திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 899 ஆங்குடல் வளைந்து (திருமாந்துறை) Thiruppugazh 899 AngudalvaLaindhu (thirumAndhuRai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தாந்தன தனந்த தாந்தன தனந்த தாந்தன தனந்த ...... தனதான ......... பாடல் ......... ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று ...... கிடையோடே ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன் ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் ...... தருவாயே வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப ...... மணவாளா வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் ...... புரிவோனே மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த ...... வளநாடா மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஆங்குடல் வளைந்து ... நன்றாக இருந்த குடல் வளைவுற்று கூன்விழுந்து, நீங்குபல் நெகிழ்ந்து ... விழவேண்டிய பற்கள் தளர்ச்சி அடைந்து, ஆய்ஞ்சுதளர் சிந்தை தடுமாறி ... ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து, ஆர்ந்துள கடன்கள் வாங்கவும் அறிந்து ... வரவேண்டிய கடன்களை வாங்கவேண்டிய இடங்களில் வாங்கி, ஆண்டுபல சென்று கிடையோடே ... இவ்வாறே பல ஆண்டுகள் செல்ல, படுத்த படுக்கையாகி, ஊங்கிருமல் வந்து ... மிகுந்த இருமல் நோய் ஏற்பட்டு, வீங்குகுடல் நொந்து ... வீங்கும் குடலும் நோவுற்று, ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர்போமுன் ... சோர்வடைந்து, உணர்ச்சியும் அடங்கி, உயிர் போவதற்கு முன்பு, ஓங்குமயில் வந்து ... விளங்கி நிற்கும் மயில் மீது நீ வந்து சேண்பெற இசைந்து ... யான் விண்ணுலகை அடைவதற்கு நீ மனம் இணங்கி, ஊன்றிய பதங்கள் தருவாயே ... நிலைபெற்ற உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த ... வேங்கை மரங்களும் உயரமான, இனிய தினைப்பயிர்களும் மிகுந்த வயலிலே இருந்த ஏந்திழையி னின்ப மணவாளா ... அழகிய தேவி வள்ளியின் இனிய மணவாளனே, வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச ... வேண்டிக்கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க, வேண்டிய பதங்கள் புரிவோனே ... அவர்கள் விரும்பிய திருவடிகளை அருள் புரிபவனே, மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து ... மாம்பழம் உடைந்து அதன் சாறு வயலில் நிறைந்து, மாண்புநெல் விளைந்த வளநாடா ... சிறந்த நெற்பயிர் விளையும் வளமான சோழ நாடனே, மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற ... மனிதர்களும், தவசிகளும், தேவேந்திரனும் பரவிப் போற்ற நின்ற மாந்துறை யமர்ந்த பெருமாளே. ... திருமாந்துறைத்* தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* திருமாந்துறை திருச்சியை அடுத்த திருவானைக்காவுக்கு வடகிழக்கில் 10 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1193 pg 2.1194 WIKI_urai Song number: 903 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 899 - Angudal vaLaindhu (thirumAndhuRai) Ang kudal vaLaindhu neengu pal negizhndhu Aynju thaLar chinthai ...... thadumARi ArndhuLa kadangaL vAngavu maRindhu ANdu pala sendru ...... kidaiyOdE Ungirumal vandhu veengu kudal nondhu OyndhuNar vazhindhu ...... uyir pOmun Ongu mayil vandhu sENpera isaindhu Undriya padhangaL ...... tharuvAyE vEngaiyum uyarndha theempunam irundha vEnthizhaiyin inba ...... maNavALA vEndum avar thangaL pUNda padha minja vEndiya padhangaL ...... purivOnE mAngkani udaindhu thEnga vayal vandhu mANbunel viLaindha ...... vaLanAdA mAndhar thavar umbark On paravi nindra mAnthuRai amarndha ...... perumALE. ......... Meaning ......... Ang kudal vaLaindhu: Intestines which had been in good shape became crooked; neengu pal negizhndhu: the teeth, destined to fall off, became loosened; Aynju thaLar chinthai thadumARi: the mind, capable of analysis, became tired and disoriented; ArndhuLa kadangaL vAngavu maRindhu: the overdue debts were duly collected; ANdu pala sendru kidaiyOdE: and several years passed like this until I became confined to the bed. Ungirumal vandhu veengu kudal nondhu: Severe cough was triggered, and the swollen intestines began to ache. OyndhuNar vazhindhu: Extreme fatigue set in, and the faculties began to decline. uyir pOmun Ongu mayil vandhu: Before the life leaves my body, You must come mounted on Your great Peacock! sENpera isaindhu: Kindly give Your consent for my entering the heaven Undriya padhangaL tharuvAyE: and grant me Your firm feet! vEngaiyum uyarndha theempunam irundha: She lived in the field of neem trees and tall sweet millet; vEnthizhaiyin inba maNavALA: she was the pretty damsel, VaLLi; and You are her consort! vEndum avar thangaL pUNda padha minja: You elevate the status of those who worship You vEndiya padhangaL purivOnE: and bless them with Your hallowed feet which they seek! mAngkani udaindhu thEnga vayal vandhu: In the fields, mangoes burst open, with the juices filling them up; mANbunel viLaindha vaLanAdA: and rich paddy grows in Your fertile ChOzhanAdu! mAndhar thavar umbark On paravi nindra: All people, sages and IndrA, the King of the Celestials, stand there worshipping You at mAnthuRai amarndha perumALE.: ThirumAnthuRai, where You are seated, Oh Great One! |
* ThirumAnthuRai is near Trichy, 10 miles northeast of ThiruvAnaikkA. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |