திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 985 அமல கமல உரு (இந்தம்பலம்) Thiruppugazh 985 amalakamalauru (indhambalam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதனன தந்தந் தனத்ததன தனன தனதனன தந்தந் தனத்ததன தனன தனதனன தந்தந் தனத்ததன ...... தனதான ......... பாடல் ......... அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய லளவு மசலமது கண்டங் கொருத்தருள ...... வறியாத தகர முதலுருகொ ளைம்பந் தொரக்ஷரமொ டகில புவனநதி யண்டங் களுக்குமுத லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் ...... நடுவான கமல துரியமதி லிந்துங் கதிர்ப்பரவு கனக நிறமுடைய பண்பம் படிக்கதவ ககன சுழிமுனையி லஞ்சுங் களித்தமுத ...... சிவயோகம் கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது கனிவு வரஇளமை தந்துன் பதத்திலெனை ...... யருள்வாயே திமிலை பலமுருடு திந்திந் திமித்திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த ...... திகுதீதோ செகண செகணசெக செஞ்செஞ் செகக்கணென அகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகு திமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர் ...... களமீதே அமரர் குழுமிமலர் கொண்டங் கிறைத்தருள அரிய குருகுகொடி யெங்குந் தழைத்தருள அரியொ டயன்முனிவ ரண்டம் பிழைத்தருள ...... விடும்வேலா அரியின் மகள்தனமொ டங்கம் புதைக்கமுக அழகு புயமொடணை யின்பங் களித்துமகிழ் அரிய மயிலயில்கொ டிந்தம் பலத்தின்மகிழ் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அமல கமல உரு சங்கம் தொனித்த ... மாசு இல்லாததாய், (ஆறு ஆதாரங்ளுக்கு அப்பால் உள்ளதாய் 1008 இதழோடு கூடிய) தாமரையாகிய ஹஸ்ரார* குருகமல உருவிடத்தே (பிராணவாயுவைச் செலுத்தி அப்போது உண்டாகும்) சங்க நாதம் ஒலிக்க, மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல் அளவும் அசலம் அது கண்டு ... அற்புதமான ஆகாச வெளி எங்கணும் பொலிவுறும் செயலை அளவிட்டு அறியும் நிலை பெற்றதான தன்மையை ரகசியமாய் உணர்ந்தும், அங்கு ஒருத்தரு(ம்) உளவு அறியாதது ... அவ்விடத்தில் எவராலும் தனது உண்மைத் தன்மையை அறிய முடியாததாகும். அகர முதல் உரு கொள் ஐம்பந்தொரு அக்ஷரமொடு ... (வடமொழியில்) உயிரும் மெய்யும் ஆகிய உருக் கொண்டுள்ள அகராதி 51 அக்ஷரங்களுக்கும், அகில புவன நதி அண்டங்களுக்கும் முதல் அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று ... சகல லோகங்களுக்கும், ஆறுகளுக்கும், அண்டங்களுக்கும் முதன்மை பெற்றதாய், செந்நிறச் சுத்த ஜோதிப் பேரொளியை எல்லா இடங்களிலும் வீசிப் பொருந்தியதாய், முதல் நடுவான கமல துரியம் அதில் ... முதலும் நடுவுமான யோகியர் தன் மயமாய் நின்று தியானிக்கும் உயர் நிலையான (பிரமரந்திரம் என்ற) பேரின்ப கமலத்தில், இந்தும் கதிர்ப் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி(க)க் கதவம் ககனம் ... சந்திரனுடைய காந்தி பரந்துள்ளதும், பொன்னொளி வீசும், அழகிய ஸ்படிக நிறமான சுத்த வாயிலைக் கொண்டதுமான ஆகாய வெளியில், சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம் ... சுழி முனை நாடியின்** உச்சியில, (மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்) ஐந்து இந்திரியங்களும் இன்பம் பெறக் கூடியதாய் அமுதம் போல் விளங்கும் சிவ யோக நிலையை கருணை உடன் அறிவு இதம் கொண்டிட ... உனது கருணையினால் அறியும்படியான வழியை (நான்) அடைவதற்கு, கவுரி குமர குமர குரு என்று என்று உரைப்ப ... பார்வதியின் குமரனே, குமர குருவே என்றென்று பல முறை கூற முது கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே ... முதிர்ந்து கனிந்த பக்தி நிலை வர, அதற்கு வேண்டிய இளமை வலிமையைத் தந்து, உன் திருவடியில் என்னை சேர்த்துக் கொள்ளுவாயாக. திமிலை பல முருடு ... பறையும், பலவிதமான மத்தள வகையும் திந்திந் திமித் திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதீதோ செகண செகண செக செம் செம் செகக்கண என ... (அதே) தாளத்துக்கு ஏற்ப ஒலிக்கவும், அகில முரகன் முடி அண்டம் பிளக்க வெகு திமிர்த(ம்) குல விருது சங்கம் தொனித்து ... ஆதிசேஷனின் முடிகளும், அண்டங்களும் பிளந்து போகும்படி மிக்க பேரொலியை எழுப்பும் வெற்றிச் சின்னங்களை சங்கங்கள் முழங்க, அசுரர் களம் மீதே அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள ... அசுரர்கள் சண்டை செய்து மடிந்த போர்க்களத்தில் தேவர்கள் ஒன்று கூடி மலர்களைக் கொண்டு அங்கு பூமாரி பொழிய, அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள ... அருமை வாய்ந்த கோழிக் கொடி எங்கும் சிறப்பாக விளங்க, அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா ... திருமாலும், பிரமனும், முனிவர்களும், அண்டங்களும் பிழைத்து உய்ய, வேலாயுதத்தைச் செலுத்தியவனே, அரியின் மகள் தனமொடு அங்கம் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் ... திருமாலின் மகளான வள்ளியின் மார்பகங்களில் உனது உடல் புதையும்படி, திருமுக அழகுடன் திருத்தோள்களால் அவளை அணைத்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்து, அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே. ... அருமை வாய்ந்த மயிலுடனும், வேலாயுதத்துடனும் இந்தம்பலம்*** என்ற ஊரில் ஆனந்தமாக அமர்ந்த பெருமாளே. |
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. | ||||||
ஆதாரம் மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞா பிந்து சக்கரம் (துவாதசாந்தம், ஸஹஸ்ராரம், பிரமரந்திரம்) | இடம் குதம் கொப்பூழ் மேல்வயிறு இருதயம் கண்டம் புருவத்தின் நடு கபாலத்தின் மேலே | பூதம் மண் அக்கினி நீர் காற்று ஆகாயம் மனம் | வடிவம் 4 இதழ் கமலம் முக்கோணம் 6 இதழ் கமலம் லிங்கபீடம் நாற் சதுரம் 10 இதழ் கமலம் பெட்டிப்பாம்பு நடு வட்டம் 12 இதழ் கமலம் முக்கோணம் கமல வட்டம் 16 இதழ் கமலம் ஆறு கோணம் நடு வட்டம் 3 இதழ் கமலம் 1008 இதழ் கமலம் | அக்ஷரம் ஓம் ந(கரம்) ம(கரம்) சி(கரம்) வ(கரம்) ய(கரம்) | தலம் திருவாரூர் திருவானைக்கா திரு(வ) அண்ணாமலை சிதம்பரம் திருக்காளத்தி காசி (வாரணாசி) திருக்கயிலை | கடவுள் விநாயகர் பிரமன் திருமால் ருத்திரன் மகேசுரன் சதாசிவன் சிவ . சக்தி ஐக்கியம் |
** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு: நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன. 'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம். 'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம். 'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது. 'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன. சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும். |
*** இந்தம்பலம் என்ற ஊர் விபரம் தெரியவில்லை. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1419 pg 2.1420 pg 2.1421 pg 2.1422 WIKI_urai Song number: 989 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 985 - amala kamala uru (indhambalam) amala kamalavuru sangan thoniththamaRai ariya paramaveLi yengum poliththaseya laLavu masalamathu kaNdang koruththaruLa ...... vaRiyAtha thakara muthaluruko Laimpan thoraksharamo dakila puvananathi yaNdang kaLukkumutha laruNa kiraNavoLi yengeng kumutRumuthal ...... naduvAna kamala thuriyamathi linthung kathirpparavu kanaka niRamudaiya paNpam padikkathava kakana suzhimunaiyi lanjung kaLiththamutha ...... sivayOkam karuNai yudanaRivi thangoN didakkavuri kumara kumarakuru venRen Ruraippamuthu kanivu varaiLamai thanthun pathaththilenai ...... yaruLvAyE thimilai palamurudu thinthin thimiththimitha dumuda dumudumuda duNduN dumuttumuda thikuda thikudathiku thinthin thikurththikurtha ...... thikutheethO sekaNa sekaNaseka senjenj sekakkaNena akila murakanmudi yaNdam piLakkaveku thimirtha kulaviruthu sangan thoniththasurar ...... kaLameethE amarar kuzhumimalar koNdang kiRaiththaruLa ariya kurukukodi yengun thazhaiththaruLa ariyo dayanmuniva raNdam pizhaiththaruLa ...... vidumvElA ariyin makaLthanamo dangam puthaikkamuka azhaku puyamodaNai yinpang kaLiththumakizh ariya mayilayilko dintham palaththinmakizh ...... perumALE. ......... Meaning ......... amala kamala uru sangam thoniththa: In the impeccable SahasrAra* lotus centre (with 1008 petals, which is above all the six KuNdalini Centres), the reverberation of the conch shell is heard (when oxygen gushes through); maRai ariya parama veLi engum poliththa seyal aLavum asalam athu kaNdu: even though one perceives secretly the firm phenomenon of expanding brightness in the entire range of the wonderful cosmos, angu oruththaru(m) uLavu aRiyAthathu: no one can discern its true nature over there. akara muthal uru koL aimpanthoru aksharamodu: Above all the fifty-one alphabets, vowels and consonants (of the Sanskrit language), akila puvana nathi aNdangaLukkum muthal aruNa kiraNa oLi engengum utRu: all the worlds, rivers and planets, is this reddish and pure effulgence which pervades all over; muthal naduvAna kamala thuriyam athil: on the lofty and blissful lotus (of Brahmaranthiram) which Yogis, who have transcended the stages of the beginning and the middle, meditate upon, inthum kathirp paravu kanaka niRamudaiya paNpu am padi(ka)k kathavam kakanam: in the cosmic expanse of golden glow, where moonlight is widely spread, and which has a beautiful crystal cloured door, suzhi munaiyil anjum kaLiththa amutha sivayOkam: at the apex of susumnA** vein where all the five sensory organs (skin, mouth, eyes, nose and ears) obtain the nectar-like bliss of Siva-yOgA, karuNai udan aRivu itham koNdida: I wish to experience the same with Your blessing; for that, kavuri kumara kumara kuru enRu enRu uraippa: I must repeatedly chant Your name as "Oh Son of PArvathi, KumarA, Oh Master!" muthu kanivu vara iLamai thanthu un pathaththil enai aruLvAyE: For my acquiring matured devotion, You have to grant me the requisite youthful vigour and take charge of me at Your hallowed feet! thimilai pala murudu thinthin thimith thimitha dumuda dumudumuda duNduN dumuttumuda thikuda thikudathiku thinthin thikurththikurtha thikutheethO sekaNa sekaNa seka sem sem sekakkaNa ena: The drums and other percussion instruments were beaten (to this meter). akila murakan mudi aNdam piLakka veku thimirtha(m) kula viruthu sangam thoniththu: the hoods of the serpent, AdhisEshan, and all the planets were about to be ripped open by the loud noise from the conch shells proclaiming victory; asurar kaLam meethE amarar kuzhumi malar koNdu angu iRaiththu aruLa: on the battlefield where the demons fought and died, all the celestials gathered together and showered flowers; ariya kuruku kodi engum thazhaiththu aruLa: the rare staff of Rooster was displayed prominently everywhere; ariyodu ayan munivar aNdam pizhaiththu aruLa vidum vElA: VishNu, BrahmA, the sages and all the worlds were rescued when You wielded Your spear, Oh Lord! ariyin makaL thanamodu angam puthaikka muka azhaku puyamodu aNai inpam kaLiththu makizh: You wrapped Your body over the bosom of VaLLi, the daughter of VishNu and happily hugged her with Your hallowed shoulders and radiant face; ariya mayil ayil kodu inthampalaththil makizh perumALE.: and with Your rare peacock and the spear, You are seated with relish in this place called Inthambalam***, Oh Great One! |
* The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart: | ||||||
ChakrA mUlAthAram swAthishtAnam maNipUragam anAgatham visudhdhi AgnyA Bindu chakkaram (DhwAdhasAntham, SahasrAram, Brahma-ranthiram) | Body Zone Genitals Belly-button Upper belly Heart Throat Between the eyebrows Over the skull | Element Earth Fire Water Air Sky Mind | Shape 4-petal lotus Triangle 6-petal lotus Lingam Square 10-petal lotus cobra in box central circle 12-petal lotus Triangle lotus circle 16-petal lotus Hexagon central circle 3-petal lotus 1008-petal lotus | Letter Om na ma si va ya | Temple ThiruvArUr ThiruvAnaikkA Thiru aNNAmalai Chidhambaram ThirukkALaththi VaranAsi (kAsi) Mt. KailAsh | Deity VinAyagar BrahmA Vishnu RUdhran MahEswaran SathAsivan Siva-Sakthi Union |
** In this song, several Siva-yOgA principles are explained: The inhaled air is known as 'pUragam' and the exhaled air is 'rechagam'. The retained air is 'kumbagam'. The oxygen that enters the body climbs up step by step through several centres, known as 'chakrAs' and ultimately reaches 'sahasrAram' or 'bindhuchakram' on the top of the skull. At that point of union, nectar flows from that chakrA and seeps through and soaks the six centres of the body and returns to the basic chakrA, 'mUlAthAram'. Three zones (namely, the sun zone, the moon zone and the fire zone) and ten nerves ('nAdis') govern the six centres; the principal nerves are 'susumna', 'idaikala' and 'pingala'. idakala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the left nostril; pingala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the right nostril; susumna: one of the ten 'nAdis' (nerves), situated between the above two 'nadis', and running through the spinal chord covering all the six centres of 'kundalini'. ('idakala' and 'pingala' are entwined around 'susumna'). If breathing is controlled through a yOgA called 'praNAyAmA', the mind becomes tranquil. |
*** The location of the place, Inthambalam cannot be determined. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |