திருப்புகழ் 946 பக்குவ ஆசார  (திருப்புக்கொளியூர்)
Thiruppugazh 946 pakkuvaAchAra  (thiruppukkoLiyUr)
Thiruppugazh - 946 pakkuvaAchAra - thiruppukkoLiyUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தன தானான தத்தன தானான
     தத்தன தானான ...... தனதான

......... பாடல் .........

பக்குவ வாசார லட்சண சாகாதி
     பட்சண மாமோன ...... சிவயோகர்

பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
     பற்றுநி ராதார ...... நிலையாக

அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
     அப்படை யேஞான ...... வுபதேசம்

அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
     னற்புத சீர்பாத ...... மறவேனே

உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
     வுற்பல வீராசி ...... மணநாற

ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
     யுற்பல ராசீவ ...... வயலூரா

பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
     பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப்

பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
     புக்கொளி யூர்மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பக்குவ ஆசார ... பக்குவமான ஆசார ஒழுக்க நிலையிலே நின்று,

லட்சண சாகாதி பட்சணமா ... சிறப்பான பச்சிலை, மூலிகைகள்
போன்ற உணவையே உண்டு,

மோன சிவயோகர் ... மெளனத் தவநிலையில் நிற்கும் சிவயோகிகள்

பத்தியில் ஆறாறு தத்துவ மேல்வீடு பற்று ... தங்களது பக்தி
மூலமாக முப்பத்தாறு* தத்துவங்களுக்கும் மேற்பட்டதாய் உள்ள
மோக்ஷவீட்டைப் பற்றுவதானதும்,

நிராதார நிலையாக ... எந்தவிதமான பற்றும் இல்லாத நிலையை
நான் அடைவதற்காகவும்,

அக்கணமே மாய துர்க்குணம் வேறாக ... அந்நிலையை நான்
அடைந்ததுமே, மாயமாக வந்து என்னைப் பற்றியுள்ள துர்க்குணங்கள்
யாவும் என்னை விட்டுப் பிரியவும்,

அப்படையேஞானவுபதேசம் ... அந்த ஞான உபதேசமே என்னைக்
காக்கும் ஆயுதமாக மாறி,

அக்கற வாய்பேசு சற்குரு நாதா ... பாசம் யாவும் அற்றுப்போகும்படி
உபதேச மந்திரத்தை வாய்விட்டுக் கூறிய சற்குருநாதனே,

உன் அற்புத சீர்பாத மறவேனே ... உனது அற்புதமான அழகிய
திருவடிகளை நான் என்றும் மறவேன்.

உக்கிர ஈராறு மெய்ப்புயனே ... வலிமைமிக்க பன்னிரு தோள்களை,
உண்மைக்கு எடுத்துக்காட்டான புயங்களை உடையவனே,

நீல உற்பல வீராசி மணநாற ... நீலோத்பல மலர்க் கூட்டங்களின்
நறுமணம் மிகவும் வீசுவதும்,

ஒத்தநி லாவீசு ... பொருந்திய நிலாவின் ஒளி வீசுவதும்,

நித்தில நீராவி உற்பல ராசீவ வயலூரா ... முத்தைப் போல்
தெளிவான நீருள்ள குளங்களில் குவளைகளும், தாமரைகளும்
பூத்திருக்கும் வயலூரின் நாதனே,

பொக்கமி லாவீர விக்ரம ... பொய்யே இல்லாத மெய்யான வீரத்தைக்
கொண்டவனே,

மாமேனி பொற்ப்ரபை யாகார ... அழகிய மேனி பொன்னொளியை
வீசும் தேகத்தை உடையவனே,

அவிநாசிப் பொய்க்கலி போமாறு ... அவிநாசி என்ற தலத்தில்
இந்தக் கலியுகத்தின் பொய்மை நீங்குமாறு

மெய்க்கருள் சீரான ... இறைவன் திருவருளின் புகழ் சிறக்கும்படிச்
செய்த**

புக்கொளி யூர்மேவு பெருமாளே. ... திருப்புக்கொளியூர்***
தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* 96 தத்துவங்கள் பின்வருமாறு:

36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.

ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.


** திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை
உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார்,
வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி,
முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு
உமிழ்ந்தது. இதைத்தான் 'கலியுகத்தின் அருள்' என்று குறிக்கிறார்.


*** திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1317  pg 2.1318  pg 2.1319  pg 2.1320 
 WIKI_urai Song number: 950 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 946 - pakkuva AchAra (thiruppukkoLiyUr)

pakkuva AchAra lakshaNa sAkAdhi
     bakshaNa mA mOna ...... sivayOgar

baththiyil ARAru thaththuva mEl veedu
     patru nirAdhAra ...... nilaiyAga

akkaNamE mAya dhurguNam vERAga
     appadaiyE nyAna ...... upadhEsam

akkaRa vAy pEsu sathguru nAthA un
     aRputha seerppaDam ...... maRavEnE

uggira veerARu mey buyanE neela
     uRpala veerAsi ...... maNa nARa

oththa nilA veesu niththila neerAvi
     uRpala rAjeeva ...... vayalUrA

pokka milA veera vikrama mA mEni
     poR prabai yAkAra ...... avinAsi

poykkali pOmARu meyk karuL seerAna
     pukkoLiyUr mEvu ...... perumALE.

......... Meaning .........

pakkuva AchAra: They conform to a mature and disciplined way of life;

lakshaNa sAkAdhi bakshaNa: their food consists of the choicest herbs and leaves;

mA mOna sivayOgar: they perform penance in silence, and they practise yOgA in SivA's way.

baththiyil ARAru thaththuva mEl veedu: The aim of their devotion is to attain blissful liberation that is beyond the comprehension of the thirty-six tenets*.

patru nirAdhAra nilaiyAga: That is devoid of any attachments, and I would like to attain that very state.

akkaNamE mAya dhurguNam vERAga: As soon as I reach that goal, the baneful qualities possessed by me, caused by delusion, should leave me completely.

appadaiyE nyAna upadhEsam: Your teaching me the True Knowledge will be my only weapon.

akkaRa vAy pEsu sathguru nAthA: That weapon, capable of destroying all my attachments, will have to be in the form of preaching from Your holy mouth, Oh Revered Master!

un aRputha seerppaDam maRavEnE: I shall never forget Your wonderful and hallowed feet.

uggira veerARu mey buyanE: You possess twelve powerful shoulders that symbolise truth.

neela uRpala veerAsi maNa nARa: Fragrant bunches of blue lilies blossom in this place;

oththa nilA veesu niththila neerAvi: there is soothing moonlight, and water in the ponds here are crystal-clear like pearl;

uRpala rAjeeva vayalUrA: this is VayalUr, Your favourite abode, where kuvaLai and lotus flowers abound.

pokka milA veera vikrama: Your prowess is without any falsehood and is truly great!

mA mEni poR prabai yAkAra: Your superb body is of a dazzling gold complexion.

avinAsi poykkali pOmARu meyk karuL seerAna: In AvinAsi, the myth of the Kaliyuga (the present aeon) was destroyed and the truth of God was established**, adding fame to

pukkoLiyUr mEvu perumALE.: ThiruppukkoLiyUr***, where You are seated, Oh Great One!


* The 96 thathvAs (tenets) are as follows:

36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5.

5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos.

35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).


** Once, a little boy went to take a dip in the nearby lake at ThiruppukkoLiyur and was eaten alive by a crocodile. After a year, SundharamUrthy NAyanAr, one of the Four Great Saivites, came to the barren lake and heard about the death of the boy. He sang AvinAsi Pathikam whereupon the lake was filled with water. The crocodile came to the bank of the lake and spat the boy alive, with one year's growth in the body too!


*** ThiruppokkoLiyUr is very close to AvinAsi in Coimbatore District.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 946 pakkuva AchAra - thiruppukkoLiyUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]