திருப்புகழ் 938 சந்திதொறும் நாணம்  (சிங்கை-காங்கேயம்)
Thiruppugazh 938 sandhidhoRumnANam  (singkai-kAngkEyam)
Thiruppugazh - 938 sandhidhoRumnANam - singkai-kAngkEyamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

......... பாடல் .........

சந்திதொறு நாண மின்றியகம் வாடி
     உந்திபொரு ளாக ...... அலைவேனோ

சங்கைபெற நாளு மங்கமுள மாதர்
     தங்கள்வச மாகி ...... அலையாமற்

சுந்தரம தாக எந்தன்வினை யேக
     சிந்தைகளி கூர ...... அருள்வாயே

தொங்குசடை மீது திங்களணி நாதர்
     மங்கைரண காளி ...... தலைசாயத்

தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
     என்றுநட மாடு ...... மவர்பாலா

துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
     மங்களம தாக ...... அணைவோனே

கந்தமுரு கேச மிண்டசுரர் மாள
     அந்தமுனை வேல்கொ ...... டெறிவோனே

கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல
     சிங்கைநகர் மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக
அலைவேனோ
... காலையும் மாலையும் வெட்கம் இல்லாமல் உள்ளம்
சோர்வுற்று வயிறே முக்கிய காரியமாக அலைச்சல் உறுவேனோ?

சங்கை பெற நாளும் அங்கம் உ(ள்)ள மாதர் தங்கள் வசமாகி
அலையாமல்
... தினந்தோறும் அச்சம் கொண்டு, உடல் அழகுள்ள
விலைமாதர்களின் வசப்பட்டுத் திரியாமல்,

சுந்தரமது ஆக எந்தன் வினை ஏக சிந்தை களி கூர
அருள்வாயே
... அழகு பெற, என்னுடைய வினை தொலைந்து ஒழிய,
மனம் மகிழ்ச்சி அடைய, நீஅருள்வாயாக.

தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி
தலை சாய
... தொங்குகின்ற சடையின் மேல் சந்திரனை அணிந்துள்ள
தலைவர், மங்கையும் போர்க்களத்தை ஆள்பவளுமான காளி நாணித்
தலை குனிய,

தொந்தி திமிதோதி தந்தி திமிதாதி என்று நடம் ஆடும்
அவர் பாலா
... தொந்தி திமிதோதி தந்தி திமிதாதி என்று நடனம்
ஆடிய சிவபெருமானின் குமாரனே,

துங்கம் உ(ள்)ள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக
அணைவோனே
... பெருமை வாய்ந்த வேடர்களுடைய குலத்தில்
வளர்ந்த பெண்ணாகிய வள்ளியை மங்களகரமாகத் தழுவியவனே,

கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல்
கொ(ண்)டு எறிவோனே
... கந்தனே, முருகேசனே, நெருங்கிப்
போரிட வந்த அசுரர்கள் இறக்க, அந்த கூரிய வேல் கொண்டு எறிந்து
அழித்தவனே,

கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு
பெருமாளே.
... (கச்சி) ஏகாம்பரநாதர், கயிலாய நாதர் ஆகிய
சிவபெருமானின் பிள்ளையே, கூரிய வேலாயுதத்தை உடையவனே,
காங்கேய* நகரில் வாழும் பெருமாளே.


* காங்கேயம் என்ற தலம், ஈரோடு - திருப்பூர் சாலையில் ஊத்துக்குளி ரயில்
நிலையத்திலிருந்து 19 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1297  pg 2.1298  pg 2.1299  pg 2.1300 
 WIKI_urai Song number: 942 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 938 - sandhidhoRum nANam (singkai - kAngkEyam)

santhithoRu nANa minRiyakam vAdi
     unthiporu LAka ...... alaivEnO

sangaipeRa nALu mangamuLa mAthar
     thangaLvasa mAki ...... alaiyAmaR

suntharama thAka enthanvinai yEka
     sinthaikaLi kUra ...... aruLvAyE

thongusadai meethu thingaLaNi nAthar
     mangairaNa kALi ...... thalaisAyath

thonthithimi thOthi thanthithimi thAthi
     enRunada mAdu ...... mavarpAlA

thungamuLa vEdar thangaLkula mAthai
     mangaLama thAka ...... aNaivOnE

kanthamuru kEsa miNdasurar mALa
     anthamunai vElko ...... deRivOnE

kamparkayi lAsar mainthavadi vEla
     singainakar mEvu ...... perumALE.

......... Meaning .........

santhithoRum nANam inRi akam vAdi unthi poruLAka alaivEnO: Why am I shamelessly roaming about day in and day out with a depressed heart in search of food for the stomach?

sangai peRa nALum angam u(L)La mAthar thangaL vasamAki alaiyAmal: Everyday I am running about scared, under the spell of whores with beautiful bodies; saving me from such wandering,

suntharamathu Aka enthan vinai Eka sinthai kaLi kUra aruLvAyE: kindly bless me so that my splendour is enhanced, my past deeds are destroyed and my mind is elated!

thongu sadai meethu thingaL aNi nAthar mangai raNa kALi thalai sAya thonthi thimithOthi thanthi thimithAthi enRu nadam Adum avar pAlA: When Lord SivA, who wears the crescent moon on His drooping and matted hair, danced to the meter of "thonthi thimithOthi thanthi thimithAthi", KALi, the damsel who reigns in the battlefield, bowed Her head out of shame; You are the son of that Lord SivA!

thungam u(L)La vEdar thangaL kula mAthai mangaLam athAka aNaivOnE: You auspiciously hug VaLLi, the damsel reared by the illustrious hunters!

kantha murukEsa miNdu asurar mALa antha munai vEl ko(N)du eRivOnE: Oh KandhA, Oh Lord MurugA, You wielded Your sharp spear and destroyed the demons who closed in on You to fight aggressively!

kampar kayilAsar maintha vadi vEla singai nakar mEvu perumALE.: You are the son of Lord EkAmbara NAthar (of KAnchipuram) who is also the Lord of Mount KailAsh (Lord SivA)! You hold in Your hand the pointed spear! You have Your abode in the town of KAngkEyam*, Oh Great One!


* KAngkEyam is on the road between EerOde (Erode) and ThiruppUr, 19 miles from the railway station of UththukkuLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 938 sandhidhoRum nANam - singkai-kAngkEyam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]