திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 963 ஏலப் பனி நீர் (மதுரை) Thiruppugazh 963 Elappanineer (madhurai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானத்தன தானன தானன தானத்தன தானன தானன தானத்தன தானன தானன ...... தனதான ......... பாடல் ......... ஏலப்பனி நீரணி மாதர்கள் கானத்தினு மேயுற வாடிடு மீரத்தினு மேவளை சேர்கர ...... மதனாலும் ஏமக்கிரி மீதினி லேகரு நீலக்கய மேறிய னேரென ஏதுற்றிடு மாதன மீதினு ...... மயலாகிச் சோலைக்குயில் போல்மொழி யாலுமெ தூசுற்றிடு நூலிடை யாலுமெ தோமிற்கத லீநிக ராகிய ...... தொடையாலும் சோமப்ரபை வீசிய மாமுக சாலத்திலு மாகடு வேல்விழி சூதத்தினு நானவ மேதின ...... முழல்வேனோ ஆலப்பணி மீதினில் மாசறு மாழிக்கிடை யேதுயில் மாதவ னானைக்கினி தாயுத வீயருள் ...... நெடுமாயன் ஆதித்திரு நேமியன் வாமன னீலப்புயல் நேர்தரு மேனியன் ஆரத்துள வார்திரு மார்பினன் ...... மருகோனே கோலக்கய மாவுரி போர்வையர் ஆலக்கடு வார்கள நாயகர் கோவிற்பொறி யால்வரு மாசுத ...... குமரேசா கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய சீரற்புத மாநக ராகிய கூடற்பதி மீதினில் மேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஏலப் பனி நீர் அணி மாதர்கள் கானத்தினுமே உறவு ஆடிடும் ஈரத்தினுமே வளை சேர் கரம் அதனாலும் ... வாசனைத் தைலமும், பன்னீரும் பூசும் (கூந்தலை உடைய) விலைமாதர்களின் இசைப் பாடல் மீதும், உறவாடிப் பேசும் அன்பு மொழிகள் மீதும், வளையல் அணிந்த கரங்களின் மீதும், ஏமக் கிரி மீதினிலே கரு நீலக் கயம் ஏறிய நேர் என ஏதுற்றிடு மா தன மீதினும் மயலாகி ... பொன்மலையின் மீது கரிய யானை ஏறியது போன்று பொருந்தினவாய் விளங்கும் பெரிய மார்பகங்களின் மீதும் காம இச்சை கொண்டு, சோலைக் குயில் போல் மொழியாலுமெ தூசு உற்றிடு நூல் இடையாலுமெ ... சோலையில் உள்ள குயிலின் குரல் போன்ற பேச்சுக்களாலும், ஆடை சுற்றியுள்ள நூல் போன்ற இடையாலும், தோம் இல் கதலீ நிகர் ஆகிய தொடையாலும் சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் ... குற்றம் இல்லாத வாழைத் தண்டுக்கு ஒப்பான தொடையாலும், நிலவொளி வீசிடும் அழகிய முகத்தின் மினுக்கு நடிப்பாலும், மா கடு வேல் விழி சூது அ(த்)தினும் நான் அவமே தினம் உழல்வேனோ ... மிக்க விஷம் கொண்ட வேல் போன்ற கூரிய கண்களின் சூதிலும் அகப்பட்டு, நான் வீணாக நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ? ஆலப் பணி மீதினில் மாசு அறும் ஆழிக்கு இடையே துயில் மாதவன் ... விஷம் கொண்ட பாம்பாகிய ஆதிசேஷன் மேல் குற்றம் இல்லாத பாற்கடலிடையே அறிதுயில் கொண்டுள்ள பெரியோன், ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் நெடுமாயன் ... யானையாம் கஜேந்திரனுக்கு அன்புடனே உதவி செய்தருளிய பெரிய மாயவன், ஆதித் திரு நேமியன் வாமனன் நீலப் புயல் நேர் தரு மேனியன் ... ஆதி மூர்த்தியாய் விளங்கும் அழகிய சக்ராயுதன், வாமன அவதாரம் (குறள் வடிவம்) எடுத்தவன், நீல மேகம் போன்ற கரிய நிறம் கொண்டவன், ஆரத் துளவார் திரு மார்பினன் மருகோனே ... மாலையாக துளசியை நிரம்பக் கொண்ட அழகிய மார்பை உடையவன் ஆகிய திருமாலின் மருகனே, கோலக் கய மா உரி போர்வையர் ஆலக் கடு ஆர் கள(ர்) நாயகர் ... அழகிய யானையின் பெரிய உரித்தோலை போர்வையாகக் கொண்டவர், ஆலகால விஷம் நிறைந்த கழுத்தைக் கொண்ட தலைவராகிய சிவபெருமானின் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா ... கண்களினின்று எழுந்த தீப்பொறியால் வெளிவந்த சிறந்த பிள்ளையான குமரேசனே, கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய ... சிறந்த முத்தமிழ்ப் புலவர்கள் விளங்கிய சிறப்பைக் கொண்ட அற்புதமான பெருநகரமாகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே. ... நான்மாடற்கூடலாம் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1361 pg 2.1362 pg 2.1363 pg 2.1364 WIKI_urai Song number: 967 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 963 - Elap pani neer (madhurai) Elappani neeraNi mAtharkaL kAnaththinu mEyuRa vAdidu meeraththinu mEvaLai sErkara ...... mathanAlum Emakkiri meethini lEkaru neelakkaya mERiya nErena EthutRidu mAthana meethinu ...... mayalAkic chOlaikkuyil pOlmozhi yAlume thUsutRidu nUlidai yAlume thOmiRkatha leenika rAkiya ...... thodaiyAlum sOmaprapai veesiya mAmuka sAlaththilu mAkadu vElvizhi cUthaththinu nAnava mEthina ...... muzhalvEnO AlappaNi meethinil mAsaRu mAzhikkidai yEthuyil mAdhava nAnaikkini thAyutha veeyaruL ...... nedumAyan Athiththiru nEmiyan vAmana neelappuyal nErtharu mEniyan AraththuLa vArthiru mArpinan ...... marukOnE kOlakkaya mAvuri pOrvaiyar Alakkadu vArkaLa nAyakar kOviRpoRi yAlvaru mAsutha ...... kumarEsA kUrmuththamizh vANarkaL veeRiya seeraRputha mAnaka rAkiya kUdaRpathi meethinil mEviya ...... perumALE. ......... Meaning ......... Elap pani neer aNi mAtharkaL kAnaththinumE uRavu Adidum eeraththinumE vaLai sEr karam athanAlum: They mix perfumed oil and rose water and apply on their hair; the songs sung by those whores, their sweet and intimate talk, their bangled arms, Emak kiri meethinilE karu neelak kayam ERiya nEr ena EthutRidu mA thana meethinum mayalAki: and their large bosom looking like black elephants mounting golden mounts have made me passionately attached to them; chOlaik kuyil pOl mozhiyAlume thUsu utRidu nUl idaiyAlume: because of their speech, like the cooing of the cuckoos in the grove, their thread-like tender waist wrapped in a cloth, thOm il kathalee nikar Akiya thodaiyAlum sOma prapai veesiya mA muka sAlaththilum: their thigh that looks like unblemished stem of the plantain, the flashy expression of their face shining like the moon, mA kadu vEl vizhi cUthu a(th)thinum nAn avamE thinam uzhalvEnO: and the treachery of their sharp eyes looking like highly poisonous spear, I have been ensnared; am I to roam about daily in this futile manner? Alap paNi meethinil mAsu aRum Azhikku idaiyE thuyil mAdhavan: He is the Great One who slumbers, full of consciousness, on the highly poisonous serpent, Adhiseshan, in the immaculate milky ocean; Anaikku inithAy uthavee aruL nedumAyan: He is the tall mystic who kindly came to the rescue of the elephant, GajEndran; Athith thiru nEmiyan vAmanan neelap puyal nEr tharu mEniyan: He is the primordial Lord holding the disc as a weapon in His hand; He took the incarnation of a dwarf (VAmanan); He has a black complexion like the blueish cloud; Arath thuLavAr thiru mArpinan marukOnE: He wears the garland woven with rich Thulasi leaves on His hallowed chest; You are the nephew of that Lord VishNu! kOlak kaya mA uri pOrvaiyar Alak kadu Ar kaLa(r) nAyakar: He wraps around, like a shawl, the hide of a majestic elephant; His throat has the scar of the ferocious poison, AlakAlam; He is the Leader SivA; kOvil poRiyAl varu mA sutha kumarEsA: out of the fiery sparks emanating from His eyes, You were born as a Great child, Oh Lord KumarA! kUr muththamizh vANarkaL veeRiya seer aRputha mA nakar Akiya: This wonderful and large city is famous for great poets who were well-versed in the three branches of Tamil literature; kUdal pathi meethinil mEviya perumALE.: here, in NAnmAdaRkUdal (Madhurai), You have Your abode, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |