பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 121 வடக்கே உள்ளதும், (பராரை) பருத்த அடிப் பாகத்தை உடையதும், சிறப்புற்றதுமான மேரு மலையை (எடா) எடுத்து (நடா) (மத்தாக நட்டு - (மோது) அலை மோதுவதும், மகர மீன்களைக் கொண்டதுமான (வாரி) கடல், ஒரு ஏழினின்றும் (ஏழு கடலினின்றும்) அமுது வரும்படி - * (மகுடங்களை உடைய) மணி முடிகளை உடையதும், ஒளி பொருந்தியதுமான (அரா) வாசுகி (அல்லது ஆதிசேஷன்) என்னும் பாம்பின் உடல் நோவும்படியும், (மதியம் தூண்ாகச் சாத்தப்பட்ட சந்திரனுடைய (உடல்) நோவவும் (வாரீச வணிதை தாமரையில் வீற்றிருக்கும் தேவி இலக்குமி (மேவு) விரும்பும் (தனது) தோள்கள் ஆயிரமும் நோவுறும் படியும் (கடலைக் கடைந்த ஆதிமூர்த்தி (கோபாலன்) திருமாலின் மருகனே சூலாயுதத்தை ஏந்துபவரும், (பிரம) கபாலத்தை ஏந்துபவரும், (ஆன சிவபிரானது) பிள்ளையே காட்டில் வாசம் செய்பவர்களும், வேல் பிடித்த கையர்களுமான வேடர்களின் பெண் கொடியான வள்ளியின் தலைவனே (கணவனே) (கனக லோகம்) பொன்னுலகமாம் தேவர் உலகைப் பரிபாலித்த அரசே எல்லா லோகங்களுக்கும் ஆதரவாயுள்ளவனே! கருணை மகா மலையே! தேவர் பெருமாளே! (உபய பாதம் அருள்வாயே) TO48. (அமல வாயு) மாசு அற்ற பிராண வாயு (ஓடாத) மேற்கொண்டு செல்லாதபடி (கமல நாபி மேல்) மூலாதார கமலத்தின் மீது ஒடுங்க வைத்து - (மூல) அங்ங்னம் செய்ததின் மூலமாக (அமுத பானமே) அமுத பான்ம் பருகும்படி (மூல அனல் மூள) மூலாக்கினி சுடர்விட்டு எழ (அசைவுறாது பேராத விதம் மேவி) மனம், வாக்கு காயம் இவை மூன்றும் சலனமில்லாமலும் - அசைதலில்லாமலும் (அப்படி இப்படி) நெகிழாத படியும் ஒரு நிலையில் ந்து - (€) அங்ங்ணம் நின்ற நிலையினின்றும் நீங்காமல் - (அரி சதான) - அரிசு அதான - (தேன் போன்ற) (அல்லது அரிசம் அதான) மகிழ்ச்சி தருவதான, (சோபானம் அதனாலே) - படிப்படியாக மேலேறும் (யோக) (சிவயோக) முறையாலே f அமுத பானம் - பாடல் 647 அடி 4 பார்க்க # மூல அனல் மூள பாடல் 647 அடி பார்க்க