பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1050

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்துருத்தி திருப்புகழ் உரை 491 கொடுக்கவேண்டிய (விலை) பொருளுக்காகத் (தனம்) பொன் ஆயிரமாயிரமாக அவர்தம் கொங்கையின் பொருட்டு அளந்து கொடுத்தாலும் அவர்கட்குள்ள ஆசையால் அவையும் போதாதென்றே வெறுப்பைக் காட்டுபவரும். வஞ்சனைச் செயலினரும் ஆன வேசையர் (விலைமாதர் களின்) (காம) மயக்கமே மேலோங்கிப் (பின்னர்). (வெடுக்கெடுத்து) திடீரென்று மிகக் கொடியதொரு பெருநோய் பீடிக்க ஒடுங்கி, வெட்கப்படுகின்ற, பெருத்த மதம் பிடித்த வீணனாகிய் நான் மின்னல்போல் ஒளி வீசுகின்ற உன்னுடைய திருவடியில் பொருந்திச் சேரவே அருள் புரிவாயாக. கடலைப்போய் அடுத்த (கடலிலே புக்குநின்ற) (அசுரார்பதி) அசுரர் தலைவன் - சூரன் கோ என்று அஞ்சி அலற, விஷமுள்ள படங் கொண்ட தலைகள் ஆயிரங்கொண்ட ஆதிசேடனும் அதிர்ச்சி உற-கலங்க, ஒளிவேலைச் செலுத்தின பராக்ரம சாலியே! மயில் வீரனே! அடைக்கலம் வைக்கப்பட்ட பொருளைப் (பாதுகாப்பது போல) அடியேனைப் (பொருட்படுத்தி) அழைத்து முத்தியைத் தரவல்ல திருவருட் பிரசாத ஞானத் திருப்புகழை நீ ஒதுவாயாக’ எனத் திருவாய் மலர்ந்து வேல்பொறி மயிற்பொறி (வேல் அடையாளம், மயில் அடையாளம்) ஆகிய ரவுைகளை அருளினவனே! முருகவேளின் அடிமைப் பொருள் இவன் என்று இயமன் தெரிந்துகொண்டு தன்னை அணுகாதிருப்பதற்கு வேல் பொறி மயில்பொறி கேட்கின்றார் அருணகிரியார். இவ்வாறு இடபப்பொறி, சூலப்பொறி வேண்டி அப்பர் பெருமான் சிவபிரானிடம் விண்ணப்பித்துள்ளார். 'பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் என்னாவி காப்பதற் கிச்சை யுண்டேல் இருங்கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி, மேவு கொண்டல் துன்னார் கடந்தையுள் துங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே" இடபம் பொறித்தென்னை ஏன்று கொள்ளாய் இருஞ்சோலை திங்கள் தடவும் கடந்தையுள் துங்கானை மாடத்தெந் தத்துவனே." அப்பர் 4.109, 1, 10. பாடல் 413-பக்கம் 544.கிழ்க்குறிப்பு.