திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 872 மனமெனும் பொருள் (சிவபுரம்) Thiruppugazh 872 manamenumporuL (sivapuram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன ...... தனதான ......... பாடல் ......... மனமெ னும்பொருள் வானறை கால்கனல் புனலு டன்புவி கூடிய தோருடல் வடிவு கொண்டதி லேபதி மூணெழு ...... வகையாலே வருசு கந்துய ராசையி லேயுழல் மதியை வென்றுப ராபர ஞானநல் வழிபெ றும்படி நாயடி யேனைநி ...... னருள்சேராய் செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி யெண்குண பூரணி காரணி சிவைப ரம்பரை யாகிய பார்வதி ...... அருள்பாலா சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற அசுரர் தங்கிளை யானது வேரற சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு ...... முருகோனே கனக னங்கையி னாலறை தூணிடை மனித சிங்கம தாய்வரை பார்திசை கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் ...... முனையாலே கதற வென்றுடல் கீணவ னாருயி ருதிர முஞ்சித றாதமு தாயுணு கமல வுந்திய னாகிய மால்திரு ...... மருகோனே தினக ரன்சிலை வேளருள் மாதவர் சுரர்க ளிந்திர னாருர காதிபர் திசைமு கன்செழு மாமறை யோர்புக ...... ழழகோனே திரும டந்தையர் நாலிரு வோர்நிறை அகமொ டம்பொனி னாலய நீடிய சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மனமெ னும்பொருள் ... மனம் என்ற ஒரு பொருளுடன் வான் அறைகால் கனல் புனலுடன்புவி கூடியதோர் உடல் ... ஆகாயம், வீசும் காற்று, நெருப்பு, நீர், பூமி ஆகிய பஞ்ச பூதங்களும் ஒரு தேகம் என்ற வடிவு கொண்டு ... உருவத்தைக் கொண்டு அதிலேபதி மூணெழு வகையாலே ... அதில் (13ஐ 7ஆல் பெருக்கிய) 91 தத்துவ மாற்றங்களாலே*1 வரு சுகந்துயர் ஆசையிலேயுழல் ... ஏற்படும் இன்பம், துன்பம், ஆசை இவற்றிலே உழல்கின்ற மதியை வென்று ... என் புத்தியை நான் ஜெயித்து, பராபர ஞான நல்வழி பெறும்படி ... மேலான ஞானமென்னும் நல்ல நெறியை அடையும்படியாக நாயடியேனை நின் அருள்சேராய் ... நாய் ஒத்த இந்த அடியேனுக்கு உன் திருவருளைச் சேர்ப்பாயாக. செனனி சங்கரி ஆரணி நாரணி ... உலகங்களைப் பிறப்பித்தவள், சங்கரி, வேத முதல்வி, நாராயணி, விமலி யெண்குண பூரணி காரணி ... குற்றமற்றவள், எண்குணங்களும்*2 நிறைந்தவள், காரணமானவள், சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா ... சிவை, பராபரை ஆகிய பார்வதி அருளிய குழந்தாய், சிறைபுகுஞ் சுரர் மாதவர் மேல்பெற ... சூரனின் சிறையில் இருந்த தேவர்கள், முனிவர்கள் விடுதலை பெற, அசுரர் தங்கிளையானது வேரற ... அசுரக்கூட்டமெல்லாம் வேரற்று அழிய, சிவன் உகந்தருள் கூர்தரு வேல்விடு முருகோனே ... சிவபிரான் மகிழ்ந்து உனக்குத் தந்த கூரிய வேலைச் செலுத்திய முருகப் பெருமானே, கனகன் அங்கையினால் அறை தூணிடை ... இரணியன் தன் உள்ளங்கையால் அறைந்த தூணிலிருந்து மனித சிங்கமதாய் ... நரசிம்ம உருவத்தில் வரை பார்திசை கடல்கலங்கிடவே ... மலை, பூமி, திசைகள், கடல் இவையாவும் கலங்கிடத் தோன்றி, பொருதே உகிர் முனையாலே ... இரணியனுடன் போர்செய்து தன் நகத்தின் நுனியாலே, கதற வென்றுடல் கீண அவனாருயிர் ... அவனைக் கதறி அழும்படி வென்று, அவனது அரிய உயிரை உதிரமுஞ் சிதறாது அமுதாய் உ(ண்)ணு ... ரத்தம் சிந்தாவண்ணம் அமுதுபோல் அருந்திய கமல வுந்தியனாகிய மால்திரு மருகோனே ... தாமரை ஒத்த வயிறுடைய திருமாலின் அழகிய மருமகனே, தினகரன்சிலை வேள் அருள் மாதவர் ... சூரியன், கரும்புவில் மன்மதன், அருள்மிகு முனிவர்கள், சுரர்கள் இந்திரனார் உரகாதிபர் ... தேவர்கள், இந்திரர்கள், நாகலோகத்து அதிபர்கள், திசைமுகன்செழு மாமறை யோர் ... பிரம்மா, செம்மை பொருந்திய சிறந்த அந்தணர்கள் ஆகியோர் புகழ் அழகோனே ... போற்றிப் புகழ்கின்ற அழகனே, திருமடந்தையர் நாலிருவோர் நிறை ... அஷ்டலட்சுமிகள்*3 நிறைந்த அகமொடம்பொனின் ஆலய நீடிய ... வீடுகளும், சொக்கத் தங்கத்தால் ஆன கோயிலும் சிறப்பாக விளங்கும் சிவபுரந்தனில் வாழ்குரு நாயக பெருமாளே. ... சிவபுரம்*4 என்ற தலத்தில் வாழும் குருமூர்த்திப் பெருமாளே. |
(*1) 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை. |
96 தத்துவங்கள் பின்வருமாறு: 36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5. ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி. ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. |
(*2) இறைவனின் எண் குணங்கள்: 1. தன்வயத்தனாதல், 2. தூய உடம்பினன் ஆதல், 3. இயற்கை உணர்வினன் ஆதல், 4. முற்றும் உணர்தல், 5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல், 6. பேரருள் உடைமை, 7. முடிவிலா ஆற்றல் உடைமை, 8. வரம்பிலா இன்பம் உடைமை. |
(*3) அஷ்டலட்சுமிகள் பின்வருமாறு: தன, தான்ய, தைரிய, வீர, வித்தியா, கீர்த்தி, விஜய, ராஜ்ய லட்சுமி. |
(*4) சிவபுரம் கும்பகோணத்துக்கு தென்கிழக்கில் 3 மைல் தொலைவில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1119 pg 2.1120 pg 2.1121 pg 2.1122 WIKI_urai Song number: 876 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 872 - manamenum poruL (sivapuram) manam enum poruL vAnaRai kAl kanal punaludan buvi kUdiya dhOrudal vadivu koNdadhilE padhi mUNezhu ...... vagaiyAlE varu suganthuya rAsaiyilE uzhal madhiyai vendru parApara nyAna nal vazhi peRumpadi nAyadiyEnai nin ...... aruL sErAy jenani sankari AraNi nAraNi vimali eN guNa pUraNi kAraNi sivai paramparai Agiya pArvathi ...... aruL bAlA siRai pugum surar mAdhavar mEl peRa asurar thankiLai yAnadhu vEraRa sivan ugandharuL kUrtharu vEl ...... vidu murugOnE kanakan ankaiyinAl aRai thUNidai manidha singa madhAy varai pAr dhisai kadal kalangidavE porudhE ugir ...... munaiyAlE kadhaRa vendrudal keeNavan Aruyir udhiramum chidhaRa adhamudhAy uNu kamala undhiya nAgiya mAl thiru ...... marugOnE dhinakaran silai vEL aruL mAdhavar surargaL indhiranAr uragAdhipar dhisai mugan sezhu mAmaRaiyOr pugazh ...... azhagOnE thiru madandhaiyar nAl iruvOr niRai agamo damponi nAlaya neediya sivapuran thanil vAzh guru nAyaka ...... perumALE. ......... Meaning ......... manam enum poruL: With a thing called the Mind, vAnaRai kAl kanal punaludan buvi kUdiya dhOrudal vadivi kondu: are combined the five Elements, namely, Cosmos, blowing Air, Fire, Water and Earth to form this Body. adhilE padhi mUNezhu vagaiyAlE: This Body is subjected to (13 X 7) 91 tenets (ThathvAs)*1, varu suganthuya rAsaiyilE uzhal madhiyai vendru: which combine to cause happiness, misery and desires tormenting the Mind and the Intellect; and I must conquer them. parApara nyAna nal vazhi peRumpadi: In order that I obtain the Supreme Knowledge and follow the Right way of Life, nAyadiyEnai nin aruL sErAy: You must grace this dog, namely myself. jenani sankari AraNi nAraNi: Universal Mother, Sankari, The VEdic Supreme, NarAyaNi, vimali eN guNa pUraNi kAraNi: The Purest, One who has all eight Divine Characteristics*2, The Cause for Everything, sivai paramparai: Sivai, and The One who is Superior to the Supreme Agiya pArvathi aruL bAlA: that PArvathi graciously delivered You as Her Son! siRai pugum surar mAdhavar mEl peRa: To liberate the DEvAs and the Sages from their bondage and to restore their Kingdom, asurar thankiLai yAnadhu vEraRa: and to annihilate the asura (demons) dynasty, sivan ugandharuL kUrtharu vEl vidu murugOnE: You threw the sharp spear gifted happily to You by SivA, Oh Muruga. kanakan ankaiyinAl aRai thUNidai: When HiraNyA hit the pillar with his forehand, manidha singa madhAy: out came Narasimha (half Human-half-Lion form); varai pAr dhisai kadal kalangidavE porudhE: and He fought with HiraNyA while the mountains, the earth and the seas shook. ugir munaiyAlE kadhaRa vendrudal keeNa: He used His sharp nails to pierce his body and to win over screaming HiraNyA and avan Aruyir udhiramum chidhaRa adhamudhAy uNu: without spilling even a drop of blood, He drank all of HiraNyA's blood and life as though it was Divine Nectar! kamala undhiya nAgiya mAl thiru marugOnE: You are the great nephew of that Vishnu (who came as Narasimha) with a lotus-like belly! dhinakaran silai vEL aruL mAdhavar: The Sun, Manmathan (Love God), the graceful Sages, surargaL indhiranAr uragAdhipar: the DEvAs, IndrAs, the leaders of NagalOkA (Sepent Kingdom) dhisai mugan sezhu mAmaRaiyOr pugazh azhagOnE: BrahmA, and the Great VEdic Scholars have all assembled to praise Your Glory, Oh Handsome One! thiru madandhaiyar nAl iruvOr niRai agamodu: All homes here are replete with Ashta Lakshmis (Eight Goddesses of Wealth*3), and amponi nAlaya neediya: the beautiful temple is made of pure gold at this place which is sivapuran thanil vAzh guru nAyaka perumALE.: Sivapuram*4, and You are the Supreme Master residing here, Oh Great One! |
(*1) There are 96 ThathvAs (tenets) which include 5 SivA ThathvAs. Mind never gets affected if the SivA ThathvAs are present; hence SwAmigal stated about 91 ThathvAs. |
The 96 thathvAs (tenets) are as follows: 36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5. 5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos. 35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech). |
(*2) The eight characteristics of God are as follows: 1. Peerless -Superiorless- Self-absorbing 2. Always in Chaste form 3. Natural-Sensed 4. Omniscient 5. By nature, bondless 6. Height of Grace 7. Omnipotent 8. Limitlessly Blissful. |
(*3) Eight Lakshmis are: Dhana, DhAnya, Dhairya, Veera, VidhyA, Keerthi, Vijaya and RAjya Lakshmis. |
(*4) Sivapuram is 3 miles Southeast of KumbakONam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |