பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலுர்) திருப்புகழ் உரை 679 (வாகையை) வேடர்களுக்குத் தெரியாதவாறு வள்ளியைக் கவர்ந்ததால் தமது வெற்றியைக் காட்டிக், (கானவர்) வேட்ர்க்ளின் திறம் (தமது திறத்தின் முன்பு எவ்வளவு சிறிது என்பதைக் (காட்டி) தெரிவித்து - நல்வாழ்வு பெற்ற (சூரனாம்) மயிலை (உலகெலாம்) நடத்திக் காட்டின இளையோனே! பெரிய கிரவுஞ்சமலை வெந்து போம்படிச் செய்து காட்டி அசுரர்களுடைய திறமையெல்லாம் இவ்வளவுதான் என்பதையும் காட்டித் தேவர்களுடைய யைக் காத்த பெருமாளே! (தேவர்களின் தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் - என்றபடி). (ஆசையை அவர்க்குக் காட்டி அழிவேனோ!) 920. வாலின் நுனியைக் காட்டிலும், விஷத்தைக் காட்டிலும், கொடிய யமராஜனுடைய தொழிலைக் காட்டிலும், அம்புைக் காட்டிலும், பெருத்த வேதனை வகைகளைச் செய்கின்ற கரிய கண்ணும், எங்கும் கிட்டுதற்கு அரிய கடல் அமுது வெளிப்பட்டு வடியும் செவ்வாயும், சிரித்த முகமும், வெண்மைநிறப் பல்லும், நட்பைக் காட்டி வாரும், இரும் எனக் கூறுகின்ற இனிய மொழியும், மிகுந்த பன்னிரும். பூந்தாதுடன், புதிய செஞ்சாந்தும், குளிர்ச்சிதரும் சந்தனமும், அகிலும், புனுகு சட்டமும் அணிகின்ற ஆடம்பரத்துடன் கூடிய ஒளி பெருகுவதான கொங்கையும், அழகிய கையும் யாராயிருந்தபோதிலும் (வந்து) தோய்கின்ற சேறு என்னத்தக்க அல்குலும், கொப்பூழும், உலகமாயை குடிகொண்டுள்ள (இந்த) உடலில் நன்கு காலங்கழிக்கும் (சூளையரை) வேசியரை எதிரே கண்டு மருட்சி நான் அடைதலை (நான் மயங்குவதை) ஒழிக்க மாட்டேனோ! காளி, (திரிபுரை) (மும் மூர்த்திகளுக்கும் மூத்தவள்) (அந்தரி) பராகாசவடிவை உடையவள், (சுந்தரி) அழகி, (நீலி) கரியநிறத்தி - சாகினி, கவுரி, பயங்கரி (பயத்தைத் தருபவள் பயத்தைப் போக்குபவள்), சங்கரி, கருணை நிறைந்த சிவாம்பிகை, குண்டலி) சுத்தமாயையாம் சத்தி (சண்டிகை) துர்க்கை, திரிபுரத்தைப் பகைத்து எரித்த சிவனது,