திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 849 கருத் திதப்படு (மருத்துவக்குடி) Thiruppugazh 849 karuththithappadu (maruththuvakkudi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்த தத்தன தானா தானன தனத்த தத்தன தானா தானன தனத்த தத்தன தானா தானன ...... தனதான ......... பாடல் ......... கருத்தி தப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் கவட்டு விற்பன மாயா வாதிகள் ...... பலகாலுங் கரைத்து ரைத்திடு மோகா மோகிகள் அளிக்கு லப்பதி கார்போ லோதிகள் கடைக்க ணிற்சுழ லாயே பாழ்படு ...... வினையேனை உரைத்த புத்திகள் கேளா நீசனை யவத்த மெத்திய ஆசா பாசனை யுளத்தில் மெய்ப்பொரு ளோரா மூடனை ...... யருளாகி உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை யளிக்கு நற்பொரு ளாயே மாதவ வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளிணை ...... யருள்வாயே செருக்கி வெட்டிய தீயோ ராமெனு மதத்த துட்டர்கள் மாசூ ராதிய சினத்தர் பட்டிட வேவே லேவிய ...... முருகோனே சிவத்தை யுற்றிடு தூயா தூயவர் கதித்த முத்தமிழ் மாலா யோதிய செழிப்பை நத்திய சீலா வீறிய ...... மயில்வீரா வரைத்த வர்க்கரர் சூலா பாணிய ரதிக்கு ணத்தரர் தீரா தீரர்த மனத்தி யற்படு ஞானா தேசிக ...... வடிவேலா வருக்கை யிற்கனி சாறாய் மேலிடு தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு மருத்து வக்குடி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கருத்து இதப் படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் ... மனத்துக்கு இனிமை வாய்க்கும்படி பல விதமான காம லீலைகளை விரும்பிய மகா வீணிகள். கவட்டு விற்ப(ன்)ன மாயா வாதிகள் பல காலும் கரைத்து உரைத்திடு மோகா மோகிகள் ... வஞ்சக அறிவுடையவராய், மயக்கம் ஊட்டத் தக்க பேச்சினை உடையவர்கள். பல முறையும் மனம் கரையும்படி பேச வல்ல மோகம் மிகக் கொண்டவர்கள். அளிக் குலப் பதி கார் போல் ஓதிகள் கடைக் க(ண்)ணின் சுழலாயே பாழ் படு வினையேனை ... வண்டினக் கூட்டங்கள் வந்து படிகின்ற கரிய மேகம் போன்ற கூந்தலை உடையவர்கள் ஆகிய விலைமாதர்களின் கடைக் கண் மயக்கில் பட்டுச் சுழலுதலாகி, பாழாகப் போகின்ற வினைக்கு ஈடான என்னை, உரைத்த புத்திகள் கேளா நீசனை அவத்த(ம்) மெத்திய ஆசா பாசனை உ(ள்)ளத்தில் மெய்ப் பொருள் ஓரா மூடனை அருளாகி ... பெரியோர்கள் சொன்ன புத்திமதிகளைக் கேளாத இழிந்தோனான என்னை, பயனற்றவையே மிகுந்த ஆசைகளில் பற்று உடையவனாகிய என்னை, மனதில் உண்மைப் பொருள் இன்னது என ஆராயாத மூடனை, உன் திருவருளைப் பெற்றவனாக்கி, உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை அளிக்கு நல் பொருள் ஆயே மாதவ உணர்ச்சி பெற்றிடவே நீ தாளிணை அருள்வாயே ... உயர்ச்சி பெற்ற, மேலான வேதத்தில் குறிக்கப் பெற்ற, நல்ல பிள்ளையாக்கி, சிறந்த தவ ஞானத்தைப் பெறுமாறு உனது திருவடிகளைத் தந்தருள்வாயே. செருக்கி வெட்டிய தீயோர் ஆம் எனும் மதத்த துட்டர்கள் மா சூர் ஆதிய சினத்தர் பட்டிடவே வேல் ஏவிய முருகோனே ... கர்வம் கொண்டு, பகைவர்களை வெட்டி அழித்த, பொல்லாதவர்கள் என்று சொல்லப்பட்ட, மதம் கொண்ட துஷ்டர்களாகிய பெரிய சூரன் முதலான கோபம் கொண்ட அசுரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, சிவத்தை உற்றிடு தூயா தூயவர் கதித்த முத்தமிழ் மாலாய் ஓதிய செழிப்பை நத்திய சீலா வீறிய மயில் வீரா ... சிவமங்களம் பொருந்திய பரிசுத்த மூர்த்தியே, பெரியோர்கள் அருளிய முத்தமிழ்ப் பாக்களை அன்புடன் ஓதுகின்ற வளத்தை விரும்புகின்ற சீலனே, மேம்பாடுடன் விளங்கும் மயில் வீரனே, வரைத் தவர்க்கு அரர் சூலா பாணியர் அதிக் குணத்து அரர் தீரா தீரர் தம் மனத்து இயல் படு ஞானா தேசிக வடிவேலா ... கயிலை மலையில் வீற்றிருக்கும் தவத்தினருக்கும் இறைவனாகிய பெரியோர், சூலாயுதத்தைக் கையில் கொண்டவர், மேம்பட்ட குணத்தை உடைய தலைவர், மிகக் தைரியம் உள்ளவர் ஆகிய சிவபெருமானுடைய மனத்தில் பொருந்தி விளங்கும் ஞான தேசிக மூர்த்தியே, வடிவேலனே, வருக்கையின் கனி சாறாய் மேலிடு தழைத்த செய்த்தலை ஊடே பாய் தரு மருத்துவக் குடி வாழ்வே தேவர்கள் பெருமாளே. ... பலாப் பழங்களின் சாறாகி மேலிட்டுத் தளைத்த வயல்களின் நடுவில் பாய்கின்ற மருத்துவக் குடியில்* வாழ்கின்ற செல்வமே, அமரர்களின் பெருமாளே. |
* மருத்துவக்குடி ஆடுதுறைக்கு அருகில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1057 pg 2.1058 pg 2.1059 pg 2.1060 WIKI_urai Song number: 853 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 849 - karuth thithappadu (maruththuvakkudi) karuththi thappadu kAmA leelaikaL vithaththai naththiya veeNA veeNikaL kavattu viRpana mAyA vAthikaL ...... palakAlung karaiththu raiththidu mOkA mOkikaL aLikku lappathi kArpO lOthikaL kadaikka NiRchuzha lAyE pAzhpadu ...... vinaiyEnai uraiththa puththikaL kELA neesanai yavaththa meththiya AsA pAsanai yuLaththil meypporu LOrA mUdanai ...... yaruLAki uyarcchi petRidu mElA mUthurai yaLikku naRporu LAyE mAthava vuNarcchi petRida vEnee thALiNai ...... yaruLvAyE serukki vettiya theeyO rAmenu mathaththa thuttarkaL mAcU rAthiya sinaththar pattida vEvE lEviya ...... murukOnE sivaththai yutRidu thUyA thUyavar kathiththa muththamizh mAlA yOthiya sezhippai naththiya seelA veeRiya ...... mayilveerA varaiththa varkkarar cUlA pANiya rathikku Naththarar theerA theerartha manaththi yaRpadu njAnA thEsika ...... vadivElA varukkai yiRkani chARAy mElidu thazhaiththa seyththalai yUdE pAytharu maruththu vakkudi vAzhvE thEvarkaL ...... perumALE. ......... Meaning ......... karuththu ithap padu kAmA leelaikaL vithaththai naththiya veeNA veeNikaL: They are utterly vain women who solicit erotic acts that are pleasing to the mind; kavattu viRpa(n)na mAyA vAthikaL pala kAlum karaiththu uraiththidu mOkA mOkikaL: possessing a devious intellect, they resort to sweet speech that causes dizziness; these passionate whores are capable of repeatedly speaking until they melt the listener's heart; aLik kulap pathi kAr pOl OthikaL kadaik ka(N)Nin suzhalAyE pAzh padu vinaiyEnai: their hair is so dark like the black cloud that beetles swarm hovering over it; reeling from the captivating look of these whores through the corner of their eyes, I am stunned, falling a victim to my own past ill-fated deeds; uraiththa puththikaL kELA neesanai avaththa(m) meththiya AsA pAsanai u(L)Laththil meyp poruL OrA mUdanai aruLAki: I am such a debased fellow who never listened to the advice of the elders; I am only interested in useless and lustful desires in which I indulge zealously; I am a stupid person who does not research in his mind what real truth is; kindly bless me with Your grace; uyarcchi petRidu mElA mUthurai aLikku nal poruL AyE mAthava uNarcchi petRidavE nee thALiNai aruLvAyE: kindly turn me into an exalted and well-behaved person, like one who is referred to in the revered scriptures, by granting me Your hallowed feet so that I could obtain the great knowledge attainable only after a deep penance! serukki vettiya theeyOr Am enum mathaththa thuttarkaL mA cUr Athiya sinaththar pattidavE vEl Eviya murukOnE: Those arrogant and evil demons, notorious for their wickedness, maimed their enemies and ran amok savagely, headed by their great leader SUran; he and his angry army of demons were destroyed when You wielded the spear, Oh Lord MurugA! sivaththai utRidu thUyA thUyavar kathiththa muththamizh mAlAy Othiya sezhippai naththiya seelA veeRiya mayil veerA: You are the unblemished embodiment of the pure principle of SivA! You are the most virtuous One relishing the richness of the songs composed graciously by wise people in the three branches of Tamil, Oh valorous Lord who mounts the famous peacock! varaith thavarkku arar cUlA pANiyar athik kuNaththu arar theerA theerar tham manaththu iyal padu njAnA thEsika vadivElA: He is the wisest of all the sages who are doing penance in the Mount KailAsh; and is also their God; He holds the trident in His hand; He is the most virtuous leader of the highest calibre; He has immense valour; in the mind of that Lord SivA, You prevail as the Great Master of Pure Knowledge, Oh Lord with the sharp spear! varukkaiyin kani chARAy mElidu thazhaiththa seyththalai UdE pAy tharu maruththuvak kudi vAzhvE thEvarkaL perumALE.: In the fertile fields of this place Maruththuvakkudi*, the juice of jack fruits gushes amidst the crops, and You are seated here as its Treasure; You are the Lord of the celestials, Oh Great One! |
* Maruththuvakkudi is near the town, AaduthuRai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |