பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசுவை திருப்புகழ் உரை 879 மலர் மாலையை வள்ளியின் கூந்தலிலே முடித்தும், (அந்த) மாது வள்ளியின் காலை வருடியும், அவள் :* ஊறலைப் பருகியும் மோகம் திர - அழகிய தோள்களில் (அவளை) அனைத்தும், ஆகாயத்தை அளாவும் சோலைகள் உள்ள வாகை மாநகரில் விந்து விருப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே! (விருப்பில் உழல்வேனோ) 7. விசுவை 995. திருகுபில்லை அணிந்துள்ள கூந்தலை (வகிர்ந்து) வாரி வகுத்து, முடியில் மலர் அணிந்து, ஒருவகையான அழகு விளங்கச் செய்வதால் வரும் சிறப்பான முகம் விளக்கம்தர, கொங்கைகள் குலுங்க வருகின்ற, மோகத்தைத் தரும் மாதர்களின் வலையிலே விழுந்து, அறிவு மெலிவுற்று, (நான்) சோர்வு அடையாமல் தெளிவாக்குகின்றன. மேலும் பாடல் 819-ல் வட விஜயபுரந்தனில் மேவிய பெருமாளே." என்ற அடியில், வட என்ற குறிப்புளதால் இந்தத் தலம் விஜயவாடா ЕТТЕПТЕТ இப்போது வழங்கும் (Веzwada) என்று தோன்றுகின்றது. இங்கே மலையடிவாரத்தில் அறுமுகனார் கோயில் ஒன்று இருக்கின்றது. அருட்கவி சேதுராமனார் அந்த முருகரைத் (22.8-1954 தேதியில்) தரிசித்தபொழுது பின்வரும் அடிகள் அவர் பாடல்களில் உதித்துள. 1. "அஜவாகன லக்ஷண உத்தர விஜயாபுரி மெத்தவு மெச்சிய மந்தகாசா" 2. "கிருட்டி ணாநதி நீளலை மோதிட வடக்கில் வாழ்விஜ யாபுரி மேவிய பெருமாளே." மேலும், இந்த வட விஜயபுரத்தைத்தான் அருணகிரியார் பாடியுள்ளளார் என்பதும். அருணகிரி பரவுமலை அடிவாரத். தறுமுகவ விஜயபதி மருகோனே: வருமடியர் தொழுதமயில் மிசையோனே! வட விஜய புரமருவு பெருமாளே." என வரும் சேதுராமனார் வாக்கால் தெளிவாகின்றது.