திருப்புகழ் 871 பட்டுமணிக் கச்சி  (கொட்டையூர்)
Thiruppugazh 871 pattumaNikkachchi  (kottaiyUr)
Thiruppugazh - 871 pattumaNikkachchi - kottaiyUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத்
     தத்ததனத் தத்ததனத் ...... தனதான

......... பாடல் .........

பட்டுமணிக் கச்சிறுகக் கட்டியவிழ்த் துத்தரியப்
     பத்தியின்முத் துச்செறிவெற் ...... பிணையாமென்

பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்
     பட்டுருகிக் கெட்டவினைத் ...... தொழிலாலே

துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
     சுற்றுமறச் சித்தனெனத் ...... திரிவேனைத்

துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
     சுத்தியணைப் பத்தரில்வைத் ...... தருள்வாயே

சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
     துக்கமுறச் சொர்க்கமுறக் ...... கொடியாழார்

சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்
     சுற்றுவனத் திற்சிறைவைத் ...... திடுதீரன்

கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
     குற்றமறச் சுற்றமறப் ...... பலதோளின்

கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
     கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பட்டு மணிக் கச்சு இறுகக் கட்டி அவிழ்த்து உத்தரியப்
பத்தியின் முத்துச் செறி வெற்பு இணையாம் என் பற்ப(ம்)
முகைக் குத்து முலை
... பட்டாலாகிய அழகிய கச்சை அழுத்தமாகக்
கட்டியும் பிறகு அவிழ்த்தும், மேலாடை வரிசையை ஒட்டி முத்து மாலை
நெருங்கிய, மலை போன்றவை என்று சொல்லத் தக்கனவும் தாமரையின்
மொட்டுப் போன்றனவுமான கூரிய மார்பகங்ளை உடைய,

தத்தையர் கைப் புக்கு வசப் பட்டு உருகிக் கெட்ட வினைத்
தொழிலாலே
... கிளி போன்ற விலைமாதர்களின் கையில் அகப்பட்டு,
அவர்களின் வசத்தில் சிக்கி, மனம் உருகி, கேடு தருவதும் வினையைப்
பெருக்குவதுமான செயல்களில் ஈடுபட்டு,

துட்டன் எனக் கட்டன் எனப் பித்தன் எனப் ப்ரட்டன் எனச்
சுற்றும் அறச் சித்தன் எனத் திரிவேனை
... துஷ்டன் என்றும்,
துன்பத்துக்கு ஆளானவன் என்றும், பித்தன் என்றும், நெறியினின்று
வழுவியவன் என்றும், எங்கும் திரியும் பாவ எண்ணங்களை உடையவன்
என்றும் அலைகின்ற என்னை,

துக்கம் அறுத்துக் கமலப் பொன் பதம் வைத்துப் பதவிச் சுத்தி
அணைப் பத்தரில் வைத்து அருள்வாயே
... என் துயரங்களை
நீக்கி, தாமரை போன்ற அழகிய திருவடியில் என்னைச் சேர்த்தும்,
பரிசுத்தமான நல்ல பதவியை அணைந்துள்ள பக்தர் கூட்டத்தில்
சேர்ப்பித்தும் அருள் புரிவாயாக.

சுட்ட பொருள் கட்டியின் மெய்ச் செக்கமலப் பொன்
கொடியைத் துக்கம் உற
... சுட்ட தங்கக் கட்டி போன்ற உடலை
உடையவளும், செங்கமலத்தில் வீற்றிருக்கும் லக்ஷ்மியுமான அழகிய
கொடி போன்ற சீதையை துக்கப்படும்படிச் செய்து,

சொர்க்கம் உறக் கொடி யாழார் சுத்த ரதத்தில் கொடு புக்குக்
கடுகித் தெற்(கு)க் கடைசிச் சுற்று வனத்தில் சிறைவைத்திடு
தீரன்
... ஆகாயத்தை அளாவும் வீணைக் கொடி விளங்கும் தூய்மை
வாய்ந்த (புஷ்பக) ரதத்தில் அவளை எடுத்துச் சென்று, வேகமாக
தெற்குத் திசையை அடைந்து அங்கு கோடியில் வளைந்தமைந்த
(அசோக) வனத்தில் சிறைவைத்த (ராவணன்) என்னும் வீரனின்

கொட்டம் அறப் புற்று அரவச் செற்றம் அறச் சத்தம் அறக்
குற்றம் அறச் சுற்றம் அறப் பல தோளின் கொற்றம் அறப்
பத்து முடிக் கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணிக்
கொட்டை நகர்ப் பெருமாளே.
... இறுமாப்பு அழிய, புற்றிலிருந்து
சீறும் பாம்பின் கோபம் போன்ற சினம் அற்றுப்போக, குரல் ஒலியும்
அடங்க, அவனது பழுதும் நீங்க, சுற்றத்தார் யாவரும் மாண்டு போக,
அவனுக்கு இருந்த பல தோள்களின் வீரம் குலைய, பத்து முடிகளும்
அறுந்து போக, வீரம் காட்டிய வெற்றியாளராகிய ராமர் (திருமால்)
பணிந்து நின்று பூஜித்த, கொட்டையூரில் வீற்றிருக்கும் பெருமாளே.


* கொட்டையூர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது.
இங்கு திருமால் முருகனுக்கு பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1117  pg 2.1118  pg 2.1119  pg 2.1120 
 WIKI_urai Song number: 875 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 871 - pattumaNik kachchi (kottaiyUr)

pattumaNik kacchiRukak kattiyavizhth thuththariyap
     paththiyinmuth thuccheRiveR ...... piNaiyAmen

paRpamukaik kuththumulaith thaththaiyarkaip pukkuvasap
     patturukik kettavinaith ...... thozhilAlE

thuttanenak kattanenap piththanenap prattanenac
     chutRumaRac chiththanenath ...... thirivEnaith

thukkamaRuth thukkamalap poRpathamvaith thuppathavic
     chuththiyaNaip paththarilvaith ...... tharuLvAyE

suttaporut kattiyinmeyc chekkamalap poRkodiyaith
     thukkamuRac chorkkamuRak ...... kodiyAzhAr

suththarathath thiRkodupuk kukkadukith theRkadaisic
     chutRuvanath thiRchiRaivaith ...... thidutheeran

kottamaRap putRaravac chetRamaRac chaththamaRak
     kutRamaRac chutRamaRap ...... palathOLin

kotRamaRap paththumudik koththumaRuth thittathiRaR
     kotRarpaNik kottainakarp ...... perumALE.

......... Meaning .........

pattu maNik kacchu iRukak katti avizhththu uththariyap paththiyin muththuc cheRi veRpu iNaiyAm en paRpa(m) mukaik kuththu mulai: Making a tight knot in the beautiful silk blouse and untying it later, wearing a string of pearls right along the border of the upper garment, and displaying their sharp bosom that could be compared to the mountain and the lotus bud,

thaththaiyar kaip pukku vasap pattu urukik ketta vinaith thozhilAlE: these parrot-like whores have taken me over in their hands; falling a victim to their tight grip, I have been indulging, with a melting heart, in evil acts that add to my bad deeds;

thuttan enak kattan enap piththan enap prattan enac chutRum aRac chiththan enath thirivEnai: I have been branded as a wicked fellow, an ill-fated one, a lunatic, an unlawful person and one whose sinful thoughts wander everywhere; I roam about with all such blemishes;

thukkam aRuththuk kamalap pon patham vaiththup pathavic chuththi aNaip paththaril vaiththu aruLvAyE: kindly remove all my miseries by taking hold of me under Your hallowed feet and graciously handing me over to the company of Your devotees who have already reached the pure and exalted position, Oh Lord!

sutta poruL kattiyin meyc chekkamalap pon kodiyaith thukkam uRa: She has a body with the complexion of molten gold; She is none other than Goddess Lakshmi seated on a red lotus; She is like a beautiful creeper; agonising that Seethai,

sorkkam uRak kodi yAzhAr suththa rathaththil kodu pukkuk kadukith theR(ku)k kadaisic chutRu vanaththil siRaivaiththidu theeran: he abducted her, placing her on his pure chariot (called Pushpaka), that had a sky-high staff with the insignia of veeNA (a string instrument); he swiftly went in the southerly direction and placed her in a remote prison called ashOkavanam (forest of ashOkA trees), shaped like a crescent; he was the mighty warrior, RAvaNan;

kottam aRap putRu aravac chetRam aRac chaththam aRak kutRam aRac chutRam aRap pala thOLin kotRam aRap paththu mudik koththum aRuththitta thiRal kotRar paNik kottai nakarp perumALE.: destroying his arrogance, eradicating his anger which was like that of a serpent seething fiercely from its putRu (a mound formed by snakes as their resting place), silencing his voice, removing his blemishes, annihilating all his kith and kin, upsetting the valour of his several shoulders and severing his ten heads, He established His bravery; that victorious RAmA (VishNu) worshipped You with devotion in KottaiyUr* which is Your abode, Oh Great One!


* KottaiyUr is near KumbakONam. It is in KottaiyUr that Lord VishNu is said to have offered worship to Lord Murugan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 871 pattumaNik kachchi - kottaiyUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]