திருப்புகழ் 847 எருவாய் கருவாய்  (திருவீழிமிழலை)
Thiruppugazh 847 eruvAikaruvAi  (thiruveezhimizhalai)
Thiruppugazh - 847 eruvAikaruvAi - thiruveezhimizhalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

......... பாடல் .........

எருவாய் கருவாய் தனிலே யுருவா
     யிதுவே பயிராய் ...... விளைவாகி

இவர்போ யவரா யவர்போ யிவரா
     யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல

ஒருதா யிருதாய் பலகோ டியதா
     யுடனே யவமா ...... யழியாதே

ஒருகால் முருகா பரமா குமரா
     உயிர்கா வெனவோ ...... தருள்தாராய்

முருகா வெனவோர் தரமோ தடியார்
     முடிமே லிணைதா ...... ளருள்வோனே

முநிவோ ரமரோர் முறையோ வெனவே
     முதுசூ ருரமேல் ...... விடும்வேலா

திருமால் பிரமா வறியா தவர்சீர்
     சிறுவா திருமால் ...... மருகோனே

செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
     திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எருவாய் கருவாய் ... உற்பத்திக்கு வேண்டிய எருவாய், கர்ப்பக்
கருவாய்,

தனிலே யுருவாய் ... அதனின்று உருவமாகி,

இதுவே பயிராய் ... இவ்வுருவமே பயிர் வளர்வதுபோல்

விளைவாகி ... விளைபொருளாகி

இவர்போ யவராய் ... இவர் இவர் என்று இன்று இருப்பவர்,
இறந்தபின்பு, அவர் அவர் என்று சொல்லும்படியாகி,

அவர்போ யிவராய் ... அவர் அவர் என்று பேசப்பட்டவர்,
பிறந்தபின்பு இவர் இவர் என்று சொல்லும்படியாகி,

இதுவே தொடர்பாய் ... இந்தச் சங்கிலியே ஒரு தொடர்ச்சியாக,

வெறிபோல ... வெறி பிடித்தது போல,

ஒருதா யிருதாய் பலகோ டியதாய் ... ஒரு தாயார், இரண்டு
தாயார், பல கோடி தாய்மார்களை

உடனே அவமா யழியாதே ... அடைந்து வீணாக யான்
அழிவுறாமல்,

ஒருகால் முருகா பரமா குமரா ... ஒருமுறையாவது முருகனே,
பரமனே, குமரனே, என்றும்

உயிர்கா வெனவோத அருள்தாராய் ... என்னுயிரைக் காத்தருள்
என்றும் கூவித் துதிக்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக.

முருகா வென ஓர் தரம் ஓதடியார் ... முருகனே என ஒரே முறை
ஓதும் அடியார்க்கு

முடிமேல் இணைதாள் அருள்வோனே ... நீ அவர்தம் தலைமேல்
இருதாள்களையும் வைத்து அருள்பவனாயிற்றே.

முநிவோர் அமரோர் முறையோ வெனவே ... முனிவர்களும்,
தேவர்களும் முறையோ முறையோ என உன்முன் ஓலமிட,

முதுசூ ருரமேல் விடும்வேலா ... பழைய சூரனது மார்பில்
செலுத்திய வேலனே,

திருமால் பிரமா அறியா தவர் ... திருமாலும் பிரமனும், (அடியும்
முடியும்) அறியாதவராகிய சிவபெருமானின்

சீர்ச் சிறுவா திருமால் மருகோனே ... செல்வச் சிறுவனே,
திருமாலின் மருமகனே,

செழுமா மதில்சேர் ... செழிப்புள்ள அழகிய மதில்கள் சேர்ந்த,

அழகார் பொழில்சூழ் ... அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த,

திருவீ ழியில்வாழ் பெருமாளே. ... திருவீழிமிழலையில்* வாழும்
பெருமாளே.


* திருவீழிமிழலை தஞ்சை மாவட்டம் குற்றாலம் ஊருக்கு 6 மைல் தெற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1051  pg 2.1052  pg 2.1053  pg 2.1054 
 WIKI_urai Song number: 851 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
The Kaumaram Team
கௌமாரம் குழுவினர்

The Kaumaram Team
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem) பாடல் ரா - 1    song R1 


 பாடல் ரா - 2    song R2 

Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 847 - eruvAi karuvAi (thiruveezhimizhalai)

eruvAy karuvAy thanilE uruvAy
     idhuvE payirAy ...... viLaivAgi

ivarpOy avarAy avarpOy ivarAy
     idhuvE thodarbAy ...... veRipOla

oruthAy iruthAy pala kOdiyathAy
     udanE avamAy ...... azhiyAdhE

orukAl murugA paramA kumarA
     uyir kAvenavOdh ...... aruL thArAy

murugAvena Ortharam OdhadiyAr
     mudimEl iNaithAL ...... aruLvOnE

munivOr amarOr muRaiyO enavE
     mudhusUrura mEl ...... vidum vElA

thirumAl biramA aRiyAdhavar seer
     siRuvA thirumAl ...... marugOnE

sezhu mA madhil sEr azhagAr pozhil sUzh
     thiru veezhiyil vAzh ...... perumALE.

......... Meaning .........

eruvAy karuvAy: Like a speck of manure and as a foetus in the womb,

thanilE uruvAy: a human form was taken, and

idhuvE payirAy viLaivAgi: that developed into a full-grown body.

ivarpOy avarAy: Those who were present yesterday are gone tomorrow;

avarpOy ivarAy: and those who died yesterday are born again today.

idhuvE thodarbAy veRipOla: This cycle goes on and on like mad.

oruthAy iruthAy pala kOdiyathAy: Searching for one mother, two mothers and a million mothers (in innumerable births),

udanE avamAy azhiyAdhE: and then decaying as a total waste - this I do not want.

orukAl murugA paramA kumarA uyir kAvena Odha: At least once, I should be able to implore "MurugA! The Supreme One! Kumara! Save me" -

aruL thArAy: You only can grant me that attitude.

murugAvena Ortharam OdhadiyAr: If Your devotees say MurugA once,

mudimEl iNaithAL aruLvOnE: You grant the grace of placing Your two feet on their head.

munivOr amarOr muRaiyO enavE: When the sages and the DEvAs screamed at Your feet saying "Is this (SUran's tyranny) fair?",

mudhusUrura mEl vidum vElA: You threw Your Spear to pierce the heart of SUran.

thirumAl biramA aRiyAdhavar: Vishnu and BrahmA could not fathom the feet nor find the head of SivA;

seersiRuvA thirumAl marugOnE: You are that SivA's son and Vishnu's nephew.

sezhu mA madhil sEr: Surrounded by strong fortresses and

azhagAr pozhil sUzh: encircled by beautiful groves is the town,

thiru veezhiyil vAzh perumALE.: Thiruveezhimizhalai* which is Your abode, Oh Great One!


* Thiruveezhimizhalai is 6 miles south of KutRAlam, in Thanjavur District.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 847 eruvAi karuvAi - thiruveezhimizhalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]