பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரீ புருஷமங்கை திருப்புகழ் உரை 817 973. மேகம் போன்ற கூந்தல் கலைந்து அலைவதாலும், நீண்ட குழை அதற்கு ஒக்கவே அசைவுறுவதாலும், காம இச்சை கொண்ட (சிந்தை) எண்ணத்தை மேலெழுப்பும் இளம் பெண்கள். (காமுகர்) காம இச்சை கொண்ட ஆண்களின் உள்ளம் கலங்கும்படிச் சண்டை யிடுவதற்கு முந்தி வந்ததுபோல முன்னே எதிர்ப்பட்டு வருவதும், வயிரம் (உறுதியும்) கடினமும் கொண்ட குடம்போலவும், (தம்பம்) யானைத்தறி (அல்லது கவசம்) போலவும் உள்ள இரண்டு மலையன்ன கொங்கைகளை உடையவர்கள் பேர் கூறப்புகின், மந்தி (அவர் தம் சேஷ்டையால்) பெண்குரங்கு தந்தி (அவர் தம் விஷக் குணத்தால்) பாம்பு, வாரணம் (அவர் தம் மதம் - ஆணவத்தால்) யானை என்னத் தக்கவர்கள், (அனங்கன்) மன்மதனுக்கு (அங்கம்)'படையாய்) உறுப்பு உள்ள பேதையர்கள் மாதர்கள் - இத்தகையோரின் கண்கள் என்னும் வலையாலே சிறந்த என் அறிவு (உகுந்து) சிதறிப்போய், மனம் நொந்து காம இச்சையில் அலைப்பு உண்ட மனத்தின் (பீடை அற) துன்பம் அற்று ஒழிய, நீ வந்து உன்னுடைய திருவருளைத் தந்தருளுக; அழகு பொருந்திய தண்டையை அணிந்த திருவடி அசைய (என்) எதிர் வந்த கந்தனே (ஏக மயில்) ஒப்பற்ற (சூரனாம்) ஒரு மயிலை (அங்க) அடையாளமாக - (அல்லது வாகன) உறுப்பாகக் கொண்டவனே! பரிசுத்தமும் கூர்மையும் கொண்ட வேலனே! (ஏ மன் உமை) பெருமை பொருந்திய உமாதேவியின் பிள்ளையே! (சந்தி) சூரனது இருகூறில் ஒன்றாய் (உன்னைச்) சந்தித்த கோழியை (அணி) கொடியாகக்கொண்டு, தேவர்கள் ஈடேற வீற்றிருந்த செந்தில் நகர்ச் செல்வனே! தேர்கள் நிரம்பின (தெருக்கள்) கூடும் சந்தி இடங்களமைந்த வீதிகளைக் கொண்டதும் நறுமணம் கொண்ட சிறந்த (அலர்) மலர்கள் (குளுந்து) குளிர்ச்சியுடன் மேம்பட்டு விளங்கும் மன்மதனுக்குப் படை மகளிர் - பாடல் 952-பக்கம் 765 குறிப்பு.