திருப்புகழ் 903 இலகு முலைவிலை  (வயலூர்)
Thiruppugazh 903 ilagumulaivilai  (vayalUr)
Thiruppugazh - 903 ilagumulaivilai - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

இலகு முலைவிலை யசடிகள் கசடிகள்
     கலைகள் பலவறி தெருளிகள் மருளிகள்
          எயிறு கடிபடு முதடிகள் பதடிகள் ...... எவரோடும்

இனிய நயமொழி பழகிக ளழகிகள்
     மடையர் பொருள்பெற மருவிகள் சருவிகள்
          யமனு மிகையென வழிதரு முழிதரும் ...... விழிவாளால்

உலக மிடர்செயு நடலிகள் மடலிகள்
     சிலுகு சிலரொடு புகலிக ளிகலிகள்
          உறவு சொலவல துரகிகள் விரகிகள் ...... பிறைபோலே

உகிர்கை குறியிடு கமுகிகள் சமுகிகள்
     பகடி யிடவல கபடிகள் முகடிகள்
          உணர்வு கெடும்வகை பருவிக ளுருவிக ...... ளுறவாமோ

அலகை புடைபட வருவன பொருவன
     கலக கணநிரை நகுவன தகுவன
          அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன ...... பொடியாடி

அலரி குடதிசை யடைவன குடைவன
     தரும வநிதையு மகிழ்வன புகழ்வன
          அகில புவனமு மரகர கரவென ...... அமர்வேள்வி

திலக நுதலுமை பணிவரு செயமகள்
     கலையி னடமிட வெரிவிரி முடியினர்
          திரள்ப லுயிருடல் குவடுக ளெனநட ...... மயிலேறிச்

சிறிது பொழுதினி லயில்விடு குருபர
     அறிவு நெறியுள அறுமுக இறையவ
          த்ரிசிர கிரியயல் வயலியி லினிதுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இலகு முலை விலை அசடிகள் கசடிகள் ... விளங்கும் மார்பகத்தை
விலைக்கு விற்கின்ற முட்டாள்கள், குற்றம் உள்ளவர்கள்.

கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள் ... காமக் கலைகள்
பலவற்றையும் அறிந்துள்ள தெளிவை உடையவர்கள், மயக்குபவர்கள்.

எயிறு கடி படும் உதடிகள் பதடிகள் எவரோடும் இனிய நய
மொழி பழகிகள் அழகிகள்
... பற் குறிகளைக் கொண்ட உதட்டை
உடையவர்கள். அற்பர்கள். யாரோடும் இனிமையான நயமான
பேச்சுக்களைப் பேசப் பழகியவர்கள்.

மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள் ...
முட்டாள்களுடைய பொருளைப் பெறுதற்கு அவர்களுடன் சேருபவர்கள்.
கொஞ்சிக் குலாவுபவர்கள்.

யமனும் மிகை என அழி தரும் முழி தரும் விழி வாளால்
உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள்
... யமனை மிஞ்சும்படியான
அழித்தல் தொழிலைச் செய்வதும், அங்கும் இங்கும் சுழலுகின்றதுமான
கண் என்னும் வாள் கொண்டு உலகத்துக்கே துன்பம் செய்கின்ற செருக்கு
உள்ளவர்கள். (ஆண்களை) மடல்* ஏறும்படிச் செய்பவர்கள்.

சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள் ... சண்டைப் பேச்சு சிலரோடு
பேசுபவர்கள். பகைமை பூண்டவர்கள்.

உறவு சொல வல துரகிகள் விரகிகள் பிறை போலே உகிர்
கை குறியிடு கமுகிகள் சமுகிகள்
... உறவு முறையைக் கூறி
அழைக்கவல்ல துரோகிகள். சாமர்த்தியசாலிகள். பிறையைப் போல் கைந்
நகத்தால் (வந்தவர் உடலில்) அடையாளக் குறியை இடுபவர்கள். ரகசிய
அழுத்தம் உடையவர்கள். சமூகத்துக்கு விருப்புடன் பேட்டி அளிப்பவர்கள்.

பகடி இட வல கபடிகள் முகடிகள் உணர்வு கெடும் வகை
பருவிகள் உருவிகள் உறவாமோ
... வெளி வேஷம் போடவல்ல
வஞ்ச நெஞ்சினர். மூதேவிகள். நல்ல அறிவு கெட்டுப் போகும்படி
அரிப்பவர்கள். கையில் பொருள் உருவும்படி சரசமாகப் பேசுபவர்கள்
ஆகிய விலைமாதர்களின் தொடர்பு நல்லதா?

அலகை புடைபட வருவன பொருவன கலக கண(ம்) நிரை
நகுவன தகுவன
... பேய்கள் (போர்க்களத்தின்) பக்கங்களில் சேரும்படி
வரவும், சில சண்டை செய்யவும், கலகம் செய்யும் பேய்களின் கூட்டம்
சிரிக்கவும், சில மேம்பட்டு விளங்கவும்,

அசுரர் தசை வழி நிமிர்வன திமிர்வன பொடியாடி அலரி குட
திசை அடைவன குடைவன
... அசுரர்களின் மாமிசக் குவியல்
கிடைத்த போது அதைத் தின்று நிமிரவும், விறைப்பு விடவும், போர்ப்
புழுதியில் குளித்து சூரியன் மேற்குத் திசையில் சேர்ந்து மூழ்கிப் போகவும்,

தரும வநிதையு(ம்) மகிழ்வன புகழ்வன அகில புவனமும்
அரகர கர என
... தரும தேவதையும் மகிழ்ச்சி உற்று உனது புகழை
எடுத்துக் கூறவும், எல்லா உலகங்களும் ஹரஹர ஹர என்று
துதித்துப் போற்றவும்,

அமர் வேள்வி திலக நுதல் உமை பணி வரு செய மகள்
கலையின் நடமிட
... போர்க்களச் சாலையில் பொட்டணிந்த
நெற்றியைக் கொண்ட உமா தேவிக்கு பணி செய்யும் துர்க்கை
சாஸ்திரப்படி நடனம் செய்ய,

எரி விரி முடியினர் திரள் பல் உயிர் உடல் குவடுகள் என
நட மயிலேறி சிறிது பொழுதினில் அயில் விடு குருபர
...
நெருப்புப் போலச் சிவந்ததும், விரித்துள்ளதுமான தலைமயிர் முடியை
உடைய அசுரர்களின் கூட்டம் பலவற்றின் உயிர் வாசம் செய்த உடல்கள்
மலை போல் குவிய, நடனம் செய்யும் மயில் மீது ஏறி, கொஞ்ச நேரத்தில்
வேலைச் செலுத்திய குருபரனே,

அறிவு நெறி உள அறுமுக இறையவ த்ரிசிர கிரி அயல்
வயலியில் இனிது உறை பெருமாளே.
... ஞான மார்க்கத்தைக்
கொண்டுள்ள ஆறு திருமுகங்களை உடைய இறைவனே,
திரிசிராப்பள்ளிக்கு அருகில் உள்ள வயலூரில்** இன்பமுடன்
வீற்றிருக்கும் பெருமாளே.


* மடல் ஏறுதல்:

காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை
முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம்
உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.


** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.


வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1205  pg 2.1206  pg 2.1207  pg 2.1208 
 WIKI_urai Song number: 907 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 903 - ilagu mulaivilai (vayalUr)

ilaku mulaivilai yasadikaL kasadikaL
     kalaikaL palavaRi theruLikaL maruLikaL
          eyiRu kadipadu muthadikaL pathadikaL ...... evarOdum

iniya nayamozhi pazhakika LazhakikaL
     madaiyar poruLpeRa maruvikaL saruvikaL
          yamanu mikaiyena vazhitharu muzhitharum ...... vizhivALAl

ulaka midarseyu nadalikaL madalikaL
     siluku silarodu pukalika LikalikaL
          uRavu solavala thurakikaL virakikaL ...... piRaipOlE

ukirkai kuRiyidu kamukikaL samukikaL
     pakadi yidavala kapadikaL mukadikaL
          uNarvu kedumvakai paruvika Luruvika ...... LuRavAmO

alakai pudaipada varuvana poruvana
     kalaka kaNanirai nakuvana thakuvana
          asurar thasaivazhi nnimirvana thimirvana ...... podiyAdi

alari kudathisai yadaivana kudaivana
     tharuma vanithaiyu makizhvana pukazhvana
          akila puvanamu marakara karavena ...... amarvELvi

thilaka nuthalumai paNivaru seyamakaL
     kalaiyi nadamida veriviri mudiyinar
          thiraLpa luyirudal kuvaduka Lenanada ...... mayilERi

siRithu pozhuthini layilvidu gurupara
     aRivu neRiyuLa aRumuka iRaiyava
          thrisira kiriyayal vayaliyi linithuRai ...... perumALE.

......... Meaning .........

ilaku mulai vilai asadikaL kasadikaL: These are foolish and wicked women who sell their prominent bosom.

kalaikaL pala aRi theruLikaL maruLikaL: These enchantresses have clear knowledge of all the intricacies of many an erotic art.

eyiRu kadi padum uthadikaL pathadikaL evarOdum iniya naya mozhi pazhakikaL azhakikaL: The lips of these silly women are scarred with teeth-marks. They are quite experienced in speaking to anyone with sweet and convincing words.

madaiyar poruL peRa maruvikaL saruvikaL: They attach themselves to foolish men and flirt with them simply to grab their belongings.

yamanum mikai ena azhi tharum muzhi tharum vizhi vALAl ulakam idar seyu nadalikaL madalikaL: They surpass Yaman (God of Death) in the act of destruction, and with their roving eyes, used as swords, they could cause grief to the entire world. They are arrogant and make the men climb the "madal"*.

siluku silarodu pukalikaL ikalikaL: They resort to wordy duels with a few people, manifesting enmity.

uRavu sola vala thurakikaL virakikaL piRai pOlE ukir kai kuRiyidu kamukikaL samukikaL: They are such treacherous people that they could invent many a relationship while cleverly addressing people. They make nail-marks of the shape of crescent moon (on the body of their suitor). They keep secrets very well-guarded. They gleefully grant interviews to the society.

pakadi ida vala kapadikaL mukadikaL uNarvu kedum vakai paruvikaL uruvikaL uRavAmO: These wretched women wear an outer cloak of deception. They are capable of nagging to such an extent that good sense could become stale. They dexterously and flirtingly fleece the belongings from the hand with their sweet-talk; how can a liaison with such whores be good at all?

alakai pudaipada varuvana poruvana kalaka kaNa(m) nirai nakuvana thakuvana: The devils marched very closely (on the battlefield) crowding in the sides; some fought among themselves; a group of some trouble-making devils laughed together; some showed off conspicuously;

asurar thasai vazhi nimirvana thimirvana podiyAdi alari kuda thisai adaivana kudaivana: when heaps of corpses of the demons were sighted, they began to devour the flesh and stood up straight; some loosened their stiffness; the sun bathed in the dust raised in the battlefield and drowned in the west;

tharuma vanithaiyu(m) makizhvana pukazhvana akila puvanamum arakara kara ena: the Deity of Righteousness was elated and explained Your glory while the entire world prayed in ecstasy chanting "Hara Hara Hara";

amar vELvi thilaka nuthal umai paNi varu seya makaL kalaiyin nadamida: on the battlefield, Goddess Durga, who serves Goddess UmA wearing a dot on Her forehead, began to dance in accordance with the Bharatha Sastra (classical treatise on dancing);

eri viri mudiyinar thiraL pal uyir udal kuvadukaL ena nada mayilERi siRithu pozhuthinil ayil vidu gurupara: the bodies of the multitude of demons, in which life once existed, were heaped up like a mountain in the battlefield; those demons had fire-like reddish and widely spread-out hair; and You mounted the dancing peacock and wielded Your spear instantly, Oh Great Master!

aRivu neRi uLa aRumuka iRaiyava thrisira kiri ayal vayaliyil inithu uRai perumALE.: You have six hallowed faces that show the righteous path to True Knowledge, Oh Lord! You are happily seated in VayalUr** which is near ThirichirAppaLLi, Oh Great One!


* madal means sending out passion-filled doodles in palm leaves; this is known as "madal ERuthal". Here, the passion-stricken hero makes several doodles and mounts a horse made of palm leaves to go around the town announcing to the world his love for the heroine.


** VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily.


VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 903 ilagu mulaivilai - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]