திருப்புகழ் 918 கார் அணியும் குழல்  (திருத்தவத்துறை)
Thiruppugazh 918 kAraNiyumkuzhal  (thiruththavaththuRai)
Thiruppugazh - 918 kAraNiyumkuzhal - thiruththavaththuRaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தந்தன தத்த தத்தன
     தானன தந்தன தத்த தத்தன
          தானன தந்தன தத்த தத்தன ...... தனதான

......... பாடல் .........

காரணி யுங்குழ லைக்கு வித்திடு
     கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்
          காணவ ருந்திமு டித்தி டக்கடு ...... விரகாலே

காதள வுங்கய லைப்பு ரட்டிம
     னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி
          காமுக ரன்புகு வித்த கைப்பொரு ...... ளுறவாகிப்

பூரண கும்பமெ னப்பு டைத்தெழு
     சீதள குங்கும மொத்த சித்திர
          பூஷித கொங்கையி லுற்று முத்தணி ...... பிறையான

போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்
     யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு
          பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட ...... அருள்வாயே

வீரபு யங்கிரி யுக்ர விக்ரம
     பூதக ணம்பல நிர்த்த மிட்டிட
          வேகமு டன்பறை கொட்டி டக்கழு ...... கினமாட

வீசிய பம்பர மொப்பெ னக்களி
     வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர்
          வேதப ரம்பரை யுட்க ளித்திட ...... வரும்வீரா

சீரணி யுந்திரை தத்து முத்தெறி
     காவிரி யின்கரை மொத்து மெத்திய
          சீர்புனை கின்றதி ருத்த வத்துறை ...... வரும்வாழ்வே

சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட
     மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய
          தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கார் அணியும் குழலைக் குவித்து இடு கோகனகம் கொடு
மெத்தெனப் பிறர் காண வருந்தி முடித்திட
... மேகத்தை ஒத்த
கூந்தலை ஒன்று சேர்த்து அதில் அணியும் செந்தாமரை இதழ் போன்ற
தங்க அணியை பக்குவமாக பிறர் காணும்படியாக சிரமப்பட்டு முடித்திட்டு,

கடு விரகாலே காது அளவும் கயலைப் புரட்டி ... கடிய
தந்திரத்தால் காது வரைக்கும் கயல் மீன் போன்ற கண்களைச் செலுத்தி,

மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி காமுகர் அன்பு
குவித்த கைப்பொருள் உறவாகி
... மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
எனப்படும் அந்தக்கரணங்கள் எல்லாம் வஞ்சனை எண்ணமே
அதிகரித்து, தங்களிடம் வந்து அடிபணியும் காமம் கொண்டவர்கள் ஆசை
மயக்கத்துடன் வந்து கொட்டுகின்ற கைப்பொருளினால் உறவு ஏற்பட்டு,

பூரண கும்பம் எனப் புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த
சித்திர பூஷித கொங்கையில் உற்று
... பூரண குடம் போல பருத்து
எழுகின்ற, குளிர்ந்த செஞ்சாந்து தடவப்பட்டுள்ள, அழகிய,
அலங்கரிக்கப்பட்ட மார்பிலே பொருந்த

முத்து அணி பிறையான போருவை ஒன்று நெகிழ்த்து
உருக்கி மெய்
... முத்துக்களால் ஆன, பிறைபோன்ற ஆபரணமாகத்
தரித்திருக்கும் நகை ஒன்றைத் தளர்த்தி உடலை உருக்கி,

யாரையும் நெஞ்சை விலைப் படுத்திடு பூவையர் தங்கள்
மயக்கை விட்டிட அருள்வாயே
... யாராயிருந்தாலும் அவருடைய
மனதைத் தமக்கு விற்பனையாகும்படி செய்கின்ற பொது மகளிர் மீதுள்ள
காம மயக்கத்தை விட்டு ஒழிக்கும்படி அருள் புரிவாயாக.

வீர புயம் கிரி உக்ர விக்ரம ... வீரம் மிக்க தோள் மலையை உடைய
வலிமை வாய்ந்தவனே,

பூத கணம் பல நிர்த்தம் இட்டிட வேகமுடன் பறை கொட்டிடக்
கழுகு இனம் ஆட
... பூத கணங்கள் பல நடனம் ஆட, வேகத்துடனே
பறை வாத்தியங்கள் முழங்க, கழுகுக் கூட்டங்கள் ஆட,

வீசிய பம்பரம் ஒப்பு எனக் களி வீச நடம் செய் விடை தனித்
துசர்
... வீசி எறியப்பட்ட பம்பரம் போல் மகிழ்ச்சி பொங்க நடனம்
செய்கின்ற, சிறப்பான ரிஷபக் கொடியை உடைய, சிவபெருமானும்

வேத பரம்பரை உள் களித்திட வரும் வீரா ... வேத வழக்கில்
முதன்மையான பார்வதியும் உள்ளம் மகிழ அவர்கள் எதிரில் வருகின்ற
வீரனே,

சீர் அணியும் திரை தத்து(ம்) முத்து எறி காவிரியின் கரை
மொத்து மெத்திய
... ஒழுங்கு பொருந்திய அலைகள் புரண்டு
முத்துக்களை வீசி காவிரியின் கரை மேல் மோதி நிரப்புகின்ற

சீர் புனைகின்ற திருத்தவத் துறை வரும் வாழ்வே ... அழகைக்
கொண்டுள்ள திருத்தவத்துறையில்* எழுந்தருளிய செல்வமே,

சீறி எதிர்த்த அரக்கரைக் கெட மோதி அடர்ந்து அருள்
பட்ச(ம்) முற்றிய தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள்
பெருமாளே.
... கோபித்து எதிர்த்து வந்த அசுரர்களை கெட்டு
அழியும்படி மோதி நெருக்கி, அருளும் அன்பும் நிறைந்த
தேவர்களுடைய சிறையை வெட்டி நீக்கி அருளிய பெருமாளே.


* திருத்தவத்துறையின் இன்றைய பெயர் 'லால்குடி'. திருச்சிக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1245  pg 2.1246  pg 2.1247  pg 2.1248 
 WIKI_urai Song number: 922 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 918 - kAr aNiyum kuzhal (thiruththavaththurai - lAlgudi)

kAraNi yumkuzha laikku viththidu
     kOkana kamkodu meththe nappiRar
          kANava runthimu diththi dakkadu ...... virakAlE

kAthaLa vumkaya laippu rattima
     nAthikaL vanjami kuththi dappadi
          kAmuka ranpuku viththa kaipporu ...... LuRavAkip

pUraNa kumpame nappu daiththezhu
     seethaLa kumkuma moththa siththira
          pUshitha kongaiyi lutRu muththaNi ...... piRaiyAna

pOruvai yonRune kizhththu rukkimey
     yAraiyum nenjaivi laippa duththidu
          pUvaiyar thangaLma yakkai vittida ...... aruLvAyE

veerapu yamkiri yukra vikrama
     pUthaka Nampala nirththa mittida
          vEkamu danpaRai kotti dakkazhu ...... kinamAda

veesiya pampara moppe nakkaLi
     veesana damcheyvi daiththa niththusar
          vEthapa ramparai yutka Liththida ...... varumveerA

seeraNi yunthirai thaththu muththeRi
     kAviri yinkarai moththu meththiya
          seerpunai kinRathi ruththa vaththuRai ...... varumvAzhvE

seeRiye thirnthava rakka raikkeda
     mOthiya darntharuL patcha mutRiya
          thEvarkaL thamchiRai vetti vittaruL ...... perumALE.

......... Meaning .........

kAr aNiyum kuzhalaik kuviththu idu kOkanakam kodu meththenap piRar kANa varunthi mudiththida: They gather their cloud-like hair in a bunch and on it they display the lotus-like golden clasp, which they attach to the hair painstakingly, making sure that it is noticed by others;

kadu virakAlE kAthu aLavum kayalaip puratti: with an arduous knack, they let their kayal-fish-like eyes swing right up to the ears;

mana AthikaL vanjam mikuththu idappadi kAmukar anpu kuviththa kaipporuL uRavAki: their four inner tenets (anthak karaNam) namely, mind, intellect, will and egoism are increasingly filled with treacherous thoughts only; their relationship is merely a result of the money heaped on them by the amorous suitors who fall at their feet in utter delusion of passion;

pUraNa kumpam enap pudaiththu ezhu seethaLa kumkumam oththa siththira pUshitha kongaiyil utRu: to embellish their beautiful bosom swelling like a full pot, that is smeared with cool and red vermilion,

muththu aNi piRaiyAna pOruvai onRu nekizhththu urukki mey: they wear an ornament made of pearls, shaped like the crescent moon, which they provocatively loosen a little and melt their suitors' bodies;

yAraiyum nenjai vilaip paduththidu pUvaiyar thangaL mayakkai vittida aruLvAyE: these whores have the ability to buy the heart of anyone at a favourable price for themselves; kindly bless me so that my delusory fascination for them is destroyed!

veera puyam kiri ukra vikrama: You have valorous mountain-like shoulders, Oh Strong One!

pUtha kaNam pala nirththam ittida vEkamudan paRai kottidak kazhuku inam Ada: As the numerous herds of devils danced, as the drums and percussion instruments were beaten loudly at a quick tempo and as the flock of eagles danced about,

veesiya pamparam oppu enak kaLi veesa nadam sey vidai thanith thusar: He danced rapturously like a spun-off top; He is the Lord holding the unique staff of bull; that Lord SivA and

vEtha paramparai uL kaLiththida varum veerA: DEvi PArvathi, who comes foremost in the dynasty of the VEdAs, are exhilarated when You appear before them, Oh valorous One!

seer aNiyum thirai thaththu(m) muththu eRi kAviriyin karai moththu meththiya seer punaikinRa thiruththavath thuRai varum vAzhvE: On the edge of KAvEri, synchronised waves toss pearls and fill the banks of the river in this beautiful town ThiruththavaththuRai*, where You are seated, Oh Treasure!

seeRi ethirththa arakkaraik keda mOthi adarnthu aruL patcha(m) mutRiya thEvarkaL tham siRai vetti vittu aruL perumALE.: You stifled the angry demons who came in a confronting manner and graciously freed the kind and devoted celestials from their prisons, Oh Great One!


* ThiruththavaththuRai is now known as LAlgudi, situated 10 miles north of TiruchirAppaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 918 kAr aNiyum kuzhal - thiruththavaththuRai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]