திருப்புகழ் 969 கார் குழல் குலைந்து  (ஸ்ரீ புருஷமங்கை)
Thiruppugazh 969 kArkuzhalkulaindhu  (Sri purushamangkai)
Thiruppugazh - 969 kArkuzhalkulaindhu - SripurushamangkaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
     தானதன தந்த தந்த ...... தனதானா

......... பாடல் .........

கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து
     காதலுறு சிந்தை யுந்து ...... மடமானார்

காமுகர கங்க லங்க போர்மருவ முந்தி வந்த
     காழ்கடிய கும்ப தம்ப ...... இருகோடார்

பேர்மருவு மந்தி தந்தி வாரணஅ னங்க னங்க
     பேதையர்கள் தங்கள் கண்கள் ...... வலையாலே

பேரறிவு குந்து நொந்து காதலில லைந்த சிந்தை
     பீடையற வந்து நின்ற ...... னருள்தாராய்

ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த
     ஏகமயி லங்க துங்க ...... வடிவேலா

ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்டர்
     ஈடெறஇ ருந்த செந்தில் ...... நகர்வாழ்வே

தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணிந்த கெந்த
     சீரலர்கு ளுந்து யர்ந்த ...... பொழிலோடே

சேரவெயி லங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த
     ஸ்ரீபுருட மங்கை தங்கு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து
அசைந்து
... மேகம் போன்ற கூந்தல் கலைந்து அலை பாய்வதாலும்,
நீண்ட குண்டலங்கள் அதற்கு ஒக்க அசைவுறுதலாலும்,

காதல் உறு சிந்தை உந்து மடமானார் காமுகர் அகம் கலங்க ...
காம இச்சை கொண்ட எண்ணத்தை மேலெழுப்பும் இளம் பெண்கள்
காமுகராகிய ஆடவர் உள்ளம் கலங்கும்படி செய்து,

போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப(ம்) தம்ப(ம்) இரு
கோடார்
... சண்டையிடுவதற்கு முந்தி வந்தது போல முன்னே
எதிர்ப்பட்டு வருவதும், வைரம் போல உறுதியும் கடினமும் கொண்ட,
குடம் போலவும், யானைத் தந்தம் போலவும் உள்ள இரண்டு மலை
போன்ற மார்பகங்களை உடையவர்களின்

பேர் மருவு மந்தி தந்தி வாரணம் அனங்கன் அங்கம்
பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே
... பேரைச்
சொல்லவந்தால் (அவர்களுடைய சேட்டையால்) பெண் குரங்கு,
(அவர்களுடைய விஷத்தன்மையால்) பாம்பு, (அவர்களின் ஆணவத்தால்)
யானை என்று சொல்லத் தக்கவர்கள், மன்மதனுக்கு உறுப்பாக அமைந்த
விலைமாதர்கள் தங்கள் கண்கள் என்னும் வலையாலே,

பேர் அறிவு (உ)குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை
பீடை அற வந்து நின்றன் அருள் தாராய்
... சிறந்த (என்) அறிவு
சிதறிப் போய், மனம் நொந்து காம இச்சையால் அலைபாயும் மனத்தின்
துன்பம் அற்றுப் போக, நீ வந்து உன்னுடைய திருவருளைத் தருவாயாக.

ஏர் மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த
ஏக மயில் அங்க துங்க வடிவேலா
... அழகு பொருந்திய
தண்டையை அணிந்த திருவடி அசைய வருகின்ற கந்தனே, ஒப்பற்ற
(சூரனாகிய) மயிலை* அங்க அடையாளமாகக் கொண்டவனே, கூரிய
வேலை ஏந்தியவனே,

ஏ மன் உமை மைந்த சந்தி சேவல் அணி கொண்டு அண்டர்
ஈடு எ(ஏ)ற இருந்த செந்தில் நகர் வாழ்வே
... பெருமை
பொருந்திய உமா தேவியின் மகனே, (சூரனுடைய இரு கூறில் ஒன்றாய்
உன்னைச்) சந்தித்த* கோழியைக் கொடியாகக் கொண்டு, தேவர்கள்
உய்யும் பொருட்டு வீற்றிருந்த திருச்செந்தூரின் செல்வனே,

தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த சீர் அலர்
குளுந்து உயர்ந்த பொழிலூடே
... தேர்கள் நிரம்பிய நாற்சந்திகள்
கொண்ட வீதிகளை உடையதும், நறு மணம் வீசும் சிறந்த மலர்கள்
குளிர்ச்சியுடன் மேம்பட்டு விளங்கும் சோலைகளுடன்

சேரவெ இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த
ஸ்ரீபுருடமங்கை தங்கு(ம்) பெருமாளே.
... ஒன்று சேரவே
விளங்கும் பரிசுத்தமான தடாகங்கள் பொருந்தியுள்ள ஸ்ரீபுருஷமங்கையில்
(நாங்குநேரியில்**) வீற்றிருக்கும் பெருமாளே.


* முருகனின் வேல் சூரனின் உடலைப் பிளந்ததும் ஒரு பகுதி மயிலாகவும்,
இன்னொரு பகுதி சேவலாகவும் முருகனைச் சரணடைந்தன.


** நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும்
வழியில் 24 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1375  pg 2.1376  pg 2.1377  pg 2.1378 
 WIKI_urai Song number: 973 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 969 - kAr kuzhal kulaindhu (sripurushamangai - nAngunEri)

kArkuzhalku laintha lainthu vArkuzhaiyi saintha sainthu
     kAthaluRu sinthai yunthu ...... madamAnAr

kAmukara kanga langa pOrmaruva munthi vantha
     kAzhkadiya kumpa thampa ...... irukOdAr

pErmaruvu manthi thanthi vAraNA nanga nanga
     pEthaiyarkaL thangaL kaNkaL ...... valaiyAlE

pEraRivu kunthu nonthu kAthalila laintha sinthai
     peedaiyaRa vanthu ninRa ...... naruLthArAy

Ermaruvu thaNdai koNda thALasaiya vantha kantha
     Ekamayi langa thunga ...... vadivElA

Emanumai maintha santhi sEvalaNi koNdu aNdar
     eedeRai runtha senthil ...... nakarvAzhvE

thErukaLmi kuntha santhi veethikaLa Nintha kentha
     seeralarku Lunthu yarntha ...... pozhilOdE

sEraveyi langu thunga vAvika Lisainthi runtha
     sreepuruda mangai thangu ...... perumALE.

......... Meaning .........

kAr kuzhal kulainthu alainthu vAr kuzhai isainthu asainthu: Because of the quivering of the dishevelled and cloud-like hair and because of the long swinging ear-studs swaying in accordance with the movement of the hair,

kAthal uRu sinthai unthu madamAnAr kAmukar akam kalanga: the young girls provoke sensuous thoughts disturbing the minds of passionate young men;

pOr maruva munthi vantha kAzh kadiya kumpa(m) thampa(m) iru kOdAr: thrusting forward in a confrontational manner, their breasts are solid and rugged like diamond, looking like pots, the tusks of an elephant and two mountains;

pEr maruvu manthi thanthi vAraNam anangan angam pEthaiyarkaL thangaL kaNkaL valaiyAlE: if one begins to name these whores, they are like monkeys (because of impetuous pranks), like serpents (because of poisonous nature) and like elephants (because of their arrogance); they serve as the limb of Manmathan (God of Love) spreading the net of their eyes;

pEr aRivu (u)kunthu nonthu kAthalil alaintha sinthai peedai aRa vanthu ninRan aruL thArAy: (falling victim to their spell), my hitherto great intelligence was shattered, and I felt disheartened being tossed about by passionate thoughts; to eradicate my mental agony, kindly come and grant me Your blessings!

Er maruvu thaNdai koNda thAL asaiya vantha kantha Eka mayil anga thunga vadivElA: Oh KanthA, when You come walking, the dainty anklets on Your hallowed feet sway elegantly; as Your symbol, You display the matchless Peacock (* an aspect of SUran) and You hold in Your hand the sharp spear, Oh Lord!

E man umai maintha santhi sEval aNi koNdu aNdar eedu e(E)Ra iruntha senthil nakar vAzhvE: You are the son of UmAdEvi, the Goddess of great eminence; You acclaimed as Your staff, the Rooster (which was another aspect of SUran that came* towards You) and were seated in ThiruchchendhUr as its Treasure for the upliftment of the celestials, Oh Lord!

thErukaL mikuntha santhi veethikaL aNintha kentha seer alar kuLunthu uyarntha pozhilUdE: In the four corners of the wide streets of this town, plenty of chariots are parked; in its groves, fragrant and cool flowers blossom prominently;

sErave ilangu thunga vAvikaL isainthu iruntha sree purudamangai thangu(m) perumALE.: and crystal-pure ponds abound in a neat row in this place, Sri Purushamangai (NAngunEri**), which is Your abode, Oh Great One!


* When Murugan's spear pierced the body of SUran, it split into two parts, one as the Peacock and the other as the Rooster, both of which surrendered to Murugan.


** Sri Purushamangai is now known as NAngunEri, situated 24 miles from Tirunelveli on the route to NAgarkOvil.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 969 kAr kuzhal kulaindhu - Sri purushamangkai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]