திருப்புகழ் 990 ஆலையான மொழிக்கு  (வாகைமாநகர்)
Thiruppugazh 990 AalaiyAnamozhikku  (vAgaimAnagar)
Thiruppugazh - 990 AalaiyAnamozhikku - vAgaimAnagarSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தான தனத்த, தான தான தனத்த
     தான தான தனத்த ...... தனதான

......... பாடல் .........

ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு
     மால கால விழிக்கு ...... முறுகாதல்

ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு
     மார பார முலைக்கு ...... மழகான

ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு
     மோரை சாயு மிடைக்கு ...... மயல்மேவி

ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி
     லூர வோடு விருப்பி ...... லுழல்வேனோ

வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு
     மீறு காத லளிக்கு ...... முகமாய

மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து
     மீள வாய்மை தெளித்து ...... மிதண்மீது

மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து
     வாயி லூறல் குடித்து ...... மயல்தீர

வாகு தோளி லணைத்து மாக மார்பொ ழிலுற்ற
     வாகை மாந கர்பற்று ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆலை ஆன மொழிக்கும் ஆளை ஊடு கிழிக்கும் ஆல கால
விழிக்கும் உறு காதல் ஆசை மாதர் அழைக்கும் ஓசையான
தொனிக்கும்
... கரும்பு போல் இனிக்கும் பேச்சுக்கும், ஆளையே
ஊடுருவி அறுக்கும் ஆலகால விஷம் போன்ற கண்களுக்கும், காம
இச்சை என்னும் ஆசையைக் கொண்ட விலைமாதர்கள் அழைக்கின்ற
ஓசை கொண்ட குரலின் தொனிக்கும்,

ஆர பார முலைக்கும் அழகான ஓலை மேவு குழைக்கும்
ஓடை யானை நடைக்கும் ஓரை சாயும் இடைக்கும் மயல்
மேவி
... முத்து மாலை அணிந்த பாரமான மார்பகங்களுக்கும், அழகிய
காதோலைக்கும், பொருந்திய குண்டல அணிக்கும், நெற்றிப்பட்டம்
அணிந்துள்ள பெண் யானையின் நடை போன்ற நடைக்கும், குரவைக்
கூத்தில் சாய்வது போல சாய்ந்துள்ள இடுப்புக்கும் நான் மோகம்
கொண்டவனாகி,

ஊறு பாவு அவ் உறுப்பில் ஊறல் தேறு(ம்) கரிப்பில் ஊர ஓடு
விருப்பில் உழல்வேனோ
... காம ஊறல் பரவும் அந்த இதழாகிய
உறுப்பிலும், அந்த ஊறலை அறியும் காரமான அநுபவத்திலும் நினைவு
கொண்டு வேகமாகச் செல்லும் ஆசையிலேயே அலைச்சல் உறுவேனோ?

வேலையாக வளைக்கை வேடர் பாவை தனக்கு மீறு காதல்
அளிக்கும் முகமாய
... கை வளை விற்கும் வேலை ஆகும் பொருட்டு
வளை விற்கும் செட்டியாய் வேடர் மகளான வள்ளிக்கு மிக்கெழும்
ஆசையை ஊட்டிய மாயம் பூண்ட திருவுருவத்தை உடையவனே,

மேவு வேடை அளித்து நீடு கோலம்* அளித்து மீள வாய்மை
தெளித்தும் இதண் மீது மாலை ஓதி முடித்து மாது தாள்கள்
பிடித்து
... பொருந்திய வேட்கையைக் கொடுத்தும், பெருமை வாய்ந்த
அழகு உருவங்களைக் காட்டியும், இறுதியாக (நீ யார் என்ற) உண்மையை
அறிவித்தும் (தினைப்புனத்தின்) பரண் மீதிலே மலர் மாலையை
வள்ளியின் கூந்தலில் முடித்தும், அந்த மாதாகிய வள்ளியின் பாதங்களை
வருடியும்,

வாயில் ஊறல் குடித்து மயல் தீர வாகு தோளில் அணைத்தும்
மாகம் ஆர் பொழில் உற்ற வாகை மா நகர் பற்று
பெருமாளே.
... அவள் வாயிதழ் ஊறலைப் பருகியும் மோகம் தீர
அழகிய தோள்களில் அவளை அணைத்தும், ஆகாயத்தை அளாவும்
மரங்கள் இருக்கும் சோலைகள் உள்ள வாகை மா நகரில்** (வள்ளியுடன்)
வீற்றிருக்கும் பெருமாளே.


* நீடு கோலம் - வேட்டுவனாக, வேங்கையாக, வளைச் செட்டியாக, விருத்தனாக,
இறுதியில் தெய்வமாகக் கோலங்கள் காட்டியதைக் குறிக்கிறது).


** வாகை மாநகர் செய்யார் அருகே திருவண்ணாமலை மாவட்டத்தில்
திருவோத்தூர் வட்டத்தில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1435  pg 2.1436  pg 2.1437  pg 2.1438 
 WIKI_urai Song number: 994 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 990 - AalaiyAna mozhikku (vAgaimAnagar)

Alai yAna mozhikku mALai yUdu kizhikku
     mAla kAla vizhikku ...... muRukAthal

Asai mAtha razhaikku mOsai yAna thonikku
     mAra pAra mulaikku ...... mazhakAna

Olai mEvu kuzhaikku mOdai yAnai nadaikku
     mOrai sAyu midaikku ...... mayalmEvi

URu pAva vuRuppi lURal thERu karippi
     lUra vOdu viruppi ...... luzhalvEnO

vElai yAka vaLaikkai vEdar pAvai thanakku
     meeRu kAtha laLikku ...... mukamAya

mEvu vEdai yaLiththu needu kOla maLiththu
     meeLa vAymai theLiththu ...... mithaNmeethu

mAlai yOthi mudiththu mAthu thALkaL pidiththu
     vAyi lURal kudiththu ...... mayaltheera

vAku thOLi laNaiththu mAka mArpo zhilutRa
     vAkai mAna karpatRu ...... perumALE.

......... Meaning .........

Alai Ana mozhikkum ALai Udu kizhikkum Ala kAla vizhikkum uRu kAthal Asai mAthar azhaikkum OsaiyAna thonikkum: On their speech that is sweet like the sugarcane, on their eyes filled with AlakAla poison capable of piercing and cutting men to pieces, on the sound of the beckoning voice of these whores filled with desire revealing their lust,

Ara pAra mulaikkum azhakAna Olai mEvu kuzhaikkum Odai yAnai nadaikkum Orai sAyum idaikkum mayal mEvi: on their heavy bosom wearing the string of pearls, on their beautiful ear-ornament, on the matching ear-stud that swings, on their gait like that of a she-elephant adorned with a distinctive gold plate on its forehead and on their bent waist that twirls during a group-dance called kuravai by a group of girls, I have become enamoured with tremendous passion;

URu pAvu av uRuppil URal thERu(m) karippil Ura Odu viruppil uzhalvEnO: on that organ, namely lips, where passionate saliva gushes and on the pungent taste of that saliva, my mind is set, accompanied by a rash desire; am I to roam about in a state of obsession like this?

vElaiyAka vaLaikkai vEdar pAvai thanakku meeRu kAthal aLikkum mukamAya: On a mission of selling bangles, You came as a bangle-merchant and instilled profuse passion in VaLLi, the damsel of the hunters, Oh masquerader of mystic disguise!

mEvu vEdai aLiththu needu kOlam* aLiththu meeLa vAymai theLiththu ithaN meethu mAlai Othi mudiththu mAthu thALkaL pidiththu: Dispensing appropriate desire, revealing many of Your famous disguises and ultimately disclosing to her the truth of Your real identity, You adorned her hair, standing on a raised platform (over the field of millet), with a garland of flowers and caressed the feet of VaLLi!

vAyil URal kudiththu mayal theera vAku thOLil aNaiththum mAkam Ar pozhil utRa vAkai mA nakar patRu perumALE.: Imbibing the saliva gushing from her mouth and quenching Your passion by hugging her tightly to Your broad shoulders, You took Your seat (along with VaLLi) in the famous town, VAkainakar**, surrounded by groves with tall trees reaching the sky, Oh Great One!


* needu kOlam - The several disguises of Lord Murugan were the hunter, the neem tree, the bangle-merchant, the old man and ultimately as He Himself.


** VAkaimAnakar is near SeyyAr in the ThiruvOththUr Taluk of ThiruvaNNAmalai district.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 990 AalaiyAna mozhikku - vAgaimAnagar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]