திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 792 அனல் அப்பு அரி (திருவிடைக்கழி) Thiruppugazh 792 analappuari (thiruvidaikkazhi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான ......... பாடல் ......... அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத் தடர்பொய்க் குருதிக் ...... குடில்பேணா அவலக் கவலைச் சவலைக் கலைகற் றதனிற் பொருள்சற் ...... றறியாதே குனகித் தனகிக் கனலொத் துருகிக் குலவிக் கலவிக் ...... கொடியார்தங் கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற் குலைபட் டலையக் ...... கடவேனோ தினைவித் தினநற் புனமுற் றகுறத் திருவைப் புணர்பொற் ...... புயவீரா தெளியத் தெளியப் பவளச் சடிலச் சிவனுக் கொருசொற் ...... பகர்வோனே கனகச் சிகரக் குலவெற் புருவக் கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக் கழியிற் குமரப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து ... நெருப்பு, நீர், காற்று முதலிய பஞ்ச பூதங்கள் சேர்ந்ததும், (சத்துவம், ராஜதம், தாம ம் என்ற) முக்குணங்கள் வைக்கப்பட்டதும், அடர் பொய்க் குருதிக் குடில் பேணா ... நிரம்பப் பொய்யானதும், ரத்தம் கூடியதுமான இந்தக் குடிசையாகிய உடலை விரும்பி, அவலக் கவலைச் சவலைக் கலை கற்று ... பயனற்றதும், கவலைகளுக்கு இடமானதும், மனக் குழப்பம் தருவதுமான பல நூல்களைக் கற்று, அதனில் பொருள் சற்று அறியாதே ... அந்நூல்களில் உள்ள பொருளைக் கொஞ்சமும் அறியாமல், குனகித் தனகிக் கனல் ஒத்து உருகிக் குலவிக் கலவி ... கொஞ்சிப் பேசியும், உள்ளம் களித்தும், நெருப்பில் பட்ட மெழுகு போல் உருகியும், நெருங்கி உறவாடிக் கூடியும் பசப்புகின்ற கொடியார் தம் கொடுமைக் கடுமைக் குவளைக் கடையில் குலை பட்டு அலையக் கடவேனோ ... கொடி போன்ற பெண்களின் கொடுமையிலும், கடுமையிலும், குவளை மலர் போன்ற கண்களின் ஓரப்பார்வையிலும் நிலை தடுமாறி நான் அலைச்சல் உறுவேனோ? தினை வித்தின நல் புனம் உற்ற குறத் திருவைப் புணர் பொற் புய வீரா ... தினை விதைக்கப்பட்ட நல்ல புனக்கொல்லையில் இருந்த குறப்பெண்ணான வள்ளியை அணைகின்ற அழகிய தோள்களை உடைய வீரனே, தெளியத் தெளியப் பவளச் சடிலச் சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே ... தெள்ளத் தெளியும்படி ஒப்பற்ற பிரணவத்தை செந்நிறமான சடையை உடைய சிவ பெருமானுக்கு உபதேசித்தவனே, கனகச் சிகரக் குல வெற்பு உருவக் கறுவிப் பொரு கைக் கதிர் வேலா ... தங்க மயமான சிகரங்களை உடைய சிறந்த கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படிக் கோபித்துச் சண்டை செய்த ஒளி வீசும் வேலைக் கையில் ஏந்தியவனே, கழியைக் கிழியக் கயல் தத்தும் இடைக்கழியில் குமரப் பெருமாளே. ... கடலின் உப்பு நீர்ப் பரப்பு கிழியும்படி கயல் மீன்கள் தாவிக் குதிக்கும் திருவிடைக்கழி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே. |
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது. இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.915 pg 2.916 pg 2.917 pg 2.918 WIKI_urai Song number: 796 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 792 - anal appu ari (thiruvidaikkazhi) analap paripuk kakuNath rayamvaith thadarpoyk kuruthik ...... kudilpENA avalak kavalaic cavalaik kalaikat RathaniR poruLsat ...... RaRiyAthE kunakith thanakik kanaloth thurukik kulavik kalavik ...... kodiyArthang kodumaik kadumaik kuvaLaik kadaiyiR kulaipat talaiyak ...... kadavEnO thinaivith thinanaR punamut RakuRath thiruvaip puNarpoR ...... puyaveerA theLiyath theLiyap pavaLac cadilac sivanuk korusoR ...... pakarvOnE kanakac cikarak kulaveR puruvak kaRuvip porukaik ...... kathirvElA kazhiyaik kizhiyak kayalthath thumidaik kazhiyiR kumarap ...... perumALE. ......... Meaning ......... anal appu ari pukka kuNa thrayam vaiththu: Consisting of the five elements (namely, fire, water, air, earth and cosmos) and the three attributes (namely, sathvam - tranquility, rAjasam - aggressiveness and thAmasam - lethargy) adar poyk kuruthik kudil pENA: and filled up with falsehood and blood, is this cottage, the body; in order to nourish this body, avalak kavalaic cavalaik kalai katRu: learning many useless texts which were responsible for my miseries, worries and confusion, athanil poruL satRu aRiyAthE: never knowing the meaning of those texts in the least, kunakith thanakik kanal oththu urukik kulavik kalavi: (indulging in the company of whores who were) tantalising, elated, melting like wax in fire and flirting in close relationship; kodiyAr tham kodumaik kadumaik kuvaLaik kadaiyil kulai pattu alaiyak kadavEnO: am I to roam about losing my balance due to the ill-treatment and harshness of those creeper-like women, falling victim to their fleeting look from the corner of their lily-like eyes? thinai viththina nal punam utRa kuRath thiruvaip puNar poR puya veerA: VaLLi, the damsel of the KuRavAs, lived in the fertile field where millet seeds were planted; You hugged her with Your hallowed shoulders, Oh valorous One! theLiyath theLiyap pavaLac cadilac civanukku oru sol pakarvOnE: In a crystal clear manner, You preached the matchless PraNava ManthrA to Lord SivA of reddish matted hair! kanakac cikarak kula veRpu uruvak kaRuvip poru kaik kathir vElA: The famous mountain, Krouncha, with its golden peaks, was pierced during the war when You angrily wielded the spear from Your hand! kazhiyaik kizhiyak kayal thaththum idaikkazhiyil kumarap perumALE.: The salty mass of backwater from the sea is pierced by the kayal fish jumping about in this place called Thiruvidaikkazhi*, which is Your abode, Oh KumarA, the Great One! |
* Thiruvidaikkazhi is 17 miles southeast of MayilAduthurrai (MAyUram) - near Thirukkadaiyur. Murugan is cosily seated under a KurA tree in this place. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |