திருப்புகழ் 846 மலைக் கனத்தென  (திருத்துருத்தி)
Thiruppugazh 846 malaikganaththena  (thiruththuruththi)
Thiruppugazh - 846 malaikganaththena - thiruththuruththiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத் தனத்தன தானன தானன
     தனத் தனத்தன தானன தானன
          தனத் தனத்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

மலைக் கனத்தென மார்பினி லேயிரு
     முலைக் கனத்துற வேயிடை நூலென
          வளைத் துகுப்பமை யார்குழல் தோளொடும் ...... அலைமோத

மயிற் குலத்தவ ராமென நீள்கலை
     நெகிழ்த் துவித்திரு வார்விழி வேல்கொடு
          மயக் கிநத்தினர் மேல்மறு பாடும ...... விழியேவி

விலைக் கெனத்தன மாயிர மாயிர
     முலைக் களப்பினு மாசைபொ தாதென
          வெறுப் பர்குத்திர காரியர் வேசையர் ...... மயல்மேலாய்

வெடுக் கெடுத்தும காபிணி மேலிட
     முடக் கிவெட்கும தாமத வீணனை
          மினற் பொலிப்பத மோடுற வேயருள் ...... புரிவாயே

அலைக் கடுத்தசு ரார்பதி கோவென
     விடப் பணச்சிர மாயிர சேடனும்
          அதிர்த் திடக்கதிர் வேல்விடு சேவக ...... மயில்வீரா

அடைக் கலப்பொரு ளாமென நாயெனை
     அழைத் துமுத்திய தாமநு பூதியெ
          னருட் டிருப்புக ழோதுக வேல்மயி ...... லருள்வோனே

சிலைக் கைமுப்புர நீறெழ வேதிரு
     வுளத் திலற்பமெ னாநினை தேசிகர்
          சிறக் கமுத்தமி ழாலொரு பாவக ...... மருள்பாலா

திருக் கடப்பலர் சூடிய வார்குழல்
     குறத் திகற்புட னேவிளை யாடியொர்
          திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மலைக் கனத்து என மார்பினிலே இரு முலைக் கனத்து
உறவே இடை நூல் என வளைத்து உகுப்ப
... மலைப்பாரம் போல
நெஞ்சில் இரண்டு மார்பகங்களும் சுமையைத் தருவதால் இடுப்பு நூல்
போல் வளைவு பெற,

மை ஆர் குழல் தோளொடும் அலை மோத மயில் குலத்தவர்
ஆம் என நீள் கலை நெகிழ்த்துவித்து
... கரிய நிறம் உள்ள கூந்தல்
தோள்கள் மேல் அலை வீசுவது போல் புரள, மயில்களின் கூட்டத்தவர்கள்
போல் நீண்ட ஆடைகளை வேண்டுமென்றே தளர்த்தி வைத்து,

இரு வார் விழி வேல் கொடு மயக்கி நத்தினர் மேல் மறு பாடும்
அவ் விழி ஏவி விலைக்கு எனத் தனம் ஆயிரம் ஆயிரம்
முலைக்கு அளப்பினும் ஆசை பொதாது என வெறுப்பர்
...
இரண்டு நீண்ட கண்ணாகிய வேல் கொண்டு மயக்குவித்து தம்மை
விரும்பி வந்தவர் மேல் உள்ள குற்றங்களைக் கூறுவது போன்று அந்தக்
விழிகளைச் செலுத்தி, கொடுக்க வேண்டிய பொருளுக்காக பொன் பல
ஆயிரங்கள் அந்த மார்பகங்களுக்காக அளந்து கொடுத்தாலும் பேராசை
காரணமாக போதாது என்று வெறுப்பைக் காட்டுபவர்களும்,

குத்திர காரியர் வேசையர் மயல் மேலாய் வெடுக்கு எடுத்து
மகா பிணி மேலிட முடக்கி வெட்கும் அ(த்)தாமத வீணனை
மி(ன்)னல் பொல் இப் பதமோடு உறவே அருள் புரிவாயே
...
வஞ்சகச் செயலினரும் ஆகிய விலைமாதர்கள் மீது காம மயக்கம்
மேலோங்கிப் பின் திடீரென்று கொடிய நோய்கள் பீடிக்க ஒடுங்கி
வெட்கப்படுகின்ற, பெருத்த மதம் பிடித்த வீணனாகிய நான் மின்னல்
போன்று ஒளி வீசுகின்ற உனது திருவடிகளில் பொருந்திச் சேர அருள்
புரிவாயாக.

அலைக்கு அடுத்த அசுரார் பதி கோ என விடப் பணச் சிரம்
ஆயிரம் சேடனும் அதிர்த்திடக் கதிர் வேல் விடு சேவக மயில்
வீரா
... கடலில் போய்ப் புகுந்த அசுரர் தலைவனாகிய சூரன் கோ என்று
அஞ்சி அலற, விஷம் கொண்ட படம் உடைய தலைகள் ஆயிரங்கள்
உடைய ஆதிசேஷனும் அதிர்ச்சி அடைய, ஒளிவீசும் வேலைச்
செலுத்திய வலிமையாளனே, மயில் வீரனே,

அடைக்கலப் பொருள் ஆம் என நாயெனை அழைத்து முத்தி
அது ஆம் அநுபூதியெ அருள் திருப்புகழ் ஓதுக வேல் மயில்
அருள்வோனே
... அடைக்கலம் வைக்கப்பட்ட பொருளை ரட்சிப்பது
போல அடியேனை பொருட்படுத்தி அழைத்து, முக்தியைத் தரவல்ல
திருவருள் பிரசாதமாகிய திருப்புகழை நீ ஓதுவாயாக என்று திருவாய்
மலர்ந்து வேலையும் மயிலையும் பாதுகாப்பாக (என் உடலில்
இலச்சினையாகப் பொறித்து) அருளியவனே,

சிலைக் கை முப்புரம் நீறு எழவே திரு உ(ள்)ளத்தில் அற்பம்
எனா நினை தேசிகர் சிறக்க முத்தமிழால் ஒரு பாவகம் அருள்
பாலா
... மேரு மலையாகிய வில்லைக் கையில் பிடித்தபடி இருக்க
முப்புரங்களை தீயினால் பொடியாகும்படி அழிய திருவுள்ளத்தில்
சிறிதளவே நினைத்த தேசிகராகிய சிவபெருமான் பெருமை அடைய
முத்தமிழைக் கொண்டு, ஒப்பற்ற கருத்துக்கு உரியதான (தேவாரப்)
பாக்களை (திருஞான சம்பந்தராக அவதரித்து) அருளிய குழந்தையே,

திரு கடப்பு அலர் சூடிய வார் குழல் குறத்தி கற்புடனே
விளையாடி ஒர் திருத்துருத்தியில் வாழ் முருகா சுரர்
பெருமாளே.
... அழகிய கடப்ப மலர் சூடிய நீண்ட கூந்தலை உடைய
குறத்தியான வள்ளியின் கற்புக் குணங்களில் திளைத்து விளையாடி,
ஒப்பற்ற திருத்துருத்தியில்* வாழும் முருகப் பெருமானே, தேவர்களின்
பெருமாளே.


* திருத்துருத்திக்கு குற்றாலம் என்று பெயர். கும்பகோணத்துக்கு வடக்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1047  pg 2.1048  pg 2.1049  pg 2.1050  pg 2.1051  pg 2.1052 
 WIKI_urai Song number: 850 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 846 - malaik ganaththena (thiruththuruththi)

malaik kanaththena mArpini lEyiru
     mulaik kanaththuRa vEyidai nUlena
          vaLaith thukuppamai yArkuzhal thOLodum ...... alaimOtha

mayiR kulaththava rAmena neeLkalai
     nekizhth thuviththiru vArvizhi vElkodu
          mayak kinaththinar mElmaRu pAduma ...... vizhiyEvi

vilaik kenaththana mAyira mAyira
     mulaik kaLappinu mAsaipo thAthena
          veRup parkuththira kAriyar vEsaiyar ...... mayalmElAy

veduk keduththuma kApiNi mElida
     mudak kivetkuma thAmatha veeNanai
          minaR polippatha mOduRa vEyaruL ...... purivAyE

alaik kaduththasu rArpathi kOvena
     vidap paNacchira mAyira sEdanum
          athirth thidakkathir vElvidu sEvaka ...... mayilveerA

adaik kalapporu LAmena nAyenai
     azhaith thumuththiya thAmanu pUthiye
          narut tiruppuka zhOthuka vElmayi ...... laruLvOnE

silaik kaimuppura neeRezha vEthiru
     vuLath thilaRpame nAninai thEsikar
          siRakka muththami zhAloru pAvaka ...... maruLbAlA

thiruk kadappalar cUdiya vArkuzhal
     kuRath thikaRpuda nEviLai yAdiyor
          thiruth thuruththiyil vAzhmuru kAsurar ...... perumALE.

......... Meaning .........

malaik kanaththu ena mArpinilE iru mulaik kanaththu uRavE idai nUl ena vaLaiththu ukuppa: Their two breasts weigh heavily like a mountain pressing down on the thread-like waist causing it to cave in.

mai Ar kuzhal thOLodum alai mOtha mayil kulaththavar Am ena neeL kalai nekizhththuviththu: The black hair falls on the shoulders and heaves like waves. These women roam about like a bunch of peacocks loosening their long attire deliberately.

iru vAr vizhi vEl kodu mayakki naththinar mEl maRu pAdum av vizhi Evi vilaikku enath thanam Ayiram Ayiram mulaikku aLappinum Asai pothAthu ena veRuppar: With their two spear-like eyes they tantalise the men and wield a sharp look as though they are about to list the defects of their suitors. Even though they are paid for their bosom in gold by thousands of measures, they display indifference due to extreme greed complaining that the gold is not enough.

kuththira kAriyar vEsaiyar mayal mElAy vedukku eduththu makA piNi mElida mudakki vetkum a(th)thAmatha veeNanai mi(n)nal pol ip pathamOdu uRavE aruL purivAyE: These whores are treacherous. Having been obsessed with delusory passion for them, and later, all of a sudden, being afflicted with terrible diseases, I have become debilitated with shame. Although a wild frenzy has possessed this total waste, namely myself, kindly bless me so that I could attain and remain firmly attached to Your hallowed feet that shines like the bright lightning, Oh Lord!

alaikku aduththa asurAr pathi kO ena vidap paNac chiram Ayiram sEdanum athirththidak kathir vEl vidu sEvaka mayil veerA: The demon SUran, who hid himself in the wavy sea, screamed wildly out of fear and the serpent AdhisEshan, with a thousand poisonous hoods, was in a state of shock as You wielded the sparkling spear, Oh Mighty One!

adaikkalap poruL Am ena nAyenai azhaiththu muththi athu Am anupUthiye aruL thiruppukazh Othuka vEl mayil aruLvOnE: Like one securely protects the thing given for safe custody, You took care of me. Treating me as a person of significance, You invited me and commanded with Your hallowed mouth saying "Go ahead and sing the Glory of the Lord (Thiruppugazh) which is the only offering that could liberate you". You further granted me the seal of the spear and the peacock (etched on my body) to remain a protective shield for ever, Oh Lord!

silaik kai muppuram neeRu ezhavE thiru u(L)Laththil aRpam enA ninai thEsikar siRakka muththamizhAl oru pAvakam aruL pAlA: While holding the Mount MEru as a bow in His hand, He contemplated only slightly in His mind and burnt down the Thiripuram; that Master and Lord SivA was elated when You composed the hymns of ThEvAram in the three branches of Tamil with underlying principles of matchless value (coming into this world as ThirugnAna Sambandhar), Oh Child!

thiru kadappu alar cUdiya vAr kuzhal kuRaththi kaRpudanE viLaiyAdi or thiruththuruththiyil vAzh murukA surar perumALE.: She wears the beautiful kadappa flowers on her pretty and long hair; You playfully indulged in all the virtuous qualities of that VaLLi, the damsel of the KuRavAs! You reside in the matchless town of Thiuththuruththi*, Oh Lord MurugA! You are the Lord of the celestials, Oh Great One!


* Thiruththuruththi is now known as KutRAlam, located north of KumbakONam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 846 malaik ganaththena - thiruththuruththi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]