திருப்புகழ் 900 அரி மருகோனே  (வயலூர்)
Thiruppugazh 900 arimarukOnE  (vayalUr)
Thiruppugazh - 900 arimarukOnE - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானான தானந் தனதன தானான தானந்
     தனதன தானான தானந் ...... தனதான

......... பாடல் .........

அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்
     றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம்

அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்
     றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை

பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்
     பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும்

பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
     பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும்

கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
     கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக்

கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென்
     களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன்

குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
     குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா

குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
     குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அரிமருகோனே நமோவென்று ... திருமாலின் மருமகனே போற்றி
என்றும்,

அறுதியிலானே நமோவென்று ... முடிவு என்பது அற்றவனே
போற்றி என்றும்,

அறுமுக வேளே நமோவென்று ... ஆறுமுகக் கடவுளே போற்றி
என்றும்,

உனபாதம் அரகர சேயே நமோவென்று ... உனது பாதத்தில்,
பாவம் தீர்க்கும் சிவன் மகனே போற்றி என்றும்,

இமையவர் வாழ்வே நமோவென்று ... தேவர்களின் செல்வமே
போற்றி என்றும்,

அருண சொரூபா நமோவென்று ... செந்நிறத்துச் சொரூபனே
போற்றி என்றும்,

உளதாசை ... பலவிதமாக உன்னைத் துதித்து வணங்க எனக்கு ஆசை
இருக்கிறது.

பரிபுர பாதா ... வெற்றிச் சிலம்பு அணிந்த பாதனே,

சுரேசன் தரு மகள் நாதா ... தேவேந்திரன் பெற்ற மகள்
தேவயானையின் நாதனே,

அராவின்பகைமயில் வேலாயுத ஆடம்பர ... பாம்பின் பகையான
மயிலையும் வேலாயுதத்தையும் கொண்ட ஆடம்பரக் கோலாகலனே,

நாளும் பகர்தலிலா தாளை ... ஒரு நாளேனும் நினைத்துச்
சொல்லாத உன் திருவடிகளைப் பற்றி

ஏதுஞ் சிலதறியா ஏழை நானுன் ... சிறிதளவு கூட எதுவும் அறியாத
ஏழை நான் உன் திருவாயால்

பதிபசு பாச உபதேசம் பெறவேணும் ... பதி, பசு, பாசம்*
ஆகியவற்றைப் பற்றிய உபதேசம் பெறவேண்டும்.

கரதல சூலாயுதா ... கையிலே சூலாயுதத்தை ஏந்தியவனே,

முன் சலபதி போல் ஆரவாரம் ... முன்னொரு நாள், கடல் போலப்
பேரோலியும்

கடினசுராபான சாமுண்டியும் ஆட ... கொடிய கள்ளைக் குடித்தலும்
உடைய துர்க்கை ஆடவும்,

கரிபரி மேலேறுவானும் ... யானையை (ஐராவதம்) வாகனமாகக்
கொண்ட இந்திரனும்

செயசெய சேனா பதீயென் ... ஜெய ஜெய சேனாபதியே என்று
ஆரவாரம் செய்யவும்,

களமிசை தானேறியே ... போர்க்களத்தின் மேல் நீ புகுந்ததால்

அஞ்சிய சூரன் குரல்விட ... பயந்து நடுங்கிய சூரன் கூக்குரலிடவும்,

நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகம் ... நாயும், பேயும்,
பூதங்களும், கழுகுகளும், நரிகளும், காகங்களும்

குடல்கொளவே ... அவனது குடலைக் கீறித் தின்னவும்,

பூசலாடும் பலதோளா ... சண்டை செய்த பல தோள்களை
உடையவனே,

குடதிசை வாராழி போலும் ... மேற்குத் திசையில் பெரிய சமுத்திரம்
போன்று

படர்நதி காவேரி சூழும் ... பரவி வரும் காவேரி ஆறு சூழ்ந்த

குளிர்வயலூர் ஆர மேவும் பெருமாளே. ... குளிர்ந்த வயலூரில்*
உள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமாளே.


* பதி - கடவுள், பசு - ஜீவாத்மா, பாசம் - மும்மலம் ஆகிய ஆணவம், கன்மம், மாயை.


** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.


வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1195  pg 2.1196  pg 2.1197  pg 2.1198 
 WIKI_urai Song number: 904 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 900 - ari marugOnE (vayalUr)

arimaru gOnE namOvendr aRudhiyi lAnE namOvendr
     aRumuga vELE namOvendr ...... una pAdham

arahara sEyE namOvendr imayavar vAzhvE namOvendr
     aruNa sorUpA namOvendr ...... uLadhAsai

paripura pAdhA surEsan tharumagaL nAthA varAvin
     pagai mayil vElA yudhAdam ...... bara nALum

pagardhal ilA thALai Edhum siladhaRiyA Ezhai nAnun
     pathi pasu pAsOpa dhEsam ...... peRa vENum

karathala sUlAyu dhAmun jalapathi pOlAra vArang
     kadina surA pAna chAmuN ...... diyum Ada

karipari mElERu vAnum jeya jeya sEnApathee en
     kaLa misai thAn ERiyE ...... anjiya sUran

kuralvida nAy pEygaL bUthang kazhugugaL kOmAyu kAkang
     kudal koLavE pUsalAdum ...... palathOLA

kudadhisai vArAzhi pOlum padar nadhi kAvEri sUzhum
     kuLir vayalUrAra mEvum ...... perumALE.

......... Meaning .........

arimaru gOnE namOvendru: "Oh the nephew of Vishnu, I bow to You.

aRudhiyi lAnE namOvendru: Oh One who does not have an end, I bow to You.

aRumuga vELE namOvendru: Oh Lord with six faces, I bow to You.

una pAdham arahara sEyE namOvendru: I bow to Your feet Oh, Son of SivA who removes all sins.

imayavar vAzhvE namOvendru: You are the Treasure of all DEvAs, I bow to You.

aruNa sorUpA namOvendru: Oh Lord with the colour of the rising sun, I bow to You".

uLadhAsai: I have the desire to bow to You in various ways.

paripura pAdhA: You wear the victorious anklets around Your feet!

surEsan tharumagaL nAthA: You are the consort of DEvayAnai, daughter of DEvEndrA!

arAvin pagai mayil vElAyudha Adambara: You proudly display Your peacock, a foe of the serpent, and Your spear!

nALum pagardhal ilA thALai: I never praise Your feet even for a day.

Edhum siladhaRiyA Ezhai nAn: I do not know even the basic things.

un pathi pasu pAsOpadhEsam peRa vENum: Will You teach me the principles of Pathi-Pasu-PAsam?*

karathala sUlAyudhA: You hold the weapon of Trident in Your hand!

mun jalapathi pOlAra vArang: Once, making noise like the waves of a turbulent sea,

kadina surA pAna chAmuN diyum Ada: and intoxicated with crude wine, Mother Durga danced; and

karipari mElERu vAnum jeya jeya sEnApathee ena: IndrA, who mounts the elephant (AirAvatham), shouted "Oh Our Commander-in-Chief, Victory to You!";

kaLa misai thAn ERiyE: when You entered the battlefield.

anjiya sUran kuralvida: SUran, who was scared, screamed uncontrollably; and

nAy pEygaL bUthang kazhugugaL kOmAyu kAkang kudal koLavE: his intestines were preyed upon by hounds, ghosts, devils, eagles, jackals and crows;

pUsalAdum palathOLA: when You fought with the might of Your many shoulders!

kudadhisai vArAzhi pOlum padar nadhi kAvEri sUzhum: To the west of this town, there is the River KAvEri which spreads like a huge ocean

kuLir vayalUrAra mEvum perumALE.: You reside contended at this cool place, VayalUr, which is Your abode, Oh Great One!


* Pathi - God; Pasu - JeevAthma {this soul}; and PAsam - the three slags of arrogance, karma and delusion.


** VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily.


VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 900 ari marukOnE - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]