திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 813 வங்கார மார்பிலணி (திருச்செங்காட்டங்குடி) Thiruppugazh 813 vangkAramArbilaNi (thiruchchengkattangkudi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தான தானதன தானதன தானதன தந்தான தானதன தானதன தானதன தந்தான தானதன தானதன தானதன ...... தனதான ......... பாடல் ......... வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள் கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய ...... லிடுமாதர் சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல் சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர் சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ...... னுழலாமற் சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள் வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ...... புரிவாயே சிங்கார ரூபமயில் வாகனந மோநமென கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ...... விருதோதை சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென கங்காள வேணிகுரு வானவந மோநமென திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ...... மணிமார்பா எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய ... மார்பில் அணிந்துள்ள பொன்மாலையுடன் உயர்ந்த மார்பகங்களும் அசைய, கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள்புரள ... மலர்க் கொத்துக்கள் நிறைந்த மாலை அணிந்த கூந்தலும் மணிமாலையும் தோளில் புரண்டு அசைய, வண்காதில் ஓலைகதிர் போலவொளி வீச ... வளமான காதில் காதணி சூரிய ஒளி போன்ற ஒளியை வீச, இதழ் மலர்போல ... உதடுகள் குமுத மலர் போல் விளங்க, மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள் ... மேகத்தில் தோன்றும் வானவில் போன்ற நெற்றி, வாளையும் வேலையும் போன்ற கண்கள், இவற்றுடன் கொஞ்சார மோககிளி யாகநகை பேசி ... கொஞ்சுதல் மிக்க ஆசைக் கிளி போன்று சிரித்துப் பேசி, உற வந்தாரை வாரும் இரு(ம்) நீர் உறவென ... நெருங்கி வந்தவர்களை வாரும், இங்கே இரும், நீர் நமக்கு உறவினர் ஆயிற்றே, என்றெல்லாம் ஆசைமயல் இடுமாதர் ... ஆசை மயக்கத்தை ஊட்டுகின்ற பொது மாதர்கள், சங்காளர் சூதுகொலைகாரர்குடி கேடர் ... கூடிக் களிப்பவர்கள், சூதாடிகள், கொலையும் செய்யும் குணத்தினர், குடியைக் கெடுப்பவர்கள், சுழல் சிங்கார தோளர் பண ஆசையுளர் சாதியிலர் சண்டாளர் ... திரிகின்றவர்கள், அலங்காரத் தோளினர், பண ஆசையுள்ளவர்கள், சாதிபேதம் கவனிக்காது பலருடனும் கூடுபவர், இழிகுலத்தவர், சீசியவர் மாயவலையோடு அடியென்உழலாமல் ... சீ, சீ, இத்தகையோரது மாயவலையில் அடியேன் சிக்கி அலையாமல், சங்கோதை நாதமொடு கூடி ... யோகவழியில் கிடைக்கும் தசநாதங்களாகிய* ஓசையை அனுபவித்து அதனோடு கலந்து, வெகு மாயையிருள் வெந்தோட ... மிக்க மாயையாம் இருள் வெந்து அழிந்து போக, மூலஅழல் வீச உபதேசமது தண்காதிலோதி ... மூலாக்கினி வீசிட, உபதேசத்தை என் குளிர்ந்த காதில் ஓதி, இரு பாதமலர் சேரஅருள் புரிவாயே ... உன் இரண்டு பாதமலரைச் சேரும்படியான திருவருளைத் தந்தருள்க. சிங்கார ரூபமயில் வாகனநமோநமென ... அலங்கார உருவத்தனே, மயில் வாகனனே, போற்றி, போற்றி, என்று கந்தாகுமாரசிவ தேசிகநமோநமென ... கந்தனே, குமரனே, குருநாதனே, போற்றி, போற்றி, என்று சிந்தூர பார்வதி சுதாகரநமோநமென ... குங்குமம் அணிந்த பார்வதியின் பிள்ளையாய் அமைந்தவனே போற்றி, போற்றி, என்று விருதோதை சிந்தான சோதிகதிர் வேலவநமோநமென ... வெற்றிச் சின்னங்களின் ஓசைகள் கடல் போல முழங்க ஜோதி ரூபம் கொண்ட வேலாயுதனே போற்றி, போற்றி, என்று கங்காள வேணிகுருவானவ நமோநமென ... எலும்பு மாலைகளை அணிந்தவரும், ஜடாமுடி உடையவருமான சிவபிரானுக்கு குருநாதன் ஆனவனே போற்றி, போற்றி, என்று முழங்கவும், திண்சூரர் ஆழிமலை தூள்பட வை வேலைவிடு முருகோனே ... வலிமை மிக்க சூரன் முதலியவரையும், கடலையும், கிரெளஞ்ச மலையையும் பொடியாகும்படி கூரிய வேலைச் செலுத்திய முருகனே. இங்கீத வேதபிரமாவை விழ மோதி ... இனிமை வாய்ந்த வேதம் பயின்ற பிரமன் விழும்படியாக மோதியும், ஒரு பெண்காதலோடு வன மேவி வளிநாயகியை ... ஒப்பற்ற பெண்ணாகிய வள்ளிமேல் காதலோடு அவள் வசித்த காட்டிற்குச் சென்று அந்த வள்ளிநாயகியின் இன்பான தேனிரச மார்முலைவிடாதகர மணிமார்பா ... இன்பம் நிறைந்த, தேனைப் போல் இனிமையான மார்பினைவிட்டு நீங்காத கரதலமும் அழகிய மார்பும் உடையவனே, எண் தோளர் காதல்கொடு காதல்கறியேபருகு ... எட்டுத் தோள்களை உடைய சிவபிரான் ஆசையுடனே பிள்ளைக்கறியை உண்ணப்புகுந்த** செங்காடு மேவிபிரகாசமயில் மேலழகொடு ... திருச்செங்காட்டங்குடி*** என்னும் தலத்தைச் சார்ந்து, ஒளிவீசும் மயில் மீது அழகோடு அமர்ந்து, என்காதல் மாலைமுடி ஆறுமுகவா ... எனது ஆசையால் எழுந்த இந்தத் தமிழ் மாலையைப் புனைந்தருளும் ஆறுமுகனே, அமரர் பெருமாளே. ... தேவர்களின் பெருமாளே. |
* சங்கோதை நாதம் - யோகிகள் உணரும் பத்து நாதங்கள் பின்வருமாறு: கிண்கிணி, சிலம்பு, மணி, சங்கம், யாழ், தாளம், வேய்ங்குழல், பேரி, மத்தளம், முகில்). |
** சிவபிரான் திருச்செங்காட்டங்குடியில் இருந்த சிறுத்தொண்டரின் சிவபக்தியைச் சோதிக்கக் கருதி, ஒரு சிவவிரதியர் போல வந்து பிள்ளைக்கறி கேட்க, தம் ஒரே மகன் சீராளனைக் கறி செய்தளித்தார். இறுதியில் சிவபிரான் தரிசனம் தந்து சீராளனை உயிர்ப்பித்து, சிறுத்தொண்டரையும் அவரது மனைவியையும், குழந்தையையும் வாழ்த்திய புராணம் இங்கு குறிப்பிடப்படுகிறது - பெரிய புராணம். |
*** திருச்செங்காட்டங்குடி நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 6 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.965 pg 2.966 pg 2.967 pg 2.968 pg 2.969 pg 2.970 WIKI_urai Song number: 817 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 813 - vangkAra mArbilaNi (thiruchchengkAttangkudi) vangAra mArbil aNi thAroduyar kOdasaiya kondhAra mAlai kuzhal Aramodu thOL puraLa vaN kAdhil Olai kadhirpOla oLi veesa idhazh ...... malar pOla manjAdu chApanudhal vAL anaiya vEl vizhigaL konjAra mOha kiLiyAga nagai pEsi uRa vandhArai vArumiru neeruRaven Asai mayal ...... idu mAdhar sangALar sUdhu kolaikArar kudi kEdar suzhal singAra thOLar paNa Asai uLar jAathi ilar sandALar cheechi avar mAya valaiyOd adiyen ...... uzhalAmal sangOdhai nAdhamodu kUdi vegu mAyai iruL vendhOda mUla azhal veesa upadhEsam adhu thaN kAdhil Odhi irupAdha malar sEra aruL ...... purivAyE singAra rUpa mayil vAhana namO namena kandhA kumAra siva dhEsika namO namena sindhUra pArvathi sudhAkara namO namena ...... virudhOdhai sindhAna jOthi kadhir vElava namO namena gangALa vENi guruvAnava namO namena thiN sUra rAzhimalai thUL pada vaivElai vidu ...... murugOnE ingeetha vEdha biramAvai vizha mOdhi oru peN kAdhalOdu vana mEvi vaLi nAyakiyai inbAna thEni rasa mAr mulai vidAdhakara ...... maNi mArbA eNthOLar kAdhal kodu kAdhal kaRiyE parugu sengkAdu mEvi pirakAsa mayil mEl azhagod en kAdhal mAlai mudi ARumugavA amarar ...... perumALE. ......... Meaning ......... vangAra mArbil aNi thAroduyar kOdasaiya: The golden chains on the chest heaving along with their large bosoms; kondhAra mAlai kuzhal Aramodu thOL puraLa: garlands made of flower bunches on their hair rolling over their shoulders; vaN kAdhil Olai kadhirpOla oLi veesa: the studs on their fleshy ears glinting like the sun's rays; idhazh malar pOla: their reddish lips like the kumudam flowers; manjAdu chApanudhal vAL anaiya vEl vizhigaL: their foreheads shining like the rainbow against the clouds; their eyes sharp like the sword and the spear; konjAra mOha kiLiyAga nagai pEsi: their lisping romantic words sounding like the parrot, they speak with gleeful grin; uRavandhArai vArumiru neeruRavena: drawing the men closer to them by saying "Come on in; please be seated; you are closely related to me" - asai mayal idu mAdhar: these are the whores who provoke them into lustful delusion; sangALar sUdhu kolaikArar kudi kEdar: these are cut-throats; gamblers; murderers; destroyers of families; suzhal singAra thOLar paNa Asai uLar jAathi ilar sandALar: women loitering around with sensuous shoulders; covetous after money, indulging indiscriminately in carnal pleasure; and they come from the basest lineage. cheechi avar mAya valaiyOd adiyen uzhalAmal: Oh no, I do not want to suffer being snared in their tricky nets. sangOdhai nAdhamodu kUdi: I want to listen to and merge with the dasanAthams* (ten sounds) that could be discerned only by Yogis; vegu mAyai iruL vendhOda: burning and driving away the delusory darkness, mUla azhal veesa upadhEsam adhu thaN kAdhil Odhi: the primordial flame will spread everywhere when You preach into my cool ears, irupAdha malar sEra aruL purivAyE: blessing me to attain Your two hallowed flowery feet! singAra rUpa mayil vAhana namO namena: Saying "Oh handsome one, You mount the Peacock, I bow to You, I bow to You"; kandhA kumAra siva dhEsika namO namena: saying "Oh KandhA, KumarA, Oh Master of Lord SivA, I bow to You, I bow to You"; sindhUra pArvathi sudhAkara namO namena: saying "Oh Son of PArvathi, who wears the reddish vermilion on Her forehead, I bow to You, I bow to You" - virudhOdhai sindhAna jOthi kadhir vElava namO namena: saying "Oh Lord with the sparkling Spear, whose triumphs are hailed with such a noise as the waves of the seas, I bow to You, I bow to You"; gangALa vENi guruvAnava namO namena: and saying "You are the Master of SivA who wears in His tresses a garland of skulls, I bow to You, I bow to You" - (amid these cheers and prayers,) thiN sUra rAzhimalai thUL pada vaivElai vidu murugOnE: Oh MurugA, You hurled the Spear from Your hand to destroy the strong demon, SUran, the seas and Mount Krouncha, shattering them to pieces! ingeetha vEdha biramAvai vizha mOdhi: BrahmA, who had nicely mastered the VEdAs, was knocked down by You. oru peN kAdhalOdu vana mEvi: Falling in love with the matchless girl, VaLLi, You went to the forest vaLi nAyakiyai inbAna thEni rasa mAr mulai vidAdhakara maNi mArbA: and never took Your hands off her sweet bosom, Oh Lord, with a hallowed chest! eNthOLar kAdhal kodu kAdhal kaRiyE parugu: The eight-shouldered Lord (SivA) once came with a desire to devour child's flesh with relish** in this place, called, sengkAdu mEvi pirakAsa mayil mEl azhagod: ThiruchchengkAdu, where You are seated magnificently, on the bright peacock; en kAdhal mAlai mudi ARumugavA: Oh Six-faced, kindly wear the poetic garland of my love on Your tresses! amarar perumALE.: You are the Lord of the Celestials, Oh Great One! |
* sangOdhai nAdham - Ten Sounds discerned by Yogis: kiNkiNi (beaded anklet), chilambu (anklet), maNi (bronze bell), sangam (conch shell), yAzh (a string instrument like veeNa), thaLam (cymbals), vEynkuzhal (flute), bEri (drum), maththaLam (percussion instrument) and mukil (thunder). |
** Lord SivA came in the disguise of a Saivite sage to ThiruchchengkAttankudi to test the devotion of ChiRuththoNdar. He sought the offering of the meat of SeerALan, the little child of ChiRuththoNdar who readily fulfilled His wish. In the end, SivA appeared in His true form, resurrected the child and blessed the parents and the child - Periya PurANam. |
*** ThiruchchengkAttangkudi - also known as ThiruchchengkAdu - is 6 miles southeast of Nannilam Railway Station. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |