பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1058

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவக்குடி) திருப்புகழ் உரை (853) 499 விண்ணிலுள்ள சூரியனது ஒளி கூடியது போன்ற ஒளிவீசச், சிவந்த (ரத்னபடம்) ரத்னப்போர்வை போர்த்தது போன்ற (ஆகம்) உடலினைக் கொண்ட மயில் (அல்லது ரத்ன படாகம் - (படகம்) - ரத்ன திரைச்சீலை கொண்டது போன்ற மயில்) வாகனத்தின்மீது அமர்ந்து மிகச் சிறந்த திரு ஆவடுதுறை என்னும் நல்ல பதியில் விளக்கமுறும் பெருமாளே! (சலிக்க விடலாமோ) மருததுவககுடி 853. கருத்துக்கு இனிமை வாய்க்கும்படிக் காமலீலைகளில் (பல) விதங்களை விரும்பியுள்ள மகா விணிகள் (கவட்டு விற்பன) வஞ்சக அறிவுடையவர் (அல்லது வஞ்சகப் பிரசங்கத்தால்) (மாயாவாதிகள்) மயக்கம் ஊட்டத்தக்க பேச்சினை உடையவர், பல முறையும். மனம் கரையும்படிப் பேசவல்ல (மோகா மோகிகள்) காமமயக்கம் மிகக் கொண்டவர்கள், (அளிக்குலம்) வண்டின் கூட்டங்கள் (பதி) வந்து பதிகின்ற படிகின்ற, கரியமேகம் போன்ற கூந்தலை உடையவர்கள் - ஆகிய பொது மாதர்களின் கடைக்கண்(மயக்கிற்பட்டு) சு էՔ லுதலாகி ப் பாழாகப் போகின்ற வினைக்கு ஈடான என்னை. (பெரியோர்கள்) சொன்ன நற்புத்திகளைக் கேளாத (நீசனை) இழிந்தோனை, (அவத்தம்) பயனற்றவையே மிகுந்த ஆசைகளிலே (பாசம்) பற்று உடையவனை, உள்ளத்தில் உண்மைப்பொருள் இன்னதென (ஒராத) ஆராய்ந்தறியாத மூடனை - உனது திருவருளைப் பெற்றவனாகி. உயர்வு பெற்ற மேலான (மூதுரை) வேதத்திற் குறிக்கப்பெற்ற நல்ல பிள்ளையாகி, சிறந்த தவஞானத்தைப் பெறுமாறு நீ உனது திருவடியினைத் தந்தருளுக; கர்வம் கொண்டு பகைவர்களை வெட்டி யழித்த பொல்லார்கள் எனப்பட்ட மதங்கொண்ட துஷடர்களாம் பெரிய சூரனாதிய கோபங்கொண்ட அசுரர்கள் அழியும்படியே வேல் ஆயுதத்தைச் செலுத்தின முருகனே