திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 937 சஞ்சரி உகந்து (சிங்கை-காங்கேயம்) Thiruppugazh 937 sanjariugandhu (singkai-kAngkEyam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்ததன தந்த தந்ததன தந்த தந்ததன தந்த ...... தனதான ......... பாடல் ......... சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற தண்குவளை யுந்து ...... குழலாலுந் தண்டரள தங்க மங்கமணி கின்ற சண்டவித கும்ப ...... கிரியாலும் நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து நம்பிவிட நங்கை ...... யுடனாசை நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று நன்றுமயில் துன்றி ...... வரவேணும் கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி கந்திகமழ் கின்ற ...... கழலோனே கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள் கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை திண்குயம ணைந்த ...... திருமார்பா செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த சிங்கையில மர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும் ... வண்டுகள் மகிழ்ந்து, நின்று ரீங்காரம் செய்யும் குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் விளங்கும் கூந்தல் மூலமாகவும், தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும் ... குளிர்ந்த முத்து மாலை, பொன் மாலை ஆகியவற்றை தம்மீது அணிந்துள்ள, வலிமை கொண்ட குடம் போன்ற மார்பகங்கள் மூலமாகவும், நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட ... விஷம் கொண்ட செயலைப் பொருந்தி, (நீயே) அடைக்கலம் என்று சொல்லி வந்து நான் நம்பும்படி நடிக்கும் நங்கையுடன் ஆசை நண்பு உறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும் ... அத்தகைய மங்கையுடன் ஆசை கொண்டு, நட்பு வைக்கின்ற என்னைக் காத்தருள, நீ இந்த நாளே, தீய வினைகளை அழித்து, நன்மை தரும் மயிலில் பொருந்தி வந்தருள வேண்டும். கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே ... தாமரை மலர், கொன்றை மலர், தும்பை மலர், மகிழம்பூ இவைகள் நிறைந்து நறுமணம் கமழும் திருவடியை உடையவனே, கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா ... வாடி அழுகிய பிணங்களைத் தின்னும் (பேய், நாய், நரி, பருந்து முதலியவற்றின்) கூட்டங்கள் காணும்படி சண்டை செய்யும் ஒளி வீசும் வேலை உடையவனே. செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா ... பண் நிறைந்த சொல்லை அமைந்துள்ள எங்கள் குறப்பெண்ணாகிய வள்ளியின் வலிய மார்பை அணைந்த அழகிய மார்பனே, செண்பகம் இலங்கு மின் பொழில் சிறந்த சிங்கையில் அமர்ந்த பெருமாளே. ... செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் சிறப்புடன் மிளிரும் சிங்கை எனப்படும் காங்கேயம்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* காங்கேயம் என்ற தலம், ஈரோடு - திருப்பூர் சாலையில் ஊத்துக்குளி ரயில் நிலையத்திலிருந்து 19 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1295 pg 2.1296 pg 2.1297 pg 2.1298 WIKI_urai Song number: 941 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 937 - sanjari ugandhu (singkai - kAngkEyam) sanjariyu kanthu ninRumural kinRa thaNkuvaLai yunthu ...... kuzhalAlum thaNdaraLa thanga mangamaNi kinRa saNdavitha kumpa ...... giriyAlum nanjavinai yonRi thanjamena vanthu nampivida nangai ...... yudanAsai naNpuRenai yinRu nanRilvinai konRu nanRumayil thunRi ...... varavENum kanjamalar konRai thumpaimakizh vinji kanthikamazh kinRa ......kazhalOnE kanRidupi NangaL thinRiduka NangaL kaNduporu kinRa ...... kathirvElA senjolpunai kinRa engaLkuRa mangai thiNkuyama Naintha ...... thirumArpA seNpakami langu minpozhilsi Rantha singaiyila marntha ...... perumALE. ......... Meaning ......... sanjari ukanthu ninRu muralkinRa thaN kuvaLai unthu kuzhalAlum: With their hair adorned by cool lily flower around which happy beetles hum steadily, thaN tharaLa thangam angam aNikinRa saNda vitha kumpa giriyAlum: and with their pot-like firm bosom over which cool string of pearls and golden chain are worn, nanja vinai onRi thanjam ena vanthu nampi vida: they carry out poison-filled deeds, declaring "I surrender to you" and make me believe in their emotive action; nangaiyudan Asai naNpu uRu enai inRu nanRu il vinai konRu nanRu mayil thunRi varavENum: to save me from falling in love with a girl of such character and developing a liaison with her, You have to come to me this very day, mounted on Your benevolent peacock, destroying all my bad deeds. kanja malar konRai thumpai makizh vinji kanthi kamazhkinRa kazhalOnE: Your hallowed feet exude the fragrance of lotus, kondRai (Indian laburnum), thumbai (leucas) and makizham flowers! kanRidu piNangaL thinRidu kaNangaL kaNdu porukinRa kathir vElA: You are holding in Your hand the spear that fought in the war, witnessed by herds (of devils, dogs, jackals and vultures) devouring rotten corpses on the battlefield! sem sol punaikinRa engaL kuRa mangai thiN kuyam aNaintha thiru mArpA: She is our dear VaLLi, the damsel of the KuRavAs, who is gifted with musical speech; You hugged her robust bosom with Your hallowed chest, Oh Lord! seNpakam ilangu min pozhil siRantha singaiyil amarntha perumALE.: In the lovely groves around this town Singkai (known as KangkEyam*), the sheNbaga (champak) flowers abound, and You are seated in this place, Oh Great One! |
* KangkEyam is on the road between EerOde (Erode) and ThiruppUr, 19 miles from the railway station of UththukkuLi. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |