திருப்புகழ் 915 மேகலை நெகிழ்த்து  (வயலூர்)
Thiruppugazh 915 mEgalainegizhththu  (vayalUr)
Thiruppugazh - 915 mEgalainegizhththu - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த
     தானன தனத்தத் தாத்த ...... தனதான

......... பாடல் .........

மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி
     வேல்விழி புரட்டிக் காட்டி ...... யழகாக

மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி
     வீடுக ளழைத்துக் காட்டி ...... மதராசன்

ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி
     யாரொடு நகைத்துக் காட்டி ...... விரகாலே

ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட
     ஆசையை யவர்க்குக் காட்டி ...... யழிவேனோ

மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி
     மூதமிழ் முனிக்குக் கூட்டு ...... குருநாதா

மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு
     மூரிவில் மதற்குக் காட்டு ...... வயலூரா

வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி
     வாழ்மயில் நடத்திக் காட்டு ...... மிளையோனே

மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
     வானவர் சிரத்தைக் காத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மேகலை நெகிழ்த்துக் காட்டி வார் குழல் விரித்துக் காட்டி ...
மேகலை என்னும் இடை அணியை தளர்த்திக் காட்டி, நீண்ட
கூந்தலை விரித்துக் காட்டி,

வேல் விழி புரட்டிக் காட்டி அழகாக மேனியை மினுக்கிக்
காட்டி நாடகம் நடித்துக் காட்டி
... வேல் போன்ற கண்களைச்
சுழற்றிக் காட்டி, அழகு பொலியும்படி உடலை மினுக்கிக் காட்டி,
கூத்துகளை நடித்துக் காட்டி,

வீடுகள் அழைத்துக் காட்டி மத ராசன் ஆகமம் உரைத்துக்
காட்டி வார் அணி தனத்தைக் காட்டி
... தமது வீடுகளுக்கு
அழைத்துக் காட்டி, மன்மத ராஜனுடைய காம சாஸ்திர நூலை விளக்கி
எடுத்துச் சொல்லி, கச்சு அணிந்த மார்பைக் காட்டி,

யாரொடு(ம்) நகைத்துக் காட்டி விரகாலே ஆதர மனத்தைக்
காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட ஆசையை அவர்க்குக்
காட்டி அழிவேனோ
... எல்லாருடனும் சிரித்துக் காட்டி, தந்திர
வகையால் அன்பு வைத்துள்ளது போல் தமது மனதைக் காட்டி,
(இவ்வாறு) வேசைகள் காம இச்சையை ஊட்ட எனது ஆசையை
அவர்களிடம் காட்டி நான் அழிந்து போவேனோ?

மோகன விருப்பைக் காட்டி ஞானமும் எடுத்துக் காட்டி மூ
தமிழ் முனிக்குக் கூட்டு குருநாதா
... அன்பு மிக்க விருப்பத்தைக்
காட்டி, ஞான சாஸ்திரங்களை விரித்து எடுத்து உரைத்துக் காட்டி, பழந்
தமிழ் வல்ல அகத்திய முனிவருக்கு அந்த ஞானத்தைக் கூட்டுவித்த
குருநாதனே,

மூ உலகு அளித்துக் காட்டி சேவலை உயர்த்திக் காட்டு மூரி
வில் மதற்குக் காட்டு வயலூரா
... மூவுலகங்களையும் காத்துக்
காட்டி, சேவற் கொடியை உயர்த்திக் காட்டும் (வயலூரானே), வலிமை
கொண்ட (கரும்பு) வில்லை மனமதனுக்குப் படையாகத் தந்து உதவிய
வயலூர்* முருகனே,

வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி வாழ்
மயில் நடத்திக் காட்டும் இளையோனே
... (வேடர்களுக்குத்
தெரியாதவாறு வள்ளியைக் கவர்ந்த) வெற்றியைக் காட்டி, வேடர்களின்
திறம் எவ்வளவு சிறிது என்பதைக் காட்டி, (நல் வாழ்வு பெற்ற சூரனாகிய)
மயிலை உலகெலாம் செலுத்திக் காட்டிய இளைய பெருமானே,

மா மலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த பெருமாளே.
... பெரிய கிரவுஞ்ச மலை
வெந்து போகும்படிச் செய்து காட்டி, அசுரர்களுடைய திறமை எல்லாம்
இவ்வளவு தான் என்பதைக் காட்டி, தேவர்களின் தலையைக் காத்த
பெருமாளே.


* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.


வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1235  pg 2.1236  pg 2.1237  pg 2.1238 
 WIKI_urai Song number: 919 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 915 - mEgalai negizhththu (vayalUr)

mEkalai nekizhththuk kAtti vArkuzhal viriththuk kAtti
     vElvizhi purattik kAtti ...... yazhakAka

mEniyai minukkik kAtti nAdaka nadiththuk kAtti
     veeduka Lazhaiththuk kAtti ...... matharAsan

Akama muraiththuk kAtti vAraNi thanaththaik kAtti
     yArodu nakaiththuk kAtti ...... virakAlE

Athara manaththaik kAtti vEsaikaL mayakkaik kAtta
     Asaiyai yavarkkuk kAtti ...... yazhivEnO

mOkana viruppaik kAtti njAnamu meduththuk kAtti
     mUthamizh munikkuk kUttu ...... gurunAthA

mUvula kaLiththuk kAtti sEvalai yuyarththik kAttu
     mUrivil mathaRkuk kAttu ...... vayalUrA

vAkaiyai mudiththuk kAtti kAnavar samarththaik kAtti
     vAzhmayil nadaththik kAttu ...... miLaiyOnE

mAmalai vethuppik kAtti thAnavar thiRaththaik kAtti
     vAnavar siraththaik kAththa ...... perumALE.

......... Meaning .........

mEkalai nekizhththuk kAtti vAr kuzhal viriththuk kAtti: They deliberately loosen their golden waist-band (mEkalai); they let go their long hair freely to drift;

vEl vizhi purattik kAtti azhakAka mEniyai minukkik kAtti nAdakam nadiththuk kAtti: they roll their spear-like eyes; they shake their fine-looking body with its radiating beauty; they perform many dances with action;

veedukaL azhaiththuk kAtti matha rAsan Akamam uraiththuk kAtti vAr aNi thanaththaik kAtti: they bring (their suitors) to show off their homes; they interpret the text of the erotic literature of Manmathan (God of Love) in detail; they display their bosom wearing tight blouse;

yArodu(m) nakaiththuk kAtti virakAlE Athara manaththaik kAtti vEsaikaL mayakkaik kAtta Asaiyai avarkkuk kAtti azhivEnO: They show their beaming face to all and hoodwink them as if they are deeply in love with them; and as the whores keep provoking me in this manner, why am I showing my passion to them leading myself towards the path of self-destruction?

mOkana viruppaik kAtti njAnamum eduththuk kAtti mU thamizh munikkuk kUttu gurunAthA: Showing Your loving interest, You preached to him the texts of Pure Knowledge in detail; and You enhanced the wisdom of that sage Agasthiyar who is well-versed in the ancient Tamil language, Oh Great master!

mU ulaku aLiththuk kAtti sEvalai uyarththik kAttu mUri vil mathaRkuk kAttu vayalUrA: Demonstrating Your ability to protect the three worlds, You raised Your staff with the Rooster high, Oh Lord! You graciously handed to Manmathan (God of Love) the powerful bow of sugarcane to be his weapon, Oh MurugA of VayalUr!*

vAkaiyai mudiththuk kAtti kAnavar samarththaik kAtti vAzh mayil nadaththik kAttum iLaiyOnE: (Unknown to the hunters) You abducted VaLLi successfully and proved the futility of the watch of the hunters, and drove all over the world Your great vehicle, the peacock (which is the demon SUran restored to righteous life), Oh Young Lord!

mA malai vethuppik kAtti thAnavar thiRaththaik kAtti vAnavar siraththaik kAththa perumALE.: You scorched the huge mountain Krouncha proving the ineffectiveness of the strength of the demons and protected the heads of the celestials, Oh Great One!


* VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily.


VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 915 mEgalai negizhththu - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]