திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 855 தேனிருந்த இதழார் (திருப்பந்தணை நல்லூர்) Thiruppugazh 855 thEnirundhaidhazhAr (thiruppandhaNai nallUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான ......... பாடல் ......... தேனி ருந்தஇத ழார்ப ளிங்குநகை யார்கு ளிர்ந்தமொழி யார்ச ரங்கள்விழி சீர்சி றந்தமுக வாரி ளம்பிறைய ...... தென்புரூவர் தேன மர்ந்தகுழ லார்க ளங்கமுகி னார்பு யங்கழையி னார்த னங்குவடு சேர்சி வந்தவடி வார்து வண்டஇடை ...... புண்டரீகம் சூனி யங்கொள்செய லார ரம்பைதொடை யார்ச ரண்கமல நேரி ளம்பருவ தோகை சந்தமணி வாரு டன்கலவி ...... யின்பமூடே சோக முண்டுவிளை யாடி னுங்கமல பாத மும்புயமி ராறு மிந்துளபல் தோட லங்கலணி மார்ப மும்பரிவு ...... ளங்கொள்வேனே ஓந மந்தசிவ ரூபி யஞ்சுமுக நீலி கண்டிகலி யாணி விந்துவொளி யோசை தங்குமபி ராமி யம்பிகைப ...... யந்தவேளே ஓல மொன்றவுணர் சேனை மங்கையர்கள் சேறு டன்குருதி யோட எண்டிசையும் ஓது கெந்தருவர் பாட நின்றுநட ...... னங்கொள்வேலா ஏனல் மங்கைசுசி ஞான ரம்பையென தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற மானொ டும்பர்தரு மான ணைந்தழகி ...... லங்குமார்பா ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதி யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில் ஈறில் பந்தணைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார் குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி சீர் சிறந்த முகவார் இளம் பிறையது என் புரூவர் ... தேன் என இனிக்கும் வாயிதழ் ஊறலை உடையவர். பளிங்கு போன்று வெண்ணிறமான பற்களை உடையவர். குளிர்ந்த பேச்சை உடையவர். அம்பு போன்ற கண்ணையும் அழகு சிறந்த முகத்தையும் உடையவர். இளம் பிறை போன்றது என்று சொல்லக் கூடிய நெற்றிப் புருவத்தை உடையவர். தேன் அமர்ந்த குழலார் களம் கமுகினார் புயம் கழையினார் தனம் குவடு சேர் சிவந்த வடிவார் துவண்ட இடை புண்டரீகம் சூனியம் கொள் செயலார் அரம்பை தொடையார் ... வண்டுகள் பொருந்திய கூந்தலை உடையவர். கமுகு போன்ற கழுத்தினை உடையவர். மூங்கில் போன்ற தோளை உடையவர். மார்பகங்கள் மலையை ஒக்க சிவந்த நிறத்தை உடையவர். துவட்சி உற்ற இடையையும், தாமரை போன்ற பெண்குறியையும் கொண்டவர். மயக்கும் மந்திர வித்தையைக் கொண்டவர்கள். வாழைத் தண்டு போன்ற தொடையை உடையவர்கள். சரண் கமல நேர் இளம் பருவ தோகை சந்தம் அணிவாருடன் கலவி இன்பம் ஊடே சோகம் உண்டு விளையாடினும் ... தாமரை போன்ற பாதங்களை உடையவர். இளம் பருவத்தையுடைய மயில் போன்றவர். சந்தனம் முதலியவற்றைப் பூசிக் கொள்ளுபவர்களோடு செய்யும் சேர்க்கை இன்பத்தில் சோர்வு அடைந்து விளையாடின போதும், கமல பாதமும் புயம் ஈராறும் இந்துளம் பல் தோடு அலங்கல் அணி மார்பமும் பரிவு உளம் கொள்வேனே ... உனது தாமரைத் திருவடிகளையும், பன்னிரண்டு தோள்களையும், கடம்பு முதலிய பலவிதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை அணிந்த திருமார்பையும் அன்பு நிறைந்த என் மனத்தில் தியானிப்பேன். ஓ(ம்) நம அந்த சிவ ரூபி அஞ்சு முக நீலி கண்டி கலியாணி விந்து ஒளி ஓசை தங்கும் அபிராமி அம்பிகை பயந்த வேளே ... ஓம் நமசிவாய என்னும் அந்த சிவத்துடன் கலந்த உருவத்தினள், ஐந்து திரு முகங்களைக் கொண்ட நீலி, ரத்தின மாலை அணிந்துள்ள கல்யாணி, சிவ ஞான சக்தி, ஒளி ஓசை இவைகளுக்கு ஆதாரமாயுள்ள அழகுற்ற அம்பிகை என்ற உமாதேவி பெற்ற செவ்வேளே, ஓலம் ஒன்ற அவுணர் சேனை மங்கையர்கள் சேறுடன் குருதி ஓட எண் திசையும் ஓது கெந்தருவர் பாட நின்று நடனம் கொள் வேலா ... பேரொலியுடன் ஆரவாரம் இட்ட அசுரர்களின் கூட்டங்களும் மங்கையர்களும் இறந்து பட, அவர்களின் உடல் சேறுடன் ரத்தமும் புரண்டு ஓட, எட்டுத் திசையிலும் இருந்து புகழும் கந்தருவர்கள் பாட, நடனம் செய்கின்ற வேலாயுதனே, ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை எனது ஆயி சந்த்ர முக பாவை வஞ்சி குற மானொடு உம்பர் தரு மான் அணைந்த அழகு இலங்கும் மார்பா ... தினைப் புனம் காத்த மங்கை, பரிசுத்தமான ஞான மயமான ரம்பை போன்ற அழகி, எனது தாய், சந்திரனை ஒத்த திருமுகம் உடையவள், வஞ்சிக் கொடி போன்ற குறமான் வள்ளியையும், தேவர்கள் வளர்த்த மான் ஆகிய தேவயானையையும் அணைந்து அழகு விளங்கும் திரு மார்பனே, ஏர் கரந்தை அறுகோடு கொன்றை மதி ஆறு அணிந்த சடையார் விளங்கும் எழில் ஈறு இல் பந்தணை ந(ல்)லூர் அமர்ந்து வளர் தம்பிரானே. ... அழகிய திருநீற்றுப் பச்சை, அறுகு, மண்டை ஓடு, கொன்றை மலர், நிலா, கங்கை ஆகியவற்றை அணிந்த சடையை உடைய சிவபெருமான் எழுந்தருளி உள்ளதும், அழகுள்ளதும், அழியாததும் ஆகிய திருப்பந்தணை நல்லூரில்* வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே. |
* இத்தலம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1073 pg 2.1074 pg 2.1075 pg 2.1076 WIKI_urai Song number: 859 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 855 - thEnirundha idhazhAr (thiruppandhaNai nallUr) thEni runthaitha zhArpa Lingunakai yArku Lirnthamozhi yArsa rangaLvizhi seersi Ranthamuka vAri LampiRaiya ...... thenpurUvar thEna marnthakuzha lArka Langamuki nArpu yangazhaiyi nArtha nangkuvadu sErsi vanthavadi vArthu vaNdaidai ...... puNdareekam cUni yangkoLseya lAra rampaithodai yArsa raNkamala nEri Lamparuva thOkai santhamaNi vAru dankalavi ...... yinpamUdE sOka muNduviLai yAdi nungkamala pAtha mumpuyami rARu minthuLapal thOda langalaNi mArpa mumparivu ...... LangkoLvEnE Ona manthasiva rUpi yanjumuka neeli kaNdikali yANi vinthuvoLi yOsai thangumapi rAmi yampikaipa ...... yanthavELE Ola monRavuNar sEnai mangaiyarkaL sERu dankuruthi yOda eNdisaiyum Othu kentharuvar pAda ninRunada ...... nangkoLvElA Enal mangaisusi njAna rampaiyena thAyi chanthramuka pAvai vanjikuRa mAno dumpartharu mAna Nainthazhaki ...... langumArpA Erka ranthaiyaRu kOdu konRaimathi yARa Ninthasadai yArvi Langumezhil eeRil panthaNaina lUra marnthuvaLar ...... thambirAnE. ......... Meaning ......... thEn iruntha ithazhAr paLingu nakaiyAr kuLirntha mozhiyAr sarangaL vizhi seer siRantha mukavAr iLam piRaiyathu en purUvar: The saliva gushing from their lips is sweet like honey. Their teeth are white like marble. Their speech is cool. They have arrow-like eyes and a beautiful face. Their eye-brows are comparable to the young and crescent moon. thEn amarntha kuzhalAr kaLam kamukinAr puyam kazhaiyinAr thanam kuvadu sEr sivantha vadivAr thuvaNda idai puNdareekam cUniyam koL seyalAr arampai thodaiyAr: Around their hair, beetles are buzzing about. Their neck is like the betelnut tree. Their shoulders are like the bamboo. Their reddish bosom is like the mountain. Their waist caves in, and their genitals are like the lotus. They possess an enticing magic spell. Their thighs are like the stem of the plantain tree. saraN kamala nEr iLam paruva thOkai santham aNivArudan kalavi inpam UdE sOkam uNdu viLaiyAdinum: Their feet are like the lotus. They look like the young peacock. Although I indulge in a blissful play of love-making with these women who smear sandalwood paste until I am tired, kamala pAthamum puyam eerARum inthuLam pal thOdu alangal aNi mArpamum parivu uLam koLvEnE: I shall for ever meditate in my love-filled mind upon Your hallowed lotus feet, twelve shoulders and Your broad chest decorated with garlands made of kadappa and other flowers, Oh Lord! O(m) nama antha siva rUpi anju muka neeli kaNdi kaliyANi vinthu oLi Osai thangum apirAmi ampikai payantha vELE: She has the figure that has merged with the Great Lord SivA, represented by the manthra "Om NamasivAya"; She is the bluish Goddess, DurgA, having five hallowed faces; She is the Deity who does good to all (KaliyANi), wearing a string of precious gems; She is the powerful Shakti representing the Knowledge of SivA; She is the causal force for the energies of light and sound; She is our Mother with exquisite beauty; and You are the reddish Lord delivered by that UmA DEvi! Olam onRa avuNar sEnai mangaiyarkaL sERudan kuruthi Oda eN thisaiyum Othu kentharuvar pAda ninRu nadanam koL vElA: As the multitude of armies of demons and their women died screaming uncontrollably and as their bodies went floating on a muddy river of blood, the celestial musicians sang from all the eight directions and You danced on the battlefield, Oh Lord with the spear! Enal mangai susi njAna rampai enathu Ayi chanthra muka pAvai vanji kuRa mAnodu umpar tharu mAn aNaintha azhaku ilangum mArpA: She stood guard to the crop of millet in the field; She is beautiful like Rambai, the celestial maid, and is endowed with pure and true knowledge; She is my mother with a hallowed face like the moon; She is VaLLi, the deer-like damsel of the KuRavAs, with her waist like the rattan reed (vanji); along with that VaLLi, You also hug DEvayAnai, the divine deer-like maid, reared by the celestials, with Your broad chest, Oh Lord! Er karanthai aRukOdu konRai mathi ARu aNintha sadaiyAr viLangum ezhil eeRu il panthaNai na(l)lUr amarnthu vaLar thambirAnE.: He wears the beautiful and fragrant basil plant (karanthai), the cynodon grass (aRuku), the skull, the Indian laburnum (konrai), the crescent moon and the River Gangai on His matted hair; that Lord SivA is seated in this beautiful and immortal place, Thirup panthaNainallUr*, which is also Your abode, Oh Great One! |
* This place is 8 miles northeast of ThiruvidaimaruthUr railway station, near KumbakONam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |