பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 123 (எமனை மோதி) யமனையும் தாக்குவதுபோல மேலெழுந்து, (ஆகாச கமனமாம்) ஆகாசம் வரைக்கும் பறந்து செல்லும் உயர உயரப் பறக்கும் வேகம் வாய்ந்த (மனோபாவம்) மனத்தின் தன்மை (எளிது சால சால - மிகவும் எளிதான வகையில் (மேலாக உரையாடும்). மேலெழுந்து அகங்காரத்துடன் பேசுகின்ற (எனது) என்னுடையது என்னுடையது என்னும் மமகாரமும், (யானும்) நான் நான் என்னும் அகங்காரமும் (புறப்பற்று அகப்பற்று இரண்டும்) (வேறாகி) நீங்கி, (எவரும் யாதும் யானாகும்) பிறர் யாவரும், பிற பொருள்கள் எவையும், யானாகும் - நானே என்னும் (அருமையுடன்) பாவிக்கும் உயர் நிலையை அடைந்து விளங்குவதான (இதய பாவனா தீதம்) மனோ பாவனா தீத நிலையை - மனோபாவத்துக்கு எட்டாத பெரு நிலையைத் தந்தருளுவாயாக (விமலை) பரிசுத்தமான தேவி - பார்வதி தேவியின் (தோடி மீதோடு) தொடி என்னும் கை வளையினின்றும் (கைகளினின்றும்) மேலேழுந்து ஓடி வந்த யமுனை நதி போலவும், ஒப்பற்ற ஏழு (வி.புது எங்கும் வியாபிக்கும் தன்மை வாய்ந்த மேகங்களைப் போலவும், உலகங்கள் ஏழின் ஏழு உலகங்களின் (விரிவு காணும்) பரப்பையும் காணவல்ல (மா) கரு நிறம் வாய்ந்த (மாயன்) திருமால் முடிய நீளு மாறு போல, (அண்டங்கள் முழுமையும் எட்டும்படி) விசுவ ரூபம் எடுத்தது போலவும், (வெகுவித முக ஆகாய பதம் ஓடி) பல திசைகளின் அளவுக்கும், ஆகாய அளவுக்கும் ஓடிச் சென்று (கமல யோனி) (திருமாலின்) (உந்தித் தாமரையில் உதித்த பிரமாவின் (வீடான) இருப்பிடமான (ககன கோளம்) விண்ணில் உள்ள மண்டலத்தின் மீதும் ஓடுகின்ற (கலப நீல மாயூர) (நீல கலப மாயூர) நீலத் தோகை விளங்கும் மயில் வாகனனே! (என்றும்) இளையவனே! கருணை மேகமே பரிசுத்தமான கருணைக் கடலே (ஈறில்) முடிவிலாத கருணைப் பெருமலையே தேவர்களின் பெருமாளே! (எனது யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவனாதீதம் அருள்வாயே)