திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 957 ஆனைமுகவற்கு (மதுரை) Thiruppugazh 957 AnaimugavaRku (madhurai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான ......... பாடல் ......... ஆனைமுக வற்கு நேரிளைய பத்த ஆறுமுக வித்த ...... கமரேசா ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும் ஆரணமு ரைத்த ...... குருநாதா தானவர் குலத்தை வாள்கொடு துணித்த சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா தாளிணைக ளுற்று மேவியப தத்தில் வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே வானெழு புவிக்கு மாலுமய னுக்கும் யாவரொரு வர்க்கு ...... மறியாத மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க மாமயில் நடத்து ...... முருகோனே தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி சேரமரு வுற்ற ...... திரள்தோளா தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல்கொடு தணித்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஆனைமுக வற்கு நேரிளைய பத்த ... யானைமுக விநாயகனுக்கு நேராகப் பின்தோன்றிய அன்பனே, ஆறுமுக வித்தக அமரேசா ... ஆறு திருமுகங்களை உடைய ஞான வித்தகனே, தேவர்களின் கடவுளே, ஆதியரனுக்கும் வேதமுதல்வற்கும் ... ஆதிதேவன் சிவபிரானுக்கும் வேத முதல்வன் பிரமனுக்கும் ஆரணமுரைத்த குருநாதா ... வேத மந்திரத்தை உபதேசித்த குருநாதனே, தானவர் குலத்தை வாள்கொடு துணித்த ... அசுரர் குலத்தையே வாளினால் வெட்டி வீழ்த்திய சால்சதுர் மிகுத்த திறல்வீரா ... நிறைந்த சாமர்த்தியம் மிகுந்த பராக்கிரமசாலியே, தாளிணைகள் உற்று மேவிய பதத்தில் ... உன் இரு திருவடிகளிலும் வீழ்ந்து பொருந்தும் பதவியில் வாழ்வொடு சிறக்க அருள்வாயே ... நல்வாழ்வோடு நான் சிறந்து விளங்க அருள் புரிவாயாக. வானெழு புவிக்கு மாலும் அயனுக்கும் ... மேல் ஏழு உலகங்களுக்கும்* திருமாலுக்கும், பிரம்மனுக்கும் யாவரொருவர்க்கும் அறியாத ... வேறு யாருக்குமே அறியமுடியாத மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க ... சிறந்த மதுரைத் தலத்து சொக்கேசர் சிவனும், பார்வதியும் மகிழ மாமயில் நடத்து முருகோனே ... அழகிய மயிலின் மீதேறி அதனைச் செலுத்தும் முருகனே, தேனெழு புனத்தில் ... தேன் மிகுந்த வள்ளிமலைத் தினைப்புனத்தில் மான்விழி குறத்தி சேர ... மான் ஒத்த கண்ணாள் குறத்தி வள்ளி உன்னைச் சேரும்படியாக மருவுற்ற திரள்தோளா ... அவளை அணைத்திட்ட திரண்ட புயங்களை உடையவனே, தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை ... தேவர்களது மனத்தில் சூரனைப் பற்றித் தோன்றிய அச்சத்தை வேல்கொடு தணித்த பெருமாளே. ... உன் வேலாயுதத்தால் போக்கிய பெருமாளே. |
* மேல் ஏழு உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹலோகம், தபலோகம், ஜனலோகம், சத்யலோகம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1345 pg 2.1346 WIKI_urai Song number: 961 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 957 - AnaimugavaRku (madhurai) Anaimuka vaRku nEriLaiya baththa ARumuga viththa ...... gamarEsA Adhi aranukkum vEdha mudhal vaRkum AraNam uraiththa ...... gurunAthA dhAnavar kulaththai vALkodu thuNiththa sAlchathur miguththa ...... thiRal veerA thAL iNaigaL utru mEviya padhaththil vAzhvodu siRakka ...... aruLvAyE vAnezhu buvikku mAlum ayanukkum yAvaroru varkkum ...... aRiyAdha mAmadhurai chokkar mAdhumai kaLikka mA mayil nadaththu ...... murugOnE thEnezhu punaththil mAnvizhi kuRaththi sEramaru vutra ...... thiraLthOLA dhEvargaL karuththil mEviya bayaththai vElkodu thaNiththa ...... perumALE. ......... Meaning ......... Anaimuka vaRku nEriLaiya baththa: My dear, You are the immediate younger brother of elephant-faced VinAyagA. ARumuga viththaga amarEsA: You are also the six-faced scholar and the Lord of all DEvAs. Adhi aranukkum vEdha mudhalvarkkum: To the primordial Lord SivA and to BrahmA, presiding over the VEdAs, AraNam uraiththa gurunAtha: You are the Great Master who taught the scriptures! dhAnavar kulaththai vALkodu thuNiththa: Dynasties of the demons were beheaded with the sword sAlchathur miguththa thiRal veerA: of Yours, the shrewdest war-strategist and valorous one! thAL iNaigaL utru mEviya padhaththil: I must surrender at Your two lotus feet and attain the status vAzhvodu siRakka aruLvAyE: so that my life prospers with Your Grace. vAnezhu buvikku mAlum ayanukkum: The seven worlds* of the upper strata, Vishnu and BrahmA, yAvaroru varkkum aRiyAdha: or any one, for that matter, could not perceive the greatness of mAmadhurai chokkar mAdhumai: SivA who resides in Madhurai as Chokkar; He and PArvathi kaLikka mA mayil nadaththu murugOnE: were thrilled when You flew around on the peacock, Oh Muruga. thEnezhu punaththil mAnvizhi kuRaththi: The deer-eyed damsel of KuravAs, namely VaLLi, who resides in the millet-field at VaLLimalai, where honey is abundant, sEramaru vutra thiraLthOLA: was embraced by You with Your strong shoulders! dhEvargaL karuththil mEviya bayaththai: Any fear about SUran that was lurking in the minds of DEvAs vElkodu thaNiththa perumALE.: was removed by Your Spear, Oh Great One! |
* The upper seven worlds are: bUlOgam, bhuvalOgam, suvalOgam, janalOgam, thabOlOgam, mahAlOgam and sathyalOgam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |