திருப்புகழ் 869 செனித்திடும் சலம்  (கும்பகோணம்)
Thiruppugazh 869 seniththidumsalam  (kumbakONam)
Thiruppugazh - 869 seniththidumsalam - kumbakONamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தந்தன தானன தானன
     தனத்த தந்தன தானன தானன
          தனத்த தந்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்
     விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய
          செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு ...... முடலூடே

தெளித்தி டும்பல சாதியும் வாதியும்
     இரைத்தி டுங்குல மேசில கால்படர்
          சினத்தி டும்பவ நோயென வேயிதை ...... யனைவோருங்

கனைத்தி டுங்கலி காலமி தோவென
     வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென
          கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு ...... முடல்பேணிக்

கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்
     இருக்கி டுங்கலை யேபல வாசைகள்
          கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு ...... மருள்வாயே

தனத்த னந்தன தானன தானன
     திமித்தி திந்திமி தீதக தோதக
          தகுத்து துந்துமி தாரைவி ராணமொ ...... டடல்பேரி

சமர்த்த மொன்றிய தானவர் சேனையை
     வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக
          சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் ...... புரிவோனே

தினைப்பு னந்தனி லேமய லாலொரு
     மயிற்ப தந்தனி லேசர ணானென
          திருப்பு யந்தரு மோகன மானினை ...... யணைவோனே

சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய
     தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர
          திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

செனித்திடும் சலம் சாழலும் ஊழலும் ... பிறப்பு என்கின்ற
பொய்ம்மையோடு கூத்து விளையாட்டு போன்றவை என்ன, ஆபாசம்
என்ன,

விளைத்திடும் குடல் பீறியும் மீறிய செருக்கொடும் சதை
பீளையும் ஈளையும் உடலூடே
... பிறப்பால் ஏற்படும் குடல், அந்தக்
குடலைக் கிழித்துக்கொண்டு எழுவது போல மேல் நோக்கி எழுகின்ற
ஆணவம் என்ன, அந்த உடலில் உள்ள சதை, பீளை, கோழை
முதலியவை என்ன,

தெளித்திடும் பல சாதியும் வாதியும் ... தோன்றியுள்ள பல சாதிகள்
என்ன, அதைக் குறித்து வாதிப்பவர் என்ன,

இரைத்திடும் குலமே சில கால் படர் சினத்திடும் பவ
நோயெனவே
... கூச்சலிட்டுப் பேசும் குலத்தவர் என்ன, சில சமயங்களில்
துன்பம் கோபித்து எழுவது போல் பிறப்பு என்னும் நோய் என்றே

இதை அனைவோரும் கனைத்திடும் கலி காலம் இதோ என ...
இவ்வாழ்வை எல்லோரும் ஒலித்து எழும் கலிகாலத்தின் கூத்தோ இது
என்று கூறுவது என்ன,

எடுத்திடும் சுடு காடு புகா என கவிழ்த்திடும் சடமோ
பொடியாய் விடும் உடல் பேணி
... (பிணத்தை) எடுங்கள், சுடு
காட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறுவதும், (அங்கே போய்
பாடையிலிருந்து) கவிழ்க்கப்பட்டதுமான உடல் சாம்பலாகிவிடும் இந்த
உடம்பை நான் விரும்பிப் போற்றி,

கடுக்கனும் சில பூடணம் ஆடைகள் இருக்கிடும் கலையே பல
ஆசைகள்
... (அவ்வுடலை அலங்கரிக்கக்) கடுக்கன் முதலிய சில
அணிகலன்களை அணிவது என்ன, உடைகள் அணிவது என்ன, 'ரிக்கு'
வேத மந்திரங்களால் பெறப்படும் சாஸ்திர நூல்களைப் படிப்பது என்ன,

கழித்திடும் சிவ யோகமும் ஞானமும் அருள்வாயே ... இவை
யாவற்றையும் ஒழிக்க வல்ல சிவ யோகத்தையும் சிவ ஞானத்தையும்
எனக்கு அருள்வாயாக.

தனத்த னந்தன தானன தானன
     திமித்தி திந்திமி தீதக தோதக
          தகுத்து துந்துமி
... (இதே ஒலியில்)

தாரை விராணமொடு அடல் பேரி ... தம்பட்டை, வீராணம் என்ற
பெரிய பறை, வெற்றி முரசு இவைகளுடன்

சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை வளைத்து வெம் சினம்
வேல் விடு சேவக
... போருக்குக் கூடி வந்த அசுரர்களுடைய
சேனைகளை வளைத்து, கொடிய கோபம் கொண்டு வேலாயுதத்தைச்
செலுத்திய வலிமை உள்ளவனே,

சமத்து உணர்ந்திடு மா தவர் பால் அருள் புரிவோனே ... உனது
திறமையை தெரிந்துள்ள சிறந்த முனிவர்களுக்கு அருள் செய்பவனே,

தினைப் புனம் தனிலே மயலால் ஒரு மயில் பதம் தனிலே
சரண் நான் என
... தினைப் புனத்தில் காதல் இச்சையால் ஒப்பற்ற
மயில் போன்ற வள்ளியின் பாதத்தில் நான் அடைக்கலம் என்று நீ கூற,

திருப் புயம் தரு மோகன மானினை அணைவோனே ... தனது
அழகிய புயங்களைத் உனக்குத் தந்த மோகனமான மானை ஒத்த
வள்ளியை அணைபவனே,

சிவக் கொழும் சுடரே பரனாகிய தவத்தில் வந்தருள் பால
க்ருபாகர
... சிவனிடத்தினின்றும் தோன்றிய செவ்விய சுடரே, தவம்
செய்வோர் பொருட்டுப் பரனாகி வெளித் தோன்றி வந்து அருளும்
குழந்தையே, கருணைத் தெய்வமே,

திருக் குடந்தையில் வாழ் முருகா சுரர் பெருமாளே. ...
கும்பகோணத்தில் வாழும் முருகனே, தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1111  pg 2.1112  pg 2.1113  pg 2.1114 
 WIKI_urai Song number: 873 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 869 - seniththidum salam (kumbakONam)

seniththi dunjcala sAzhalu mUzhalum
     viLaiththi dungkudal peeRiyu meeRiya
          serukko dunjcathai peeLaiyu meeLaiyu ...... mudalUdE

theLiththi dumpala sAthiyum vAthiyum
     iraiththi dungkula mEsila kAlpadar
          sinaththi dumpava nOyena vEyithai ...... yanaivOrung

kanaiththi dungkali kAlami thOvena
     veduththi dunjcudu kAdupu kAvena
          kavizhththi dunjcada mOpodi yAyvidu ...... mudalpENik

kadukka nunjcila pUdaNa mAdaikaL
     irukki dungkalai yEpala vAsaikaL
          kazhiththi dunjsiva yOkamu njAnamu ...... maruLvAyE

thanaththa nanthana thAnana thAnana
     thimiththi thinthimi theethaka thOthaka
          thakuththu thunthumi thAraivi rANamo ...... dadalpEri

samarththa monRiya thAnavar sEnaiyai
     vaLaiththu venjcina vElvidu sEvaka
          samaththu Narnthidu mAdhavar pAlaruL ...... purivOnE

thinaippu nanthani lEmaya lAloru
     mayiRpa thanthani lEsara NAnena
          thiruppu yantharu mOkana mAninai ...... yaNaivOnE

sivakko zhunjcuda rEpara nAkiya
     thavaththil vantharuL pAlakru pAkara
          thirukku danthaiyil vAzhmuru kAsurar ...... perumALE.

......... Meaning .........

seniththidum calam sAzhalum Uzhalum: What a charade is played in the name of this myth that is called birth! What a nasty game!

viLaiththidum kudal peeRiyum meeRiya serukkodum sathai peeLaiyum eeLaiyum udalUdE: Intestine as a result of birth, and what an arrogance rises piercing through that intestine! What an amount of flesh, mucus and phlegm in that body!

theLiththidum pala sAthiyum vAthiyum: How many mushrooming castes and how many people who argue about those castes!

iraiththidum kulamE sila kAl padar sinaththidum pava nOyenavE: How many people scream about their lineage! Sometimes when distress rises in the form of anger, birth is nothing but a disease,

ithai anaivOrum kanaiththidum kali kAlam ithO ena: and how come everyone loudly attributes this miserable life to the havoc played by the present aeon (kaliyugam)!

eduththidum cudu kAdu pukA ena kavizhththidum sadamO podiyAy vidum udal pENi: People say "Take away this corpse; take it to the cremation ground"; then it gets thrown up side down (from the bier) and is burnt down to ashes; nourishing such a body so caringly,

kadukkanum sila pUdaNam AdaikaL irukkidum kalaiyE pala AsaikaL: what an amount of jewellery, including ear-stud, and how many clothes have I worn to adorn this body! What an extensive study have I made of the texts to learn manthrAs from the Rigg VEdA!

kazhiththidum siva yOkamum njAnamum aruLvAyE: To get rid of all these, kindly bless me with the Siva-yOgA and Knowledge of SivA!

thanaththa nanthana thAnana thAnana
     thimiththi thinthimi theethaka thOthaka
          thakuththu thunthumi:
(Sounding to this meter,)

thArai virANamodu adal pEri: many large drums, thampattais, veerANams and murasus (different kinds of drums) were beaten

samarththam onRiya thAnavar sEnaiyai vaLaiththu vem sinam vEl vidu sEvaka: when the armies of the demons gathered in the battlefield; encircling them all, You wielded Your spear with rage, Oh Mighty One!

samaththu uNarnthidu mA thavar pAl aruL purivOnE: The great sages who know of Your valour are blessed by You!

thinaip punam thanilE mayalAl oru mayil patham thanilE saraN nAn ena: In the millet field, out of love for her, You declared before a matchless peacock-like belle, VaLLi, that You were surrendering at her feet,

thirup puyam tharu mOkana mAninai aNaivOnE: and she offered her pretty shoulders when You embraced that enchanting deer-like VaLLi, Oh Lord!

sivak kozhum sudarE paranAkiya thavaththil vantharuL pAla krupAkara: You are the reddish effulgence that emerged from Lord SivA! You emanate as the Supreme Lord and grant vision to those who perform penance, Oh Dear Child! You are the Compassionate Lord!

thiruk kudanthaiyil vAzh murukA surar perumALE.: You have Your abode in this beautiful town, KumbakONam, Oh MurugA! You are the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 869 seniththidum salam - kumbakONam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]