திருப்புகழ் 782 மாலினால் எடுத்த  (வைத்தீசுரன் கோயில்)
Thiruppugazh 782 mAlinAleduththa  (vaiththeeswaran kOyil)
Thiruppugazh - 782 mAlinAleduththa - vaiththeeswarankOyilSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தான தத்த தந்த தான தான தத்த தந்த
     தான தான தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
     மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய

மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
     வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல்

வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
     வீடு தாப ரித்த அன்பர் ...... கணமூடே

மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
     வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே

காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
     கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே

காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
     காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா

சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
     சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
     சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாலினாலெடுத்த கந்தல் ... ஆசை என்ற ஒன்றினால் உருவெடுத்த,
துளைகள் உள்ள இந்த உடம்பு,

சோறினால் வளர்த்த பொந்தி ... சோறு கொண்டு வளர்க்கப்படும்
இந்த சரீரம்,

மாறி யாடெடுத்தசிந்தை ... மாறி மாறி எண்ணம் கொள்ளும் இந்த
மனம்,

அநியாய மாயையாலெடுத்து மங்கினேன் ... இவையெல்லாம்
அநியாயமான பிரபஞ்ச மயக்கத்தால் எடுத்தவனாக நான் வாட்டம்
உறுகின்றேன்.

ஐயாஎ னக்கிரங்கி வாரையா ... ஐயனே, எனக்கு இரக்கப்பட்டு
வந்தருள்வாய் ஐயா,

இனிப்பி றந்து இறவாமல் ... இனிப் பிறப்பதும் இறப்பதும் இல்லாமல்,

வேலினால் வினைக்கணங்கள் தூளதா எரித்து ... உன்
வேலாயுதத்தால் என் வினைக்கூட்டங்களை தூளாகும்படி எரித்து,

உன்றன் வீடு தா ... உனது மோக்ஷ வீட்டைத் தந்தருள்க.

பரித்த அன்பர் கணமூடே ... அன்பு நிறைந்த உன் அடியார்
திருக்கூட்டத்தில்

மேவி யானுனைப்பொல் சிந்தையாக வேகளித்து ... யானும்
கலந்து, உன்னைப் போல பரிசுத்த உள்ளம் பெறவே, மகிழ்ச்சி கொள்ளும்

கந்த வேளெ யாமெனப்ப ரிந்து அருள்வாயே ... கந்த வேளே
நமக்கு உற்ற துணையாகும் என்றிருக்க பரிந்து அருள்வாயாக.

காலினாலெனப்ப ரந்த சூரர் மாள ... காற்றிலே பரந்ததுபோலப்
பரவியிருந்த சூரர்கள் இறக்கும்படி

வெற்றி கொண்ட கால பாநு ... ஜயம் கொண்ட, யமன் போன்ற
வலிமையும், சூரியன் போன்று பேரொளியும் அமைந்த

சத்தி யங்கை முருகோனே ... சக்திவேலை அழகிய கையிலே
கொண்ட முருகனே,

காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரைப்புணர்ந்த ...
மன்மதனது பாணம் வருத்தினதால், கணக்கில்லாத மாதர்களைக் கலந்த*

காளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா ... திருமாலாகிய
ரிஷபத்தின்** மேல் ஏறிய தலைவன், எம் தந்தை சிவன் அருளிய பாலனே,

சேலை நேர்விழிக்குறம்பெணாசை தோளுறப்புணர்ந்து ... சேல்
மீனைப் போன்ற கண்ணையுடைய குறப்பெண் வள்ளியை ஆசையுடன்
அவள் தோள் பொருந்தச் சேர்ந்து உறைபவனே,

சீரை யோது பத்தரன்பிலுறைவோனே ... உன் புகழை ஓதும்
பக்தர்களின் அன்பில் வீற்றிருப்பவனே,

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக ... தேவர்களும், பெண்டிரும்,
சித்தர்களும், அடியார்களும் சென்று வணங்கும்

வேளுருக்கு உகந்த ... புள்ளிருக்கும் வேளூர் ஆகிய வைத்தீசுரன்
கோயில் என்னும் தலத்தை உகந்த பெருமாளே,

சேவல் கேது சுற்று உகந்த பெருமாளே. ... சேவற்கொடி
சுற்றியிருக்க மகிழும் பெருமாளே.


* கண்ணபிரான் நரகாசுர வதை செய்துப் பின் கொண்டுசென்ற மந்தரமலையின்
சிகரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தேவ, கந்தர்வ, சித்த கன்னிகைகள்
பதினாயிரம் பேரையும் மணந்து கொண்டு, கண்ணன் துவாரகையில் வாழ்ந்தான்
என விஷ்ணு புராணம் கூறுகிறது.


** திரிபுர சம்ஹாரத்துக்கு சிவன் எழுந்த தேர் அச்சு அறுந்து விழுந்த போது,
தேர் நிலை கலங்க, திருமால் ரிஷப உருவத்தில் சிவபிரானைத் தாங்கினார்
- சிவ புராணம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.889  pg 2.890  pg 2.891  pg 2.892 
 WIKI_urai Song number: 786 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 782 - mAlinAl eduththa (vaitheeswaran kOyil)

mAli nAle duththa kanthal sORi nAlva Larththa ponthi
     mARi yAde duththasi nthai ...... yaniyAya

mAyai yAle duththu mangi nEnai yAe nakki rangi
     vArai yAyi nippi Ranthu ...... iRavAmal

vEli nAlvi naikka NangkaL thULa thAe riththu unRan
     veedu thApa riththa anpar ...... kaNamUdE

mEvi yAnu naippol sinthai yAka vEka Liththu kantha
     vELe yAme nappa rinthu ...... aruLvAyE

kAli nAle nappa rantha sUrar mALa vetRi koNda
     kAla pAnu saththi yangkai ...... murukOnE

kAma pANa matta nantha kOdi mAtha raippu Narntha
     kALai yERu karththa nenthai ...... yaruLbAlA

sElai nErvi zhikku Rampe NAsai thOLu Rappu Narnthu
     seerai yOthu paththa ranpi ...... luRaivOnE

thEvar mAthar siththar thoNdar Eka vELu rukku kantha
     sEval kEthu sutRu kantha ...... perumALE.

......... Meaning .........

mAli nAle duththa kanthal: This body is nothing but a tattered piece of cloth with holes, made out of desire;

sORi nAlva Larththa ponthi: this body is built up by cooked rice;

mARi yAde duththasi nthai: the mind keeps on vacillating with so many thoughts;

aniyAya mAyai yAle duththu mangi nEn: all these (the body, the mind and thoughts) I acquired in this world due to unfair delusion, and I am deteriorating day by day.

aiyAe nakki rangi vArai yA: Oh Lord, will you please take pity and come down to see me?

yi nippi Ranthu iRavAmal: Let me not go through the cycle of birth and death;

vEli nAlvi naikka NangkaL thULa thAe riththu: for that, please shoot Your spear to destroy the mass of my bad deeds

unRan veedu thA: and grant me Your Kingdom of blissful liberation!

pariththa anpar kaNamUdE mEvi: I should mingle with the crowd of all Your kind devotees.

yAn unaippol sinthai yAka vE kaLiththu: My mind should become as pure as Yourself and rejoice

kantha vELe yAmenappa rinthu aruLvAyE: concluding that Lord KandhA is the only solace for me; for that, You will have to bestow Your grace on me!

kAli nAle napparantha sUrar mALa: The demons, who had spread as if blown all over by the wind, died;

vetRi koNda kAla pAnu saththi yangkai murukOnE: the victory was due to the Sakthi VEL (Spear of Energy), which was fierce like the Death-God and dazzling like the sun. You held it in Your lovely hand, Oh MurugA,

kAma pANa mattu anantha kOdi mAtha raippuNarntha: He (Krishna) was struck by the flowery arrows of Manmathan (Love God)* and wedded thousands of women;

kALai yERu karththa nenthai yaruLbAlA: He, as Vishnu, took the form of a Bull** on whom mounted our Lord SivA; and You are that SivA's child!

sElai nErvi zhikkuRampeN Asai thOLu RappuNarnthu: Her eye is like a fish; She is the damsel of the KuRavAs; You fell in love with that VaLLi and hugged her shoulders!

seerai yOthu paththa ranpi luRaivOnE: You dwell in the love of Your devotees who praise Your glory!

thEvar mAthar siththar thoNdar Eka vELu rukku kantha: The celestials, the women, the saints and the devotees all flock towards PuLLirukku VeLUr (Vaiththeeswaran KOyil), which is Your favourite place!

sEval kEthu sutRu kantha perumALE.: You relish Your staff of the Rooster, Oh Great One!


* When Krishna killed NarakAsura, He took away with Him the Mount of MantharA on whose peak were imprisoned thousands of celestial and gandharva women. Krishna kept His promise of wedding them all and eventually, ruled the Kingdom of Dwaraka - Vishnu PurANam.


** When Lord SivA was preparing to invade Thripuram, His chariot broke down. At that time, Vishnu took the form of Rishabha (Bull) and offered Himself as the vehicle for SivA to mount on - Siva PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 782 mAlinAl eduththa - vaiththeeswaran kOyil

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]