பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1062

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பந்தணைநல்லுர்) திருப்புகழ் உரை 503 பாத தாமரையிற் சேர்ந்துள்ள (பரிபுரம்) சிலம்பு - அங்கு (ஒலிவீச) சப்திக்க நடக்கின்ற மயில்கள் என்னும்படி ஆடையும் சுழன்று ஆட, ஒழுங்கு விதம் பலவாக, சில பேச்சுக்களுடன் கிளி கொஞ்சுவதுபோலப் பேசி அன்பு பூண்டு. (பணம் உண்டென) பணம் இருக்கிறதென்று, பணம் இருக்கிறதென்று (எனது அவலம்படு) என்னுடைய வேதனைப்படும் நினைவிலே நான் (எண்ணம் பூண்டிருக்க), இடை - மத்தியிலே (சோர) (பணம்) வற்றிப்போய்த் தளர்ச்சியுற, இந் நிலையைக் கண்டு அவ் விலைமாதர் (மயல் கொண்டிடு அம் மனமும்) மோகம் கொண்டிருந்த அந்த (தங்கள்) மனமும் நேசச் செயலும் மாறுதல் கொள்ள, அதனால் (பகலும் சில இரவும்) சில பகலும் இரவுமே துயில் கொள்ள: (இணங்கும்) சில வஞ்சக மாதர்கள் மீதுள்ள (காம) மாயைத் துயரைத் தீர்த்தருளுக. திதி திந்திமி தன தந்தன டுடு டுண்டுடு எனப் (பேரி) போர்முரசு ஒலிக்க டகுடங்குகு டிகு டிங்குகு எனப் (படகம்) சிறுபறை, (துடி) உடுக்கை, வீணை இவை ஒலிக்க, செகணஞ் செக எனப் பறை திசைகள் எங்கும் சத்திக்க, கொடி,சூரர்களின் தலையும், கையும், உடலும், குதிரையும், தேரும், யானையும், யாளியும்|கொழுப்பும், குடலும், சதையும் (அறுபட்டதனால்) கடல்போலச் சிவந்த ரத்தம் பெருகி ஒட, சில பருந்து போன்ற சிவந்த பறவைகள், கழுகு, சிறிய நரிகள், (கொடி) காக்கைகள் (உணவு கிடைக்கும் களிப்பினால்) ஆடச் சண்டை செய்த வேலனே! மதம்கொண்ட கொடிய யானையை உரித்தவர், மழுவையும், 4ானையும் (பாணி) கையிற் கொண்டவர்-ஆகிய சிவனது இடது பாகத்தில் அன்புடன் இருந்து விளங்கும் சிவை, புகழப்படும் அழகி, ஆதிதேவதை வளர்ந்தோங்கும் நெருப்புப்போலச் சிவந்து விளங்கும் சாம்பவி, (பரை) பராசக்தி, (விண்டு) திருமாலின் (இளந்தோகை) இளைய மயிலனையாள் - இளையவள் தங்கை தந்த குழந்தையே!