பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/890

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்தீசுரண் கோயில்) திருப்புகழ் உரை 331 நாடகப்புனம் (அகம்நாடு புனம்)-நீ மனத்தில் நாடி (விரும்பி)ச் சென்ற தினைப் புனத்தில் (அல்லது) நாடு-நீ தேடிச் சென்ற அகம்-புனம்-மலைப்புனம்-மலை வள்ளிமலையில் (தினைப் புனத்தில்) காவல் ருந்த சுக மோகனத்தி ( னை மயக்கின்வள்), மெல்லிய தோளை உடையவள், § அழகிய வள்ளி நாயகிக்இன்து = பாடல்களைப் பாடி நாள்தோறும் அ பரணங்கள் புனைபவனே (அணிவித்து அழகு பார்ப்பவனே)! ானம் என்னும் மலையில் மகிழ்ந்து விளையாடுபவர், தையல் நாயகி என்னும் திருநாமமுடைய தேவியை நல்ல தமது பாகத்திற் கொண்டவர், (அக்கு ருத்ராக்ஷமாலை அல்லது எலும்பு மாலையை அணிந்துள்ள தலைவராம் சிவபிரான் ம்ெச்ச வந்து விளையாடும் ப்ெருமாள்ே! முத்தம் அருள்-முத்தம் அவருக்குத் தந்தருளும் பெருமாளே! அல்லது உத்தமர் உள் பெருமாளே-உத்த்ம்ர்களின் உள்ளத்தே .ே பெருமாளே! (ஏணி ஏற விட்டிடுவர் செயலாமோ) 786. ஆசையே ஒரு உருவாகி அமைந்த கந்தல் (கந்தை) சோறுகொண்டு வளர்க்கப்படும் (பொந்தி) சரீரம், மாறி மாறி எண்ணங்கொள்ளும் உள்ளம், இவைதமை அநியாயமான மாயையால் (பிரபஞ்ச மயக்கத்தால்) எடுத்தவனாகி வாட்டம் உறுகின்றேன், ஐயனே! எனக்கு இரங்கி வந்தருளுக ஐயனே! இனிப் பிறப்பதும் இறப்பதும் இல்லாமல் (உனது திருக்கை) வேலினால் (எனது) வினைக் கூட்டங்களைத் து.ாளாம்படி எரிசெய்து (உனது) மோகூடி வீட்டைத் தந்தருளுக; (பரித்த) பரிந்த அன்பு நிறைந்த அடியார் கூட்டத்திலே - tf மாயா ப்ரபஞ்ச மயக்கத்தி லேவிழுந்தே யோயா சனனம் ஒழித்திலேன் பூரணமே" - பட்டி பூரண 90. # வாரையா - வாரும் ஐயா - என்பதன் மரூஉ XX வேல்தான் வினைகளைத் தொலைக்கும்: "வினையோட விடுங் கதிர்வேல்" - கந்தரநுபூதி 0. "வினை எறியும் வேல்" - திருப்புகழ் 1200.