திருப்புகழ் 968 ஆடல் மதன் அம்பின்  (ஸ்ரீ புருஷமங்கை)
Thiruppugazh 968 Adalmadhanambin  (Sri purushamangkai)
Thiruppugazh - 968 Adalmadhanambin - SripurushamangkaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தந்த தந்தன
     தானதன தந்த தந்தன
          தானதன தந்த தந்தன ...... தனதான

......... பாடல் .........

ஆடல்மத னம்பின் மங்கைய
     ராலவிழி யின்பி றங்கொளி
          யாரமத லம்பு கொங்கையின் ...... மயலாகி

ஆதிகுரு வின்ப தங்களை
     நீதியுட னன்பு டன்பணி
          யாமல்மன நைந்து நொந்துட ...... லழியாதே

வேடரென நின்ற ஐம்புல
     னாலுகர ணங்க ளின்தொழில்
          வேறுபட நின்று ணர்ந்தருள் ...... பெறுமாறென்

வேடைகெட வந்து சிந்தனை
     மாயையற வென்று துன்றிய
          வேதமுடி வின்ப ரம்பொரு ...... ளருள்வாயே

தாடகையு ரங்க டிந்தொளிர்
     மாமுனிம கஞ்சி றந்தொரு
          தாழ்வறந டந்து திண்சிலை ...... முறியாவொண்

ஜாநகித னங்க லந்தபின்
     ஊரில்மகு டங்க டந்தொரு
          தாயர்வ சனஞ்சி றந்தவன் ...... மருகோனே

சேடன்முடி யுங்க லங்கிட
     வாடைமுழு தும்ப ரந்தெழ
          தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட ...... நடமாடுஞ்

சீர்மயில மஞ்சு துஞ்சிய
     சோலைவளர் செம்பொ னுந்திய
          ஸ்ரீபுருட மங்கை தங்கிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் ...
போருக்கு எழுந்த மன்மதன் வீசும் மலர்ப் பாணங்களாலும்,
விலைமாதர்களின் ஆலகால விஷம் போன்ற கண்களில்,

பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி ...
ஒளி கொண்டு விளங்குவதும், முத்து மாலை அசைவதுமான
மார்பகங்களில் மயக்கம் கொண்டு,

ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் ...
ஆதியாகிய சிவபெருமானுக்கும் குருவாகிய உனது திருவடிகளை
உண்மையுடனும் அன்புடனும் பணிந்து வழிபடாமல்,

மனம் நைந்து நொந்து உடல் அழியாதே ... மனம் சோர்வடைந்து,
வருந்தி என் உடல் அழிவுறாமல்,

வேடர் என நின்ற ஐம்புலன் ... வேடர்கள் போல் நிற்கும் சுவை, ஒளி,
ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து புலன்களின் செயல்களும்,

நாலு கரணங்களின் தொழில் ... மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
என்ற நாலு அந்தக்கரணங்களின் செயல்களும்,

வேறு பட நின்று உணர்ந்து அருள் பெறுமாறு ... என்னைத்
தாக்காத வகையில் நான் வேறுபட்டு நின்று உன்னை உணர்ந்து உன்
அருளைப் பெறும்படி,

என்வேடை கெட வந்து சிந்தனைமாயை அற வென்று ...
என்னுடைய ஆசைகள் அழிய நீ என் எண்ணத்தில் வந்து கலந்து, மாயா
சக்திகள் ஒடுங்கும்படி வெற்றி கொண்டு,

துன்றிய வேத முடிவின் பரம் பொருள் அருள்வாயே ... சிறந்த
வேதங்களின் முடிவில் விளங்கும் மேலான பொருளை உபதேசிப்பாயாக.

தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ... தாடகை
என்னும் அரக்கியின் வலிமையை அழித்து, விளங்குகின்ற பெருமை
வாய்ந்த விசுவாமித்ர முனிவரின் யாகத்தைச் சிறப்புற நடத்திக் கொடுத்து,

ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ... ஒப்பற்ற
(அகலிகையின்) சாபம் நீங்குமாறு (கால் துகள் படும்படி) நடந்து,
(ஜனக ராஜன் முன்னிலையில்) வலிமையான சிவதனுசை முறித்து,

ஒண் ஜாநகி தனம் கலந்த பின் ... இயற்கை அழகு பெற்ற சீதையை
மணம் புரிந்து மார்புற அணைந்த திருமணத்துக்குப் பிறகு,

ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன்
மருகோனே
... அயோத்தியில் தன் பட்டத்தைத் துறந்து, ஒப்பற்ற
(மாற்றாந்) தாயாகிய கைகேயியின் சொற்படி நடந்த
சிறப்பைக்கொண்டவனாகிய இராமனின் மருகனே,

சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ ...
ஆதிசேஷனின் முடிகளும் கலக்கம் கொள்ள, காற்று எங்கும் பரவி வீச,

தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும் சீர் மயில ... தேவர்கள்
களிப்பு மிகுந்து மேற்கிளர்ந்து எழ, நடனத்தைச் செய்யும் அழகிய
பெருமை வாய்ந்த மயிலை வாகனமாகக் கொண்டவனே,

மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம் பொன் உந்திய ... மேகம்
படிந்துள்ள சோலைகள் விளங்குவதும், செவ்விய செல்வம் பெருகி
நிற்பதுவுமான

ஸ்ரீபுருட மங்கை தங்கிய பெருமாளே. ... ஸ்ரீபுருஷமங்கை
(நாங்குநேரி)* என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும்
வழியில் 24 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1371  pg 2.1372  pg 2.1373  pg 2.1374 
 WIKI_urai Song number: 972 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 968 - Adal madhan ambin (sripurushamangai - nAngunEri)

Adalmatha nampin mangaiya
     rAlavizhi yinpi RangoLi
          yAramatha lampu kongaiyin ...... mayalAki

Athiguru vinpa thangaLai
     neethiyuda nanpu danpaNi
          yAmalmana nainthu nonthuda ...... lazhiyAthE

vEdarena ninRa aimpula
     nAlukara Nanga Linthozhil
          vERupada ninRu NarntharuL ...... peRumARen

vEdaikeda vanthu sinthanai
     mAyaiyaRa venRu thunRiya
          vEthamudi vinpa ramporu ...... LaruLvAyE

thAdakaiyu rangka dinthoLir
     mAmunima kamsi Ranthoru
          thAzhvaRana danthu thiNsilai ...... muRiyAvoN

jAnakitha namka lanthapin
     Urilmaku damka danthoru
          thAyarva sanamci Ranthavan ...... marukOnE

sEdanmudi yumka langida
     vAdaimuzhu thumpa ranthezha
          thEvarkaLma kizhnthu pongida ...... nadamAdum

seermayila manju thunjiya
     sOlaivaLar sempo nunthiya
          sreepuruda mangai thangiya ...... perumALE.

......... Meaning .........

Adal mathan ampin mangaiyar Ala vizhiyin: By the arrows of flowers shot by the combative God of Love (Manmathan) and by the venomous eyes of the whores,

piRangu oLi Aram athu alampu kongaiyil mayalAki: I was smitten by lust for their dazzling bosom decorated with swinging pearl necklaces;

Athi guruvin pathangaLai neethiyudan anpudan paNiyAmal: rather than prostrating with love and respect at Your hallowed feet, which feet are those of the Master of the primordial Lord SivA,

manam nainthu nonthu udal azhiyAthE: I was suffering with a drooping and painful heart and a decaying body;

vEdar ena ninRa aimpulan: my five faculties of sense, namely, taste, light, feeling, sound and smell, standing steadily as hunters;

nAlu karaNangkaLin thozhil: and the action of my four mental powers, namely mind, intellect, will and arrogance,

vERu pada ninRu uNarnthu aruL peRumARu: should be prevented from attacking me, and I should be insulated from them in order to realise You and be blessed by You;

envEdai keda vanthu sinthanaimAyai aRa venRu: my desires should be destroyed by Your merging with my thoughts so that I could conquer all the evil and delusory powers;

thunRiya vEtha mudivin param poruL aruLvAyE: then, You must kindly preach to me the crux of the supreme entity that presides upon the sacred VEdAs!

thAdakai uram kadinthu oLir mA muni makam siRanthu: He destroyed the power of the wild demoness ThAdakai; He helped conduct grandly the holy sacrifice by the famous sage ViswAmitrar;

oru thAzhvu aRa nadanthu thiN silai muRiyA: His graceful stride was such that the specks from His heels removed the curse (of the unique woman, Ahalya); He bent the strong Bow of SivA and broke it (in front of King Janaka);

oN jAnaki thanam kalantha pin: He then wedded the naturally beautiful damsel, JAnaki, and embraced her; thereafter,

Uril makudam kadanthu oru thAyar vasanam siRanthavan marukOnE: He renounced the throne of AyOdhyA and undertook to carry out the command of His (step -) mother, KaikEyi; Rama was of such fame, and You are the nephew of that Rama!

sEdan mudiyum kalangida vAdai muzhuthum paranthu ezha: All the hoods of the serpent, AdhisEshan, were shaken and stormy winds blew everywhere

thEvarkaL makiznthu pongida nadamAdum seer mayila: while the celestials jumped up with excitement when You mounted Your vehicle, the dancing peacock!

manju thunjiya sOlai vaLar sem pon unthiya: In this town, clouds hover over the top of the trees in the groves and wealth is abundant;

Sripuruda mangai thangiya perumALE.: this is Sripurushamangai (NAngunEri) which is Your abode, Oh Great One!


* Sri Purushamangai is now known as NAngunEri, situated 24 miles from Tirunelveli on the route to NAgarkOvil.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 968 Adal madhan ambin - Sri purushamangkai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]