திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 956 அலகு இல் அவுணரை (மதுரை) Thiruppugazh 956 alaguilavuNarai (madhurai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனனத் தந்த தானன தனதன தனனத் தந்த தானன தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான ......... பாடல் ......... அலகில வுணரைக் கொன்ற தோளென மலைதொளை யுருவச் சென்ற வேலென அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டரீக அடியென முடியிற் கொண்ட கூதள மெனவன சரியைக் கொண்ட மார்பென அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ கலகல கலெனக் கண்ட பேரொடு சிலுகிடு சமயப் பங்க வாதிகள் கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங் கலைகளு மொழியப் பஞ்ச பூதமு மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென் இலகுக டலைகற் கண்டு தேனொடு மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன் இனிமையி னுகருற் றெம்பி ரானொரு ...... கொம்பினாலே எழுதென மொழியப் பண்டு பாரதம் வடகன சிகரச் செம்பொன் மேருவில் எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ வலம்வரு மளவிற் சண்ட மாருத விசையினும் விசையுற் றெண்டி சாமுக மகிதல மடையக் கண்டு மாசுண ...... முண்டுலாவு மரகத கலபச் செம்புள் வாகன மிசைவரு முருகச் சிம்பு ளேயென மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... அலகு இல் அவுணரை கொன்ற தோள் என ... கணக்கற்ற அசுரர்களைக் கொன்று அழித்த உனது தோளைப் புகழ்ந்தும், மலை தொளை உருவச் சென்ற வேல் என ... கிரெளஞ்ச மலையைத் தொளை படும்படி ஊடுருவிச் சென்ற உனது வேலைப் புகழ்ந்தும், அழகிய கனகத் தண்டை சூழ்வன புண்டரீக அடி என ... அழகிய பொன்னாலாகிய தண்டைகள் சூழ்ந்துள்ள தாமரைபோன்ற உனது திருவடியைப் புகழ்ந்தும், முடியில் கொண்ட கூதளம் என ... வெண்தாளியினது தண்மையான பூவை அணிந்த உனது திருமுடியைப் புகழ்ந்தும், வனசரியைக் கொண்ட மார்பு என ... வேட்டுவச்சியான வள்ளியை அணைந்த மார்பு என்று உனது மார்பைப் புகழ்ந்தும், அறுமுகம் என நெக்கு என்பெலாம் உருக அன்பு உறாதோ ... ஆறுமுகம் என்று உனது ஆறு திருமுகங்களைப் புகழ்ந்தும், உள்ளம் நெகிழ்ந்து என்னுடைய எலும்புகள் எல்லாம் உருகும்படியான அன்பு எனக்குக் கிட்டாதோ? கல கல கல எனக் கண்ட பேரொடு சிலுகிடு சமயப் பங்க வாதிகள் ... கலகலகலவென்று பேரொலியுடன் கண்ட பேர்களுடன் கூச்சலிட்டு சமயக் குற்றங்களை எடுத்துப் பேசி வாதம் செய்வோர்கள் கதறிய வெகு சொல் பங்கம் ஆகிய பொங்கு அளாவும் ... உரக்கக் கத்தும் பல தவறுகள் மிகுந்த, கொதிக்கும் கோபம் நிறைந்த, சொற்களால் ஆகிய கலைகளும் ஒழியப் பஞ்ச பூதமும் ஒழி உற ... பொய்ச் சாத்திர நூல்கள் ஒழிந்து, என் மீது ஐந்து பூதங்களின் செயல்களும் அடங்கி நீங்க, மொழியின் துஞ்சு உறாதன கரணமும் ஒழிய ... சொல்லப் போனால், ஓய்தல் இல்லாத அந்தக்கரணமாகிய மனம் ஒடுங்கி ஒழிய, தந்த ஞானம் இருந்தவாறு என் ... நீ எனக்கு உபதேசித்து அருளிய ஞானத்துக்கு உள்ள பெருமைதான் எத்தனை ஆச்சரியமாய் உள்ளது. இலகு கடலை கற்கண்டு தேனொடும் ... நல்ல விளக்கமுடைய கடலை, கற்கண்டு, தேன் இவைகளுடன் இரதம் உறு தினைப் பிண்டி பாகுடன் ... ருசிகரமான தினை மாவு, வெல்லப் பாகு இவற்றைக் கலந்து இனிமையில் நுகர் உற்ற எம்பிரான் ஒரு கொம்பினாலே ... மகிழ்ச்சியுடன் உண்ணும் விநாயகர் ஒற்றைக் கொம்பால் எழுது என மொழியப் பண்டு பாரதம் ... வியாச முனிவர் எழுதும்படி வேண்ட, முன்பு, பாரதக் கதையை வட கன சிகரச் செம் பொன் மேருவில் ... வடக்கே உள்ளதும் கனத்த உச்சிகளை உடையதுமான செம்பொன் மயமான மேரு மலையில், எழுதிய பவளக் குன்று தாதையை அன்று சூழ வலம் வரும் அளவில் ... எழுதிய பவள மலையைப்போன்ற கணபதி, அன்று தந்தையாகிய சிவபெருமானைச் சுற்றி வந்து வலம் வரும் நேரத்துக்குள், சண்ட மாருத விசையினும் விசையுற்று எண் திசா முக மகிதலம் அடையக் கண்டு ... சூறாவளியின் வேகத்திலும் வேகமாக எட்டு திசையிடங்களைக் கொண்ட உலகம் முழுவதையும் பார்த்து, மாசுணம் உண்டு உலாவு மரகத கலபச் செம் புள் வாகன மிசை வரு முருக ... பாம்பை உண்டு உலாவுகின்றதும், பச்சைத் தோகையைக் கொண்டதும், வலிமையான பக்ஷியுமாகிய மயில் வாகனத்தின் மீது வந்த முருகனே, சிம்புளே என மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு தம்பிரானே. ... சிங்கத்தை அடக்கவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள்ளே (சரபப் பக்ஷியே*) என்று புகழ்ந்து, மதுரைத் தலத்தில் வழிபட்டு தேவர்கள் தொழுகின்ற தம்பிரானே. |
* நரசிம்மராக வந்த விஷ்ணு ஹிரண்யனின் வதைக்குப் பின் வெறி அடங்காமல் திரிந்தார். சிவபிரான் தமது இன்னொரு அம்சமாகிய சரபப்பக்ஷியாக வந்து நரசிம்மரின் ஆணவ ஆட்டத்தை அடக்கினார். முருகனும் அதுபோன்றே ஒரு சிவ அம்சம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1341 pg 2.1342 pg 2.1343 pg 2.1344 WIKI_urai Song number: 960 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 956 - alagu il avuNarai (madhurai) alakila vuNaraik konRa thOLena malaithoLai yuruvac chenRa vElena azhakiya kanakath thaNdai chUzhvana ...... puNdareeka adiyena mudiyiR koNda kUthaLa menavana sariyaik koNda mArpena aRumuka menanek kenpe lAmuru ...... kanpuRAthO kalakala kalenak kaNda pErodu silukidu samayap panga vAthikaL kathaRiya vekusoR panga mAkiya ...... pongaLAvum kalaikaLu mohzhiyap panja pUthamu mozhiyuRa mozhiyit Runju RAthana karaNamu mozhiyath thantha njAnami ...... runthavARen ilakuka dalaikaR kaNdu thEnodum irathamu Ruthinaip piNdi pAkudan inimaiyi nukarut Rempi rAnoru ...... kompinAlE ezhuthena mozhiyap paNdu bAratham vadakana sikarac chempon mEruvil ezhuthiya pavaLak kunRu thAthaiyai ...... yanRuchUzha valamvaru maLaviR chaNda mArutha visaiyinum visaiyut ReNdi sAmuka makithala madaiyak kaNdu mAsuNa ...... muNdulAvu marakatha kalapac chempuL vAkana misaivaru murukac chimpu LEyena mathuraiyil vazhipat tumpa rArthozhu ...... thambirAnE. ......... Meaning ......... alaku il avuNarai konRa thOL ena: Praising the valour of Your shoulders that have destroyed countless demons, malai thoLai uruvac chenRa vEl ena: adoring Your spear that pierced through the Mount Krouncha, azhakiya kanakath thaNdai chUzhvana puNdareeka adi ena: extolling Your lotus feet around which golden anklets embellish their beauty, mudiyil koNda kUthaLam ena: revering Your lush hair wearing the cool koothaLa flowers, vanasariyaik koNda mArpu ena: admiring Your chest that hugged VaLLi, the damsel of the hunters, aRumukam ena nekku enpelAm uruka anpu uRAthO: and hailing Your six holy faces, may I not be blessed with such love that could touch my heart and melt all my bones? kala kala kala enak kaNda pErodu silukidu samayap panga vAthikaL: Those fanatics who quarrel with one and all indiscriminately, making loud noise and finding fault with other religions, kathaRiya veku sol pangam Akiya pongu aLAvum: raise their decibel level high, and shout blistering words full of inaccuracies; kalaikaLum ozhiyap panja pUthamum ozhi uRa: destroying their so-called religious text, a travesty; ending the havoc played on me by the five elements; and mozhiyin thunju uRAthana karaNamum ozhiya: if I may say so, restraining my restless mind and making it perish, thantha njAnam irunthavARu en: You taught me graciously the true spiritual knowledge; how can I describe the greatness of that wonderful knowledge? ilaku kadalai kaRkaNdu thEnodum iratham uRu thinaip piNdi pAkudan: Peanut, sugar candy and honey of top quality are mixed with tasty millet-flour and molten jaggery inimaiyil nukar utRa empirAn: making the favourite food for our Lord VinAyagar which He devours with relish; oru kompinAlE ezhuthu ena mozhiyap paNdu pAratham: He was once requested by Sage VyAsA to write the great epic MahAbhAratham using one of His tusks; vada kana sikaras sem pon mEruvil ezhuthiya pavaLak kunRu: He obliged and wrote the epic sitting on top of the golden-red Mount MEru, which is in the north, having lofty and tall peaks; He was Himself looking like a coral hill! thAthaiyai anRu chUzha valam varum aLavil: One day, before He could circumambulate His Father, Lord SivA, saNda mArutha visaiyinum visaiyutRu eN thisA muka makithalam adaiyak kaNdu: (You set about Your journey) faster than a hurricane going around the entire world in the eight directions, mAsuNam uNdu ulAvu marakatha kalapac chem puL vAkana misai varu muruka: mounted on Your vehicle, the strong peacock, with green feathers, which roams around preying on the snakes, Oh MurugA! chimpuLE ena mathuraiyil vazhipaddu umparAr thozhu thambirAnE.: "You are like the eight-legged huge bird (Saraba)* that is capable of conquering the Lion!" - so the celestials praise You in Mathurai, which is Your abode, Oh Great One! |
* After VishNu took the incarnation of Narasimha -Man-Lion- Combination - and killed HiraNya, He became uncontrollable. Lord SivA assumed the form of an eight-legged humongous bird -Saraba- and tamed the fierce Narasimha. Murugan is also another form of Lord SivA. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |