திருப்புகழ் 850 இதசந்தன புழுகு  (திருப்பந்தணை நல்லூர்)
Thiruppugazh 850 idhasandhanapuzhugu  (thiruppandhaNai nallUr)
Thiruppugazh - 850 idhasandhanapuzhugu - thiruppandhaNainallUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதந்தன தனதந்தன தனதந்தன தான
     தனதந்தன தனதந்தன தனதந்தன தான
          தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான

......... பாடல் .........

இதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக வீசி
     யணையுந்தன கிரிகொண்டிணை யழகும்பொறி சோர
          இருளுங்குழல் மழையென்பந வரசங்கொளு மோகக் ...... குயில்போலே

இடையுங்கொடி மதனன்தளை யிடுகுந்தள பார
     இலையுஞ்சுழி தொடைரம்பையு மமுதந்தட மான
          இயலங்கடி தடமும்பொழி மதவிஞ்சைகள் பேசித் ...... தெருமீதே

பதபங்கய மணையும்பரி புரமங்கொலி வீச
     நடைகொண்டிடு மயிலென்பன கலையுஞ்சுழ லாட
          பரிசும்பல மொழியுஞ்சில கிளிகொஞ்சுகை போலப் ...... பரிவாகிப்

பணமுண்டென தவலம்படு நினைவுண்டிடை சோர
     இதுகண்டவர் மயல்கொண்டிட மனமுஞ்செயல் மாற
          பகலுஞ்சில இரவுந்துயில் சிலவஞ்சகர் மாயைத் ...... துயர்தீராய்

திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி
     டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை
          செகணஞ்செக வெனவும்பறை திசையெங்கினு மோதக் ...... கொடுசூரர்

சிரமுங்கர வுடலும்பரி யிரதங்கரி யாளி
     நிணமுங் குடல் தசையுங்கட லெனசெம்புன லோட
          சிலசெம்புள்கள் கழுகுஞ்சிறு நரியுங்கொடி யாடப் ...... பொரும்வேலா

மதவெங்கய முரிகொண்டவர் மழுவுங்கலை பாணி
     யிடமன்பொடு வளருஞ்சிவை புகழ்சுந்தரி யாதி
          வளருந்தழ லொளிர்சம்பவி பரைவிண்டிள தோகைத் ...... தருசேயே

வதனஞ்சசி யமுதம்பொழி முலைநன்குற மாதொ
     டிசையுஞ்சுரர் தருமங்கையொ டிதயங்களி கூர
          வருபந்தணை நகர்வந்துறை விமலன்குரு நாதப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இத சந்தன புழுகும் சில மணமும் த(க்)க வீசி அணையும்
தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர
... இன்பம்
தருவதான சந்தனம், புனுகுசட்டம் இவை போன்ற வாசனைப் பொருள்கள்
தக்கபடி மணம் வீச, தழுவுகின்ற மலை போன்ற இரண்டு மார்பகங்களைக்
கொண்டும், அழகிய மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும்
இந்திரியங்கள் சோர்வு அடையவும்,

இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோகக் குயில்
போலே
... இருண்ட கூந்தல் மழை மேகம் என்னும்படி அமைய,
நவரசங்களையும்* கொண்ட இனிக்கும் பேச்சுக்களால் மோகத்தை
ஊட்டும் குயில் போலப் பேசி,

இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார(ம்)
இலையும் சுழி தொடை (அ)ரம்பையும் அமுதம் தடமான
இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி
... இடுப்பும்
கொடி போல் விளங்க, மன்மதன் இடும் விலங்குகள் என்னும்படியான
கூந்தல் பாரத்துடன், ஆலிலை போன்ற வயிறும், கொப்பூழ்ச் சுழியும்,
வாழைத் தண்டு போன்ற தொடையும், காம அமுதம் பொழியும் தன்மை
கொண்ட அழகிய பெண்குறியும் விளங்க, (இத்தனை அங்கங்களுடன்)
மன்மத வித்தைப் பேச்சுக்களைப் பேசி,

தெருமீதே பத பங்கயம் அணையும் பரி புரம் அங்கு ஒலி வீச
நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட பரிசும்
பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போலப் பரிவாகி
...
தெருவிலே, பாத தாமரைகளைத் தழுவும் சிலம்புகள் அங்கு ஒலி செய்ய
நடக்கின்ற மயில்கள் என்று சொல்லும்படி, ஆடையும் சுழன்று ஆட,
அவர்கள் பழகுகின்ற விதங்கள் (ஆளுக்குத் தகுந்தமாதிரி) பலவாக,
சில பேச்சுக்களுடன் கிளி கொஞ்சுவது போலப் பேசி, அன்பும் பரிவும்
பூண்டவர்கள் போல் இருக்க,

பணம் உண்டு எனது அவலம் படு நினைவு உண்டு இடை
சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட அம் மனமும் செயல்
மாற
... பணம் இருக்கிறதென்று என்னுடைய வேதனைப்படும்
நினைவிலே நான் எண்ணம் பூண்டிருக்க, மத்தியில் பணம் வற்றிப்
போய்த் தளர்ச்சி உற, இந்நிலையைக் கண்டு அவ்விலைமாதரின் மோகம்
கொண்டிருந்த அந்த மனமும் நேசச் செயலும் மாறுதல் கொள்ள,

பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய் ...
(அதனால்) சில பகலும் சில இரவுமே துயில் கொள்ள இணங்கும் சில
வஞ்சக விலைமாதர்கள் மீது (எனக்குள்ள) காம மாயைத் துயரைத்
தீர்த்தருள்க.

திதி திந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி டகுடங்குகு
டிகுடிங்குகு படகம் துடி வீணை செகணஞ்செக எனவும் பறை
திசை எங்கினும் மோத
... திதி திந்திமி தனதந்தன டுடுடுண்டுடு
டகுடங்குகு டிகுடிங்குகு என்று சிறு பறைகளும், உடுக்கையும்,
வீணையும் ஒலிக்க, செகணஞ்செக என்று பெரும்பறைகள் எல்லா
திக்குகளிலும் சப்திக்க,

கொடு சூரர் சிரமும் கர உடலும் பரி இரதம் கரி யாளி
நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட
... கொடிய
சூரர்களின் தலைகளும், கைகளும், உடல்களும், குதிரையும், தேரும்,
யானையும், சிங்கமும், கொழுப்பும், குடலும், தசையும் அறுபட்டதால்
கடல் என்று சொல்லும்படி சிவந்த இரத்தம் ஓட,

சில செம்புள்கள் கழுகும் சிறு நரியும் கொடி ஆடப் பொரும்
வேலா
... பருந்து போன்ற சில சிவந்த பறவைகளும், கழுகுகளும், சிறிய
நரிகளும், காக்கைகளும் (போர்க்களத்தில் வந்து) ஆட சண்டை
செய்யும் வேலனே,

மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம்
அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி வளரும் தழல்
ஒளிர் சம்பவி பரைவிண்டு இள தோகைத் தரு சேயே
... மதம்
கொண்ட கொடிய யானையின் தோலை உரித்தவர், மழுவையும் மானையும்
கையில் ஏந்தியவர் ஆகிய சிவபெருமானின் இடது பக்கத்தில் அன்புடன்
இருந்து விளங்கும் உமை என்று புகழப்படும் அழகி, ஆதி பராசக்தி,
வளர்ந்து ஓங்கும் நெருப்பு போலச் சிவந்து விளங்கும் சாம்பவி,
பரம்பொருள், திருமாலின் இளம் தங்கையாகிய மயில் போன்றவளாகிய
பார்வதி தந்த குழந்தையே,

வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு
இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களி கூர
... சந்திரன்
போன்ற திரு முகமும் அமுதம் பொழிகின்ற மார்பகமும் கொண்ட குறப்
பெண்ணாகிய வள்ளியுடனும், அன்பு பொருந்தும் தேவர்கள் வளர்த்த
தேவயானையுடனும் மனம் மகிழ்ச்சி மிக,

வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாதப்
பெருமாளே.
... திருப்பந்தணை நல்லூரில்** வந்து வீற்றிருப்பவனே,
சிவபெருமானது குரு மூர்த்திப் பெருமாளே.


* நவரசங்கள்:

சிங்காரம், ஹாஸ்யம், கருணை, ரெளத்திரம், வீரம், பயம், குற்சை (அருவருப்பு), அற்புதம், சாந்தம்.


** இத்தலம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் ரயில்
நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1059  pg 2.1060  pg 2.1061  pg 2.1062  pg 2.1063  pg 2.1064 
 WIKI_urai Song number: 854 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 850 - idhasandhana puzhugu (thiruppandhaNai nallUr)

ithachanthana puzhukumchila maNamunthaka veesi
     yaNaiyunthana kirikoNdiNai yazhakumpoRi sOra
          iruLunguzhal mazhaiyenpana varasangoLu mOkak ...... kuyilpOlE

idaiyungodi mathananthaLai yidukunthaLa pAra
     ilaiyumchuzhi thodairampaiyu mamuthanthada mAna
          iyalangadi thadamumpozhi mathavinjaikaL pEsith ...... therumeethE

pathapangaya maNaiyumpari puramangoli veesa
     nadaikoNdidu mayilenpana kalaiyumchuzha lAda
          parisumpala mozhiyumchila kiLikonjukai pOlap ...... parivAkip

paNamuNdena thavalampadu ninaivuNdidai sOra
     ithukaNdavar mayalkoNdida manamumcheyal mARa
          pakalumchila iravunthuyil silavanjakar mAyaith ...... thuyartheerAy

thithithinthimi thanathanthana dududuNdudu pEri
     dakudanguku dikudinguku padakanthudi veeNai
          sekaNamcheka venavumpaRai thisaiyenginu mOthak ...... koducUrar

siramumkara vudalumpari yirathamkari yALi
     niNamum kudal thasaiyumkada lenasempuna lOda
          silasempuLkaL kazhukunjchiRu nariyumkodi yAdap ...... porumvElA

mathavemkaya murikoNdavar mazhuvumkalai pANi
     yidamanpodu vaLarumchivai pukazhsunthari yAthi
          vaLarunthazha loLirsampavi paraiviNdiLa thOkaith ...... tharusEyE

vathanamsasi yamuthampozhi mulainankuRa mAtho
     disaiyumsurar tharumangaiyo dithayamkaLi kUra
          varupanthaNai nakarvanthuRai vimalanguru nAthap ...... perumALE.

......... Meaning .........

itha chanthana puzhukum sila maNamum tha(k)ka veesi aNaiyum thana kiri koNdu iNai azhakum poRi sOra: The mixture of perfumes comprising pleasant sandalwood powder and civet exuding agreeable aroma, with their mountain-like bosom hugging tightly and their beautiful sensory organs, namely, the body, the mouth, the eyes, the nose and the ears becoming weary;

iruLum kuzhal mazhai enpa navarasam koLu mOkak kuyil pOlE: with their dark hair looking like the rain-cloud, these women speak in a sweet voice like that of a provocative cuckoo cooing with nine* kinds of emotional expressions;

idaiyum kodi mathanan thaLai idum kunthaLa pAra(m) ilaiyum suzhi thodai (a)rampaiyum amutham thadamAna iyal am kadi thadamum pozhi matha vinjaikaL pEsi: their waist is like a creeper; their dense hair looks like the shackles fettered by Manmathan (God of Love); their thin belly, with the navel, is shaped like the banyan leaf; their thigh is like the smooth stem of a plantain tree; their beautiful genital appears to be showering the nectar of passion; (with all these characteristics) they talk about the erotic feat of Manmathan;

therumeethE patha pangayam aNaiyum pari puram angu oli veesa nadai koNdidu mayil enpana kalaiyum suzhalAda parisum pala mozhiyum sila kiLi komchukai pOlap parivAki: when they walk on the street their gait is like that of the peacock, with the anklets huggingly adorning their lotus-feet making a jingling sound; their attire flutters in the wind and their approach varies considerably (depending on who they are with); they speak a few words flirtingly like a parrot, feigning love and affection;

paNam uNdu enathu avalam padu ninaivu uNdu idai sOra ithu kaNdu avar mayal koNdida am manamum seyal mARa: I have been wavering with the troubling thought that I may not have enough money; after a while, I became disheartened when I realised that there was indeed insufficient money; upon seeing my condition, those pseudo-passionate whores suddenly changed their mind and ceased their friendly act;

pakalum sila iravum thuyil sila vamchakar mAyai thuyar theerAy: this resulted in these treacherous whores agreeing to sleep with me only during a few days and fewer nights; kindly remove the misery arising from my passionate delusion for them, Oh Lord!

thithi thinthimi thanathanthana dududuNdudu pEri dakudanguku dikudinguku padakam thudi veeNai sekaNamcheka enavum paRai thisai enginum mOtha: To the background beats of "thithi thinthimi thanathanthana dududuNdudu dakudanguku dikudingidu" small drums and hand-drums were beaten; the veena was also played and the large drums reverberated noisily in all directions making the sound "sekaNamcheka";

kodu cUrar siramum kara udalum pari iratham kari yALi niNamum kudal thasaiyum kadal ena sem punal Oda: the severed heads of the evil demons, their arms, bodies, horses, chariots, elephants and lions, accompanied with a lot of flesh, intestines and muscles that were slashed, resulted in a sea of red blood;

sila sempuLkaL kazhukum siRu nariyum kodi Adap porum vElA: a few reddish birds looking like vultures, eagles, small foxes and crows gathered (in the battlefield) and began to dance as You fought with the spear, Oh Lord!

matha vem kayam uri koNdavar mazhuvum kalai pANi idam anpodu vaLarum sivai pukazh sunthari Athi vaLarum thazhal oLir sampavi paraiviNdu iLa thOkaith tharu sEyE: He peeled off the skin of the wild elephant; He holds the axe and the deer in His hands; She is elegantly concorporate with love on the left side of that Lord SivA; She is beautiful, known by the famous name UmA; She is the Primordial ParAshakthi (Absolute Power); she is SAmbhavi, reddish like the flame that leaps up; She is the Supreme Principle; She is the younger sister of Lord VishNu; She is the peacock-like Goddess, PArvathi, and You are Her child, Oh Lord!

vathanam sasi amutham pozhi mulai nal kuRa mAthodu isaiyum surar tharu mangaiyodu ithayam kaLikUra: She has a moon-like hallowed face and breasts that shower the nectar; She is VaLLi, the good girl of the KuRavAs; along with her, DEvayAnai, the damsel reared with love by the celestials; relishing the company of

varu panthaNai nakar vanthu uRai vimalan kurunAthap perumALE.: both consorts, You have come to take Your seat in ThiruppanthaNainallUr**; You are the revered master of Lord SivA, Oh Great One!


* Nine expressions of emotions:

love, humour, compassion, anger, valour, fear, disgust, wonder and tranquility.


** This town is 8 miles northeast of ThiruvidaimaruthUr railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 850 idhasandhana puzhugu - thiruppandhaNai nallUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]