangle

6-petal lotus
Lingam
Square

10-petal lotus
cobra in box
central circle

12-petal lotus
Triangle
lotus circle

16-petal lotus
Hexagon
central circle

3-petal lotus


1008-petal
lotus


Letter

Om


na



ma



si



va



ya






Temple

ThiruvArUr


ThiruvAnaikkA



Thiru
aNNAmalai


Chidhambaram



ThirukkALaththi



VaranAsi
(kAsi)

Mt. KailAsh



Deity

VinAyagar


BrahmA



Vishnu



RUdhran



MahEswaran



SathAsivan


Siva-Sakthi
Union



** Once, Lord SivA pressed His face in both hands of UmAdEvi. The resultant sweat ran through the ten fingers of DEvi gushing along Her bangles, forming ten perennial rivers of the Himalayas, like Ganga, Yamuna, Brahmaputhra etc. - SivapurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1045 amala vAyu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]