பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டாலியூர்) திருப்புகழ் உரை 74.1 (கச்சி) கம்பர் - ஏகாம்பரநாதர், கயிலாயர் ஆகிய சிவனது பிள்ளையே கூரிய வேலாயுதத்தை உடையவனே! சிங்கை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே! (வினை ஏக அருள்வாயே) பட்டாலியூர் 943. காதிலுள்ள இரண்டு குழைகளையும் எற்றிக் காதுகளை மோதுவன, நறுமணம் உள்ள தாமரை மலர்களை (எங்களுக்கு நீ உவமையா என்று) சிறிக் கோபிப்பன, தனக்கு நிகரே இல்லாத வினையையும் தாவி மீள்வன, மகா சூரத்வம் உடைய யமதுாதர்களின் சேனை (இவைகளின் கொடுமை முன் நமது கொடுமை எவ்வளவு என்று அஞ்சிப் பின்னடைந்து ஒடும்படி வழி தேடுவன, அமுதும் விஷமும் கலந்தன போல் நின்று ஆளையே அறுத்துத் தள்ளுவன, ரதி கணவனுடைய (மன்மதனுடைய) சாத்திர நூல் பொய்யாகாத வண்ணம் வழிதேடுவன, முநிவர்களும் உருகும்படியாகத் தந்திரத்துடன் கூடிய பார்வையை உடையன, (வந்தவனுடைய) பொருளைக் கவரும் பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவன, யுக முடிவு தானோ இது என்னும்படி கலாம் (போர்) விளைவிப்பன, (இத்தகையவனாய் அமைந்து) கூரிய வேலாயுதம் போல உயிரை வதைக்கும் கண்களை உடைய ஆசை மாதர்களின் காம மயக்கம் தருகின்ற நிலப் பிளப்பில் நான் போய் விழாத வகைக்கு உனது திருவடி நீழலிற் பொருந்த வாழும்படியான வாழ்க்கை கிடைக்கும் ஒரு நாள் எனக்கு வாய்க்குமா! நறுமணம் வீசும் மாலையை அணிந்து, உனக்கு வாகனமாகும்படி விரும்பின பச்சை ஒளி வீசும் தோகை கொண்ட சிறந்த மயில்மீது (முதுரவி) முற்றின ஒளி கொண்ட சூரியனைப் போல விளங்கி வயலூரில் வாழும் செல்வனே!