திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 793 இரக்கும் அவர்க்கு (திருவிடைக்கழி) Thiruppugazh 793 irakkumavarkku (thiruvidaikkazhi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் ...... தனதான ......... பாடல் ......... இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற் றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் ...... புலவோரென் றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட் டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் ...... றியல்மாதர் குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப் பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் ...... திடுமானின் குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக் குறித்திருபொற் கழற்புணையைத் ...... தருவாயே அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக் கலக்கணறக் குலக்கிரிபொட் ...... டெழவாரி அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத் தனைச்சிறையிட் டிடைக்கழியிற் ...... பயில்வோனே கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக் கழைத்தரளத் தினைத்தினையிற் ...... குறுவாளைக் கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக் கயத்தொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற எனக்கு ... யாசிப்பவர்களுக்கு மிக்க இரக்கம் கொண்டு கொடுப்பன என்பது கனவிலும் இல்லை என்று சொல்லும்படியான எனக்கு, இயலுக்கு இசைக்கு எதிர் எப் புலவோர் என்று எடுத்து முடித் தடக் கை முடித்து இரட்டை உடுத்து இலைச்சினை இட்டு ... இயற்றமிழிலோ, இசைத்தமிழிலோ எதிர் நிற்கக் கூடிய எந்தப் புலவர் உள்ளார் என்று மமதையுடன் பாடல்கள் அமைத்து, தலையையும் பெரிய கைகளையும் அலங்கரித்து, ஆடம்பரமான அரை ஆடை, மேல் ஆடைகளை உடுத்து, முத்திரை மோதிரம் அணிந்து, அடைப்பை இடப் ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் குரக்கு முகத்தினைக் குழலைப் பனிப் பிறை ஒப்பு எனப் புயல் ஒப்பு எனக் குறுகி ... ஒருவர் வெற்றிலைப் பை ஏந்தி வர, பெரிய தலைவனின் ஆடம்பரங்களை மேற்கொண்டு, அங்கு வந்து பொருந்திய மாதர்களின் குரங்கு போன்ற முகத்தை குளிர்ந்த நிலவுக்கு ஒப்பென்றும், கூந்தலை மேகத்துக்கு ஒப்பென்றும் சொல்லி, அணைந்து, கலைக்குள் மறைத்திடு மானின் குளப்பு அடியில் சளப்பம் இடும் இப் பவக் கடலைக் கடக்க இனிக் குறித்து இரு பொன் கழல் புணையைத் தருவாயே ... ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மானின் குளம்படி போன்ற பெண்குறியில் துன்பப்படும் பிறப்பு என்ற கடலை நான் தாண்டி உய்ய, இனி அடியேனாகிய என்னைக் கண் பார்தது, உனது அழகிய திருவடி என்னும் தெப்பத்தைத் தந்தருளுக. அரக்கர் அடல் கடக்க அமர்க் களத்து அடையப் புடைத்து உலகுக்கு அலக்கண் அறக் குலக் கிரி பொட்டு எழ ... அசுரர்களின் வலிமையைத் தொலைக்க, போர்க் களத்தில் நன்றாக அலைத்து அடித்து உலகின் துன்பம் நீங்க, உயரிய கிரெளஞ்ச மலை பொடிபட்டு உதிர, வாரி அனைத்தும் வறப்புறச் சுரர் கற்பகப் புரியில் புகக் கமலத்தனைச் சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே ... எல்லாக் கடல்களும் வற்றிப் போக, தேவர்கள் கற்பக லோகமாகிய பொன்னுலகில் குடியேற, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனைச் சிறையில் அடைத்து, திருவிடைக்கழி* என்னும் தலத்தில் பொருந்தி இருப்பவனே, கரக் கரடக் களிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணிக் கழைத் தரளத்தினைத் தினையில் குறுவாளை ... துதிக்கையையும், மதநீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, தேர்ந்து எடுக்கப்பட்ட ரத்தினங்களையும் மூங்கில் முத்தையும் தினை குத்துவது போல இடித்து விளையாடுபவளான வள்ளியை, கணிக் குறவக் குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வரக் கயத்தொடு கைப் பிடித்த மணப் பெருமாளே. ... வேங்கை மரங்கள் உள்ள குறிஞ்சி மலை நில ஊரில் வில்லை ஏந்தும் குறவர்களுக்கு வெட்கம் உண்டாகும்படி, கணபதியாகிய யானையின் உதவியோடு கைப்பிடித்த மணவாளப் பெருமாளே. |
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது. இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.917 pg 2.918 pg 2.919 pg 2.920 WIKI_urai Song number: 797 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 793 - irakkum avarkku (thiruvidaikkazhi) irakkumavark kirakkamikuth thaLippanasop panaththilumat Renakkiyaluk kisaikkethirep ...... pulavOren Reduththumudith thadakkaimudith thirattaiyuduth thilacchinaiyit tadaippaiyidap prapuththuvamut ...... RiyalmAthar kurakkumukath thinaikkuzhalaip panippiRaiyop penappuyalop penakkuRukik kalaikkuLmaRaith ...... thidumAnin kuLappadiyiR chaLappadumip pavakkadalaik kadakkainik kuRiththirupoR kazhaRpuNaiyaith ...... tharuvAyE arakkaradaR kadakkaamark kaLaththadaiyap pudaiththulakuk kalakkaNaRak kulakkiripot ...... tezhavAri anaiththumvaRap puRacchurarkaR pakappuriyiR pukakkamalath thanaicchiRaiyit tidaikkazhiyiR ...... payilvOnE karakkaradak kaLitRumarup pulakkaiyiniR kozhiththamaNik kazhaiththaraLath thinaiththinaiyiR ...... kuRuvALaik kaNikkuRavak kuRicchiyiniR chilaikkuRavark kilacchaivarak kayaththodukaip pidiththamaNap ...... perumALE. ......... Meaning ......... irakkum avarkku irakkam mikuththu aLippana soppanaththilum atRa enakku: I am a miser who never compassionately offers, even in the dream, any alms to the seekers; iyalukku isaikku ethir ep pulavOr enRu eduththu mudith thadak kai mudiththu irattai uduththu ilaicchinai ittu: I have been arrogantly composing poems bragging that there is no poet who could compete with me in literature or music of Tamil language; I adorned my big head and large hands, wearing classy attire around my waist and fancy clothings over my chest and putting on a ring bearing the sovereign seal in my finger; adaippai idap prapuththuvam utRu iyal mAthar kurakku mukaththinaik kuzhalaip panip piRai oppu enap puyal oppu enak kuRuki: with a maid following me carrying a spittoon for the betel-leaf that I chew to be spewed out, I carried on pompously like a big leader; I compared the faces of some of the monkey-like women who surrounded me to the cool moon, describing their hair as the dark cloud and then hugged them; kalaikkuL maRaiththidu mAnin kuLappu adiyil saLappam idum ip pavak kadalaik kadakka inik kuRiththu iru pon kazhal puNaiyaith tharuvAyE: in order that I cross the miserable sea of birth in which I hanker after the female genitals, concealed in their attire, that look like the hoof-mark of the deer, kindly look upon me graciously and grant me the raft of Your hallowed feet, Oh Lord! arakkar adal kadakka amark kaLaththu adaiyap pudaiththu ulakukku alakkaN aRak kulak kiri pottu ezha: In order to destroy the strength of the demons, You drove them hither and thither in the battlefield and thrashed them, relieving the agony of the world, and shattered the tall mount Krouncha to pieces; vAri anaiththum vaRappuRac churar kaRpakap puriyil pukak kamalaththanaic chiRaiyittu idaikkazhiyil payilvOnE: all the seas dried up, and the celestials resettled in their golden land with kaRpaga trees; You imprisoned Brahma, who is seated on the lotus, and then settled with relish in this place, Thiruvidaikkazhi*, Oh Lord! karak karadak kaLitRu maruppu ulakkaiyinil kozhiththa maNik kazhaith tharaLaththinaith thinaiyil kuRuvALai: Feigning playfully as though she is about to grind the choicest gems and the pearls produced by the bamboos as if they were millet seeds, VaLLi selected as the pestle the ivory tusk of an elephant famous for its trunk and the mark of flow of must** on its jaws; kaNik kuRavak kuRicchiyinil silai kuRavarkku ilacchai varak kayaththodu kaip pidiththa maNap perumALE.: in the mountainous valley of KuRinji Malai where kino trees abound, the KuRavAs holding the bows were put to shame when You held the hand of that VaLLi in Yours as Her Consort, with the help of GaNapathi appearing as an elephant, Oh Great One! |
* Thiruvidaikkazhi is 17 miles southeast of MayilAduthurrai (MAyUram) - near Thirukkadaiyur. Murugan is cosily seated under a KurA tree in this place. |
** must = the juice of frenzy that flows on the jaws of the elephant, specially during the rutting season. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |