திருப்புகழ் 958 பரவு நெடுங்கதிர்  (மதுரை)
Thiruppugazh 958 paravunedungkadhir  (madhurai)
Thiruppugazh - 958 paravunedungkadhir - madhuraiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனந்தன தனன தனந்தன
     தனன தனந்தன ...... தனதான

......... பாடல் .........

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
     பவனி வரும்படி ...... யதனாலே

பகர வளங்களு நிகர விளங்கிய
     இருளை விடிந்தது ...... நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
     வரிசை தரும்பத ...... மதுபாடி

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
     மகிழ வரங்களு ...... மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி
     அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே

அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
     குறமக ளிங்கித ...... மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும
     களபம ணிந்திடு ...... மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி
     யதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய ... யாவரும் துதிக்கும் நீண்ட
கதிர்களை உடைய சூரியன் உலகுளோர் விரும்பும்படி

பவனி வரும்படி யதனாலே ... உலா வரும் காட்சிதானோ (இந்தத்
திருவடி) என்றும்,

பகர வளங்களு நிகர விளங்கிய ... சொல்லத்தக்க வளப்பங்களுக்கு
ஒப்பாக விளங்குவதும்,

இருளை விடிந்தது நிலவாலே ... இருளைப் போக்கி உதிக்கும்
நிலவொளிதானோ (இந்தத் திருவடி) என்றும்,

வரையினி லெங்கணும் உலவி நிறைந்தது ... மலைகள் தோறும்
எங்கும் உலாவி நிறைந்து

வரிசை தரும்பதம் அதுபாடி ... வரிசையான காட்சியைத் தரும் உன்
திருவடியை நான் பாடி,

வளமொடு செந்தமிழுரைசெய ... சொல் வளம், பொருள் வளத்துடன்
செந்தமிழ்ப் பாக்களால் உன்னைப் புகழ,

அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே ... அப்பாடல்களைக்
கேட்டு அன்பர்கள் அகம் மகிழ, வரங்களைத் தந்து அருள் புரிவாயாக.

அரஹர சுந்தர அறுமுக என்றுனி ... ஹர ஹர, அழகா, ஆறுமுகனே,
என்று உன்னைத் தியானித்து,

அடியர் பணிந்திட மகிழ்வோனே ... அடியார்கள் வணங்க மகிழ்ச்சி
கொள்பவனே,

அசலநெடுங்கொடி அமையுமை தன்சுத ... ஹிமவானின் மகளான
பெருமைவாய்ந்த கொடியைப் போன்ற அம்மை உமாதேவி பெற்ற
பிள்ளையே,

குறமகள் இங்கித மணவாளா ... குறமகள் வள்ளிக்கு இனிமையான
மணவாளனே,

கருதரு திண்புய சரவண ... நினைப்பதற்கு அருமையான திண்ணிய
புயங்களை உடைய சரவணபவனே,

குங்கும களபம் அணிந்திடு மணிமார்பா ... குங்குமமும் சந்தனமும்
சேர்த்து அணியும் அழகிய மார்பனே,

கனக மிகும்பதி மதுரை வளம்பதி ... பொன் மாடங்கள் நிறைந்த
நகராகிய மதுரை என்ற செழிப்பான

யதனில் வளர்ந்தருள் பெருமாளே. ... தலத்தில் விளங்கி வீற்றிருந்து
அருளும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1345  pg 2.1346  pg 2.1347  pg 2.1348 
 WIKI_urai Song number: 962 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 958 - paravu nedungkadhir (madhurai)

paravu nedunkadhir ulagil virumbiya
     bavani varumpadi ...... adhanAlE

pagara vaLangaLu nigara viLangiya
     iruLai vidindhadhu ...... nilavAlE

varaiyinil engaNum ulavi niRaindhadhu
     varisai tharum padham ...... adhupAdi

vaLamodu senthamizh uraiseya anbaru
     magizha varangaLum ...... aruLvAyE

arahara sundhara aRumuga endruni
     adiyar paNindhida ...... magizhvOnE

achala nedung kodi amai umai than sutha
     kuRamagaL ingitha ...... maNavALA

karudharu thiNbuya saravaNa kungkuma
     kaLabam aNindhidu ...... maNimArbA

kanaka migumpadhi madhurai vaLampadhi
     adhanil vaLarndharuL ...... perumALE.

......... Meaning .........

paravu nedunkadhir ulagil virumbiya: (Shall I say that Your holy feet are) like the venerated Sun, spreading its long beams, to the delight of the people in the world,

bavani varumpadi adhanAlE: and moving along its orbit;

pagara vaLangaLu nigara viLangiya iruLai vidindhadhu nilavAlE: or like the moonlight, rightly associated with all praiseworthy prosperities, dispelling the darkness;

varaiyinil engaNum ulavi niRaindhadhu: in the mountains, wherever they are, Your feet prevail consummately and

varisai tharum padham adhupAdi: stand in symmetry. Singing the glory of Your feet,

vaLamodu senthamizh uraiseya: I would like to compose poems in chaste Tamil, rich in diction and meaning,

anbaru magizha varangaLum aruLvAyE: to the ecstasy of all Your loving devotees. Kindly bestow these boons on me!

arahara sundhara aRumuga endruni: "Oh Hara Hara! Oh Handsome One! Oh Six-faced Lord!" - with these thoughtful prayers

adiyar paNindhida magizhvOnE: Your devotees pay obeisance making You happy.

achala nedung kodi amai umai than sutha: You are the son of Mother UmAdEvi, the great creeper-like daughter of Mount Himavan!

kuRamagaL ingitha maNavALA: You are the beloved consort of VaLLi, the damsel of the KuRavAs!

karudharu thiNbuya saravaNa: Oh SarvanA, the prowess of Your strong shoulders is imponderable!

kungkuma kaLabam aNindhidu maNimArbA: On Your broad chest You wear the paste of sandal and vermilion.

kanaka migumpadhi madhurai vaLampadhi adhanil: In this rich town of Madhurai, full of gold-laid terraces

vaLarndharuL perumALE.: You are seated graciously, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 958 paravu nedungkadhir - madhurai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]