திருப்புகழ் 901 ஆரம் முலை காட்டி  (வயலூர்)
Thiruppugazh 901 ArammulaikAtti  (vayalUr)
Thiruppugazh - 901 ArammulaikAtti - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தாத்த தானதன தாத்த
     தானதன தாத்த ...... தனதான

......... பாடல் .........

ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி
     யாடையணி காட்டி ...... அநுராக

ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டி
     ஆதரவு காட்டி ...... எவரோடும்

ஈரநகை காட்டி நேரமிகை காட்டி
     யேவினைகள் காட்டி ...... யுறவாடி

ஏதமயல் காட்டு மாதர்வலை காட்டி
     யீடழிதல் காட்ட ...... லமையாதோ

வீரவப ராட்டு சூரர்படை காட்டில்
     வீழனலை யூட்டி ...... மயிலூர்தி

வேலையுறை நீட்டி வேலைதனி லோட்டு
     வேலைவிளை யாட்டு ...... வயலூரா

சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட
     சீலிகுற வாட்டி ...... மணவாளா

தேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டி
     தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆரம் முலை காட்டி மார நிலை காட்டி ... முத்து மாலை அணிந்த
மார்பகத்தைக் காட்டி, மன்மதனுடைய காமநிலைகளைக் காட்டி,

ஆடை அணி காட்டி அநுராக ஆல விழி காட்டி ஓசை மொழி
காட்டி
... ஆடை ஆபரணங்களைக் காட்டி, காம இச்சையை ஊட்டும்
விஷம் கொண்ட கண்களைக் காட்டி, பண் ஒலி கொண்ட பேச்சைக் காட்டி,

ஆதரவு காட்டி எவரோடும் ஈர நகை காட்டி நேர மிகை
காட்டியே
... அன்பினைக் காட்டி, யாரோடும் குளிர்ந்த சிரிப்பைக்
காட்டி, பொழுதெல்லாம் மிகுதியான உறவைக் காட்டியே,

வினைகள் காட்டி உறவாடி ஏதம் மயல் காட்டும் மாதர் வலை
காட்டி
... அவர்களுடைய தொழிலுக்கு உரிய செயல்களைக் காட்டி,
நட்பைக் காட்டி, கேடு விளைவிக்கும் காம மயக்கத்தைக் காட்டும்
விலைமாதர்கள் தமது காம வலையை விரித்து,

ஈடு அழிதல் காட்டல் அமையாதோ ... எனது வலிமை எல்லாம்
தொலைந்து போகும்படி செய்வித்தல் அடங்காதோ?

வீர அபர ஆட்டு சூரர் படை காட்டில் வீழ அனலை ஊட்டி
மயில் ஊர்தி
... வீரத்துடன் எதிர்க்கும் வல்லமை கொண்ட சூரர்களின்
சேனை என்னும் காட்டில் நெருப்பு விழும்படி புகுவித்து மயில்வாகனம்
ஏறுபவனே,

வேலை உறை நீட்டி வேலை தனில் ஓட்டு வேலை
விளையாட்டு வயலூரா
... வேலாயுதத்தை அதன் உறையிலிருந்து
எடுத்து நீட்டிக் கடலில் விளையாட்டைச் செய்த வயலூரா*,

மலை நாட்டில் சேர வாரமுடன் வேட்ட சீலி குறவாட்டி
மணவாளா
... வள்ளிமலை நாட்டில் உன்னுடன் இணைவதற்கு
அன்புடன் விரும்பிய, நல்லொழுக்கம் நிறைந்த, குறப்பெண்ணாகிய
வள்ளியின் கணவனே,

தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி தேவர் சிறை மீட்ட
பெருமாளே.
... உனது ஒளி வாய்ந்த புகழை விளக்கமுறச் சொல்லிய,
ஆசை மிகும் கூட்டத்தாராகிய, தேவர்களைச் சிறையினின்றும் நீக்கிய
பெருமாளே.


* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.


வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1197  pg 2.1198  pg 2.1199  pg 2.1200 
 WIKI_urai Song number: 905 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 901 - Aram mulai kAtti (vayalUr)

Aramulai kAtti mAranilai kAtti
     yAdaiyaNi kAtti ...... anurAka

Alavizhi kAtti Osaimozhi kAtti
     Atharavu kAtti ...... evarOdum

eeranakai kAtti nEramikai kAtti
     yEvinaikaL kAtti ...... yuRavAdi

Ethamayal kAttu mAtharvalai kAtti
     yeedazhithal kAtta ...... lamaiyAthO

veeravapa rAttu cUrarpadai kAttil
     veezhanalai yUtti ...... mayilUrthi

vElaiyuRai neetti vElaithani lOttu
     vElaiviLai yAttu ...... vayalUrA

sEramalai nAttil vAramudan vEtta
     seelikuRa vAtti ...... maNavALA

thEsupukazh theetti yAsaivaru kOtti
     thEvarsiRai meetta ...... perumALE.

......... Meaning .........

Aram mulai kAtti mAra nilai kAtti: They display their bosom bedecked with pearl necklace; they show off their erogenous spots ruled by Manmathan (God of Love);

Adai aNi kAtti anurAka Ala vizhi kAtti Osai mozhi kAtti: they flaunt their dress and ornaments; they exhibit their poisonous eyes that provoke sensual desire; they impress with their musical speech;

Atharavu kAtti evarOdum eera nakai kAtti nEra mikai kAttiyE: they pour their affection and grin coolly at everyone; they feign an exaggerated relationship at all times;

vinaikaL kAtti uRavAdi Etham mayal kAttum mAthar valai kAtti eedu azhithal kAttal amaiyAthO: they display acts of their trade, in an overly friendly manner; and these whores dangerously provoke delusory passion spreading their net of sensual pleasure and dissipating my valour; will this act of destruction never cease?

veera apara Attu cUrar padai kAttil veezha analai Utti mayil Urthi: Mounting the peacock, You rode it into, and set fire to, the forest of the demons' armies who had the valour and courage to confront You in the war!

vElai uRai neetti vElai thanil Ottu vElai viLaiyAttu vayalUrA: Pulling out the spear from its sheath, You wielded it on the sea performing many miracles, Oh Lord of VayalUr!*

malai nAttil sEra vAramudan vEtta seeli kuRavAtti maNavALA: She hailed from Mount VaLLimalai and yearned to unite with You; she is the virtuous damsel of the KuRavAs; You are the consort of that VaLLi!

thEsu pukazh theetti Asai varu kOtti thEvar siRai meetta perumALE.: They are all Your beloved devotees praising Your resplendent glory; those celestials were set free from their prison by You, Oh Great One!


* VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily.


VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 901 Aram mulai kAtti - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]